News April 17, 2024

2553 மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்கள்

image

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள தற்காலிக மருத்துவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 2553 மருத்துவருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் (MBBS) முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்கள், <>mrb.tn.gov.in<<>> என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹56,100-1,77,500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

News April 17, 2024

பாஜக ஆட்சியில் மொபைல் கட்டணம் குறைவு

image

பாஜக ஆட்சியில் மொபைல் ரீசார்ஜ் கட்டணம் குறைவாக இருப்பதாக மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். திரிபுராவில் பிரசாரம் செய்த அவர், பாஜக ஆட்சியில் ரீசார்ஜ் கட்டணம் ரூ.400 – ரூ.500ஆக உள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4,000 – ரூ.5,000க்கு குறையாமல் வரும் என்றார். வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் வாக்குகளுக்காக மட்டுமே பயன்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரே கொள்கை ‘கொள்ளை’ மட்டுமே என்றார்.

News April 17, 2024

ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஆட்சி மாற்றமே தீர்வு

image

அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது ஒன்றே தீர்வு என வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தின் பகைவர்களை, தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம் என சூளுரைத்துள்ளார்.

News April 17, 2024

சத்தீஸ்கரில் போலி என்கவுன்டர்கள்

image

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நேற்று நடந்த தாக்குதலில் 29 நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் நக்சலைட்டுகளுக்கு எதிராகத் தங்கள் அரசு திறம்பட நடவடிக்கை எடுத்து வந்ததாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் கூறியுள்ளார். மேலும், தற்போது மாநிலத்தில் போலி என்கவுன்டர்கள் நடப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

News April 17, 2024

மக்களவைத் தேர்தலும் திமுக பெற்ற வாக்குகளும்!

image

1962ஆம் ஆண்டு தனது முதல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக 18.64% (7) வாக்குகள் பெற்றது. தொடர்ந்து மக்களவைத் தேர்தல் வாரியாக *1967 – 51.79% (25)* 1971 -55.61% (23)*1977-37.84% (1)*1980-55.89% (16)*1984-37.04% (2)*1989-33.78% (0)*1991-27.64% (0)*1996-54.96% (17)*1998-42.72% (8)*1999-46.41% (12)*2004 -57.40% (16)* 2009-42.54% (18)*2014-23.16% (0)*2019-32.76% (24) வாக்குகளைப் பெற்றிருந்தது.

News April 17, 2024

I.N.D.I.A கூட்டணிக்கு இயக்குநர் ஞானவேல் ஆதரவு

image

மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ‘ஜெய்பீம்’, ‘வேட்டையன்’ படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளின் வாக்குறுதிகள், சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கையை அளிக்கின்றன. வருங்கால தலைமுறையைக் காப்பது நமது தார்மீகக் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News April 17, 2024

விராட் கோலி தான் என்னுடைய உத்வேகம்

image

UPSC தேர்வில் வெற்றி பெற்றது குறித்து டோனூரு அனன்யா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்திய அளவில் 3ஆம் இடம்பிடித்துள்ள அவர், விராட் கோலி தான் எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவர் எதையும் முழு அர்ப்பணிப்போடு செய்து முடிப்பார். அவரைத் தான் என் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டேன். முடிவு என்னவாக இருந்தாலும், கடைசி வரை போராட வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் எனத் தெரிவித்தார்.

News April 17, 2024

ரோடு ஷோ என்ற பெயரில் இறுதி யாத்திரை

image

ஜூன் 4க்குப் பிறகு தமிழ்நாட்டில் பாஜக இருக்காது என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது என அண்ணாமலை கூறுகிறார். அதிமுக தொடங்கி 52 ஆண்டுகள் ஆகிறது. அதிமுக இருக்காது என்று சொல்லும் அண்ணாமலை, தேர்தலுக்குப் பிறகு பாஜக இருக்குமா என்பதை முதலில் பார்க்கட்டும் என்றார். மேலும், பாஜகவினர் ரோடு ஷோ என்ற பெயரில் இறுதி யாத்திரை நடத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News April 17, 2024

இன்று, நாளை மழை

image

இன்றும், நாளையும் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்களில் மிதமான மழையும், ஏப்.19ஆம் தேதி உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் அதிகபட்ச வெப்பநிலை வடதமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 3-5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். ஏப்.21,22 ஆகிய தேதிகளில் உள் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளது.

News April 17, 2024

IPL: அதிக முறை தோல்வி கண்ட அணிகள்

image

▶டெல்லி கேபிட்டல்ஸ் – 127 ▶பஞ்சாப் கிங்ஸ் – 124 ▶ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 120 ▶கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 114 ▶மும்பை இந்தியன்ஸ் – 105 ▶ராஜஸ்தான் ராயல்ஸ் – 100 ▶சென்னை சூப்பர் கிங்ஸ் – 91 ▶சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 84 ▶டெக்கான் சார்ஜர்ஸ் – 46 ▶புனே வாரியர்ஸ் – 33

error: Content is protected !!