News May 31, 2024

யானைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்

image

* சராசரி வாழ்நாள்: 70 ஆண்டுகள்
* நாளொன்றுக்கு 16 மணி நேரம் உணவு சேகரிக்கின்றது
* ஒவ்வொரு நாளும் 140 முதல் 270 கிலோ உணவை உட்கொள்கிறது
* இவை சராசரியாக 3 மீட்டர் உயரமும், 6000 கிலோ எடையும் கொண்டவை
* யானையின் தோல் மட்டும் 3 செ.மீ. தடிமனானது
* யானையின் துதிக்கை 4000 தசைகளால் ஆனது.

News May 31, 2024

இன்று நடைபெறும் போட்டிகள்

image

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்கள் நாளையுடன் முடிவடையும் நிலையில், இன்று 3 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் அயர்லாந்து – இலங்கை, ஸ்காட்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாளை அதிகாலை 4:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் கடைசி ஆட்டத்தில் இந்தியா- வங்க தேசம் அணிகள் மோதுகின்றன.

News May 31, 2024

தமிழ்நாட்டில் இரண்டு நாள்களுக்கு கனமழை

image

தென் தமிழகத்தின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஜூன் 3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாள்களில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News May 31, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

* தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று பாடநூல்கள் அனுப்பி வைக்கப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* பாஜகவின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து தமாகா மாநில நிர்வாகி ஈரோடு கவுதமன் கட்சியில் இருந்து விலகினார்.
* 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த T20 கிரிக்கெட் வீரருக்கான ICC விருதை, சூர்யகுமார் யாதவ் வென்றுள்ளார்.

News May 31, 2024

இரண்டாம் நாள் தியானத்தை தொடர்கிறார் மோடி

image

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் தனது நேற்று மாலை 6:28 மணிக்கு தனது தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி இரவு வரை தொடர்ந்து தியானம் செய்தார். மோடி தியானத்தை தொடங்கியவுடன் அவருக்கு இளநீர் நீராகாரமாக வழங்கப்பட்டது. இன்று காலை பிரதமர் தனது இரண்டாவது நாள் தியானத்தை தொடங்குகிறார். தியானத்தைத் தொடங்கும் முன்னர் அவர், விவேகானந்தர் பாறையில் இருந்து சூரியோதயத்தைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளார்.

News May 31, 2024

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

image

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அமைப்புச் செயலாளர் RS.பாரதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சி வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

News May 31, 2024

ஒலிம்பிக் தகுதி போட்டி: இந்திய வீரர்கள் அபாரம்

image

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை தகுதிச் சுற்றுப் போட்டிகள் பாங்காக்கில் நடைபெறுகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 57கி எடைப் பிரிவில், இந்தியாவின் சச்சின் சிவாச் 5-0 என்ற கணக்கில் துருக்கி வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 92கி பிரிவில் இந்திய வீரர் சஞ்ஜீத் குமாரும், 51கி பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹாலும் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

News May 31, 2024

கடவுள் ஏன் தியானம் செய்ய வேண்டும்?

image

கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி மே 30 முதல் ஜூன் 1 வரை தியானம் செய்வது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். கடவுளாக இருக்கும் அவர் ஏன் தியானம் செய்ய வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும், அவர் தியானம் வேண்டுமானால் செய்துகொள்ளட்டும், ஆனால், அதை ஒளிபரப்பக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

News May 31, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶மே – 31 ▶வைகாசி – 18 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:00 AM – 10:00 AM வரை, 4:30 PM – 5:30 PM வரை ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM வரை, 6:30 PM – 7:30 PM வரை ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM வரை ▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM வரை ▶குளிகை: 7:30 AM – 9:00 AM வரை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்▶ திதி: நவமி ▶ பிறை: தேய்பிறை

News May 31, 2024

உகாண்டா அணி ஜெர்சியை ஐசிசி ஏன் மாற்றக் கூறியது?

image

டி20 உலகக் கோப்பைக்காக உகாண்டா கிரிக்கெட் பயன்படுத்துவதாக அறிவித்திருந்த ஜெர்சியை மாற்ற ஐசிசி பரிந்துரைத்துள்ளது. உகாண்டாவின் ஜெர்சி அவர்களின் தேசிய பறவையான பழுப்பு நாரை இடம்பெற்றிருந்தது. தோள் மற்றும் தொடைப் பகுதியில் நாரையின் இறகுகள் இடம்பெற்றிருந்ததால், ஸ்பான்சர் விளம்பரம் இடம்பெறுவதில்லை சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக ஜெர்சியை மாற்ற ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

error: Content is protected !!