India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மிஸ்டர் மனைவி’ தொடரின் புதிய கதாநாயகியாக தேப்ஜானி மொடக் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கதாநாயகி அஞ்சலி வேடத்தில் நடித்து வந்த ஷபானா சமீபத்தில் விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில், ‘ராசாத்தி’ தொடரில் சந்தியா வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த தேப்ஜானி, தற்போது அஞ்சலி வேடத்தில் நடிக்க உள்ளதாக சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். பரப்புரை ஓய்ந்த நிலையில் பேட்டி அளித்த அவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாளை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் என்றார். பாதுகாப்புப் படையினர் நாளை தேவையான இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஜப்பான் அரசு வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளை சேர்த்துள்ளது. 2023 -24ஆம் நிதியாண்டில் கரடிகள் தாக்கியதில் 219 பேர் பாதிக்கப்பட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளை தவிர, பிற கரடிகளை இலையுதிர் காலத்தில் வேட்டையாட அரசு அனுமதி அளித்துள்ளது. கருப்பு கரடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதால் இந்த பட்டியலில் அவை சேர்க்கப்படவில்லை.
தேர்தல் விளம்பரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் என்ற உத்தரவு நகலை நாளை வழங்கும்படி தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற விளம்பரத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால் ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணையில், புதிய நடைமுறைப்படி உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடுக்க வேண்டும் என ஆணையம் வாதிட்டது.
மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை தமிழகம் முழுவதும் ஓய்ந்துள்ளது. இனி ஜனநாயகக் கடமையை மக்கள்தான் ஆற்ற வேண்டும். ஒவ்வொருவரின் வாக்கும் ஒவ்வொரு ஆயுதம் ஆகும். அதனைக் கொண்டு மக்களாகிய நீங்கள்தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க இருக்கிறீர்கள். தவறாமல் வாக்களியுங்கள். சரியான வேட்பாளரைக் கண்டறிந்து வாக்களியுங்கள். உங்களது வாக்குகளை விற்று விடாதீர்கள்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் பிடிக்கும். அரை கப் ஐஸ்கிரீமில் 137 கலோரிகள், 7 கிராம் கொழுப்பு, 16 கிராம் கார்போஹைட்ரேட், 14 கிராம் இனிப்பு இருக்கிறது. இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆசைப்பட்டால், 3 வாரங்களுக்கு ஒரு முறை அரை கப் ஐஸ்கிரீம் சாப்பிடலாம். அதுவும், பாதாம், முந்திரி, பிஸ்தா கலந்த ஐஸ்கிரீம்களைச் சாப்பிட வேண்டாம்.
தமிழ்நாட்டில் தீவிரமாக நடைபெற்று வந்த பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக இன்றுடன் பரப்புரை நிறைவடைந்திருக்கிறது. இப்போது முதல் வாக்குப்பதிவு முடியும் வரை எந்தக் கட்சியும் சுயேச்சை வேட்பாளர்களும் பரப்புரை செய்வதற்கு அனுமதி கிடையாது.
மோடியை மீண்டும் பிரதமராக்குவது மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போடுவதற்கு சமம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக் கட்சி அறிக்கை போல் இருப்பதாக மோடி கூறுகிறார். அவர் மனதில் எவ்வளவு பாசிச எண்ணம் இருக்கிறது என்பதை அறிய இதுவே சான்று என்று கூறிய அவர், மோடியின் படம் இந்த மக்களவைத் தேர்தலில் ரிலீஸ் ஆகாமலேயே தோல்வி அடையும் என்றும் தெரிவித்தார்.
அண்டை மாநிலங்களுக்கு திராவிட மாடல் ஆட்சி எடுத்துக்காட்டாக உள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தமிழகத்தை மதிக்கக் கூடிய பிரதமரை வரும் தேர்தலில் நாம் தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழ்நாடு மற்றும் தமிழக மக்கள் என்றாலே பிரதமர் மோடிக்கு பிடிப்பது இல்லை என அவர் குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது எனப் பிரதமர் நினைப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுவரை எத்தனையோ பிரதமர்களை இந்தியா பார்த்துள்ளது. ஆனால், மோடி போல வசூல் ராஜாவை இதுவரை பார்த்ததில்லை என்ற அவர், ரெய்டு என்ற பெயரில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பாஜக வசூல் செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், ஊழல் கறை படிந்தவர்களை மோடி சுத்தமாக்கி விடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.