India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் எந்த பக்கம் திருப்பினாலும் பணப்பட்டுவாடா ஜோராக நடப்பதாக அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பாஜகவினர் ₹500, காங்., கட்சியினர் ₹200 வாக்காளர்களுக்கு கொடுத்து வருகின்றனர். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. பணப்பட்டுவாடா அதிகரித்துள்ளதால், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், தேர்தலை புறக்கணிப்பேன் என கூறியுள்ளார்.
மக்களின் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மக்கள் 100% வாக்களிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறிய அவர், தமிழ்நாட்டில் மட்டுமே மிகவும் அமைதியாக தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். மேலும், மக்கள் அனைவரும் தவறால் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
‘விசில் போடு’ பாடலை சிலர் தவறாகப் புரிந்து கொள்வதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சிலர் இந்தப் பாடலை அரசியல் உடன் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். ஆனால், இது ஒரு வீடியோ கேம் பார்ட்டி அவ்வளவு தான். புது மிஷன் ஒன்றிற்கு அனைவரையும் வரவேற்கும் விதமான பாடல் தான் இது. முதலில் ‘சல்யூட்’ என்று தான் எழுதினேன். ஆனால், அது சரியாக பொருந்தவில்லை எனத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.19ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அன்று அனைத்து கடைகளும் இயங்கும் என சொல்லப்பட்ட நிலையில், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மார்க்கெட், சந்தைகள் இயங்காது என சொல்லப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கையாக தேர்தலுக்கு முதல்நாளே காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதனிடையே ஓபிஎஸ்-ஐ ஆதரித்து நேற்று ஜெ.பி.நட்டாவின் பிரசாரத்தின் போது ராமநாதபுரம் பாஜக மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கும், ஓபிஎஸ் தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, பாஜகவினரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
தருமபுரி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த இபிஎஸ், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தவரை பாமக 2ஆவது இடத்தில் இருந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்த பின் 5ஆம் இடத்திற்கு சென்றுவிட்டது என்று விமர்சித்தார். அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொண்டி இருப்பார் அன்புமணி, மக்களுக்காக அல்ல, பதவி வேண்டும் என்பதற்காக என சாடிய அவர், INDIA கூட்டணியால் ஒருபோதும் மத்தியில் ஆட்சியமைக்க முடியாது என்றார்.
நடிகர் தனுஷ் உடன் இணையப்போவதாக ‘பியார் பிரேமா காதல்’ பட இயக்குநர் இலன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், மதுரையை மையமாகக் கொண்டு ஒரு கதையை எழுதியுள்ளேன். இந்தக் கதையை தனுஷிடம் கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கும் அவருக்கும் கதை மீது அதிக நம்பிக்கை உள்ளது. இது பெரிய பட்ஜெட் படம் என்பதால், இருவரும் சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
தமிழ் மொழி மீது பாசம் இருப்பது போல் பிரதமர் மோடி வேஷம் போடுகிறாரென மஜக தலைவர் தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார். தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.74 கோடி ஒதுக்கிய மோடி, பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு ரூ.1,487 கோடி ஒதுக்கியுள்ளார். இது தான் தமிழ் மீது மோடி காட்டும் அக்கறையா என வினவியுள்ளார்.
விலைவாசி உயர்வை மிகப் பெரிய பிரச்னையாக கருதுவதாக மேற்கு இந்தியாவில் வசிக்கும் 22% மக்கள் தெரிவித்துள்ளனர். டைம்ஸ் நவ் – ETG ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய சர்வே முடிவுகளில், தங்களது 2வது மிகப் பெரிய பிரச்னை ஹிந்துத்துவா என 21% பேரும், வேலைவாய்ப்பின்மை என 16% பேரும், தேசியவாதம் என 15% பேரும், வளர்ச்சியின்மை என 14% பேரும் தெரிவித்துள்ளனர். மேலும், 7% பேர் ஊழலை பிரச்னையாக குறிப்பிட்டுள்ளனர்.
KKR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், ஜோஸ் பட்லர் ஒற்றை ஆளாக போராடியுள்ளார். 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு கடைசி 6 ஓவர்களுக்கு 96 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஒவ்வொரு ஓவரிலும், 17, 17, 16, 18, 19, 9 என ரன்கள் குவித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் பட்லர். கடைசி வரை களத்தில் நின்று வெற்றி கண்ட அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.