India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் தமிழ்நாட்டிற்கு வருவதால் மற்றக் கட்சிகளுக்குப் பயம் ஏற்பட்டுள்ளதாகத் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதைச் செலுத்திய அவர், வெற்றி பெற்றால் யார் தலைமை வகிப்பார் என்று கூடச் சொல்ல முடியாத நிலையில், I.N.D.I.A கூட்டணி உள்ளதாகச் சாடினார். மேலும், நம் நாட்டை யார் பலம் வாய்ந்த நாடாக மாற்றுவார் என்பதற்கான தேர்தல் இது எனவும் கூறினார்.
மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.19ஆம் தேதி ( வெள்ளி), சனி, ஞாயிறு எனத் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து நெல்லைக்கு ₹2500 முதல் ₹3000 வரையும், கோவை, மதுரைக்கு ₹2,000 வரையும், திருச்சிக்கு ₹1,500 முதல் ₹2,000 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் உரிமையை எக்காலத்திலும் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மேகதாது குறித்துப் பேசினாலும், பேசாவிட்டாலும் நீதிமன்ற ஆணைப்படி கர்நாடகா நீர் வழங்க வேண்டும் என்றும், தண்ணீர் வராமல் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்தார். முன்னதாக, I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் எனக் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்.
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவால் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் அவர், தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
தமிழகத்தில் ஏப்.19ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, இல்லையா என்பதை முடிவு செய்யக் கூடியத் தேர்தல் என்றும், மதம், சாதி கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ, உங்கள் ஓட்டு தான் வலிமையான ஆயுதம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
2024 ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு மூலம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, லோயர் டிவிஷனல் கிளார்க், ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டென்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் என மொத்தம் 3,712 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <
நடிகர் விவேக்கின் நினைவு நாளை முன்னிட்டு, ‘வைபவ் 27’ படக்குழுவினர் மரக்கன்று நட்டுள்ளனர். நடிகர் என்பதை கடந்து, அப்துல் கலாமின் கோரிக்கையை ஏற்று மரக்கன்று நட்டு பூமியை பசுமையாக மாற்றும் பணியில் விவேக் ஈடுபட்டு வந்தார். அதனால் தான் அவர் ‘சின்ன கலைவாணர்’ என அழைக்கப்பட்டார். அவர் மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னையில் 611, மதுரையில் 511, தேனியில் 381 என தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான சாவடிகள் மற்றும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படும் இடங்களில் இன்று மாலை போலீசார் – துணை இராணுவப் படையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
அனைவருடன் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி என்ற மந்திரத்தைப் பின்பற்றும் கட்சி பாஜக என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அசாமில் பேசிய அவர், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறினார். 2014இல் நம்பிக்கையையும், 2019இல் உறுதியான உணர்வையும் கொண்டு வந்ததாக கூறிய அவர், 2024இல் உத்தரவாதத்தை கொண்டு வருகிறேன், இது ‘மோடியின் கேரண்டி’ என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் தூக்கமில்லை; இந்தத் தேர்தல் சுயமரியாதைக்காரர்களுக்கும், இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கு இடையே நடக்கும் போர் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். ஒருவேளை திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை எல்லாம் கேட்டிருந்தால் என்ன ஆவது? எனக் கிண்டல் செய்த அவர், ரோடு ஷோ செல்லும் மோடியை மக்கள் ரோட்டுக்குத்தான் அனுப்பப் போகிறார்கள் என்று கடுமையாகச் சாடினார்.
Sorry, no posts matched your criteria.