India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இளைஞர்கள் மத்தியில் பங்குச்சந்தை மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதை மெய்ப்பிக்கும் விதமாக, மொத்த டீமேட் கணக்குகள் 15.14 கோடியாக உயர்ந்துள்ளது. 2022 – 23ஆம் நிதியாண்டில் 2.67 கோடி புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 3.69 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 31.3 இலட்சம் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்கு பூத் ஸ்லிப் அவசியமில்லை. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். பூத் நம்பர், வாக்காளர் நம்பர் ஆகியவற்றை அறிய பூத் ஸ்லிப் தேவைப்பட்டால் அதனை ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். <
மேற்கு வங்க ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் அதிரடியான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் கூச் பெஹர் பகுதிக்கு ஆளுநர் ஆனந்த போஸ், வரும் 18, 19ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும், வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாலும் பயணத்தை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையம் ஆளுநருக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
தன்னுடன் ஜோடியாக நடிக்க சிலர் யோசிப்பதாக விஜய் டிவி பிரபலம் புகழ் கண் கலங்கியுள்ளார். ஹீரோயினாக நடிக்கிறீர்களா எனக் கேட்டு இன்ஸ்டாவில் மெசேஜ் அனுப்பினாலும், அதை படித்துவிட்டு யாரும் ரிப்ளை கூட செய்வதில்லை என வேதனை தெரிவித்துள்ள அவர், தன்னுடன் நடிக்க விருப்பம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, கதையையாவது கேட்கலாம் என ஆதங்கத்தை கொட்டினார் . இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் வடக்கு உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அசௌகரியத்தை உணருவார்கள் என்றும், எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2021ஆம் ஆண்டு பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறையை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்தது. தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பையில் விளையாடும் இந்தியக் கிரிக்கெட் அணியின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ரோஹித் ஷர்மா, ஜெய்ஸ்வால், சூர்யகுமார், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஜடேஜா, ஷிவம் டுபே, அக்சர் பட்டேல், குல்தீப், சாஹல், பிஷ்னாய், பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப், ஆவேஷ் கான் ஆகியோர் அடங்கிய அணி விளையாடலாம் எனத் தெரிகிறது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்த முறையும் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார். மக்களவைத் தேர்தலோடு அம்மாநிலச் சட்டப்பேரவை தேர்தலும் வர உள்ளதால் பிஜு ஜனதா தளம் சார்பாகப் போட்டியிடும் 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார். ஹிஞ்சிலி மற்றும் காந்தபாஞ்சி தொகுதிகளில் நவீன் பட்நாயக் போட்டியிடுகிறார். மொத்தமுள்ள 147 தொகுதிகளில் இதுவரை 126 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேனி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை இருந்தால் கமெண்ட்டில் சொல்லுங்க.
ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அகமதாபாத் மைதானத்தில், டாஸ் வென்ற DC அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3இல் வென்றுள்ள GT அணி புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இதேபோல, 6இல் 2 வெற்றிகளை பெற்றுள்ள DC அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெல்லும்?
Sorry, no posts matched your criteria.