News April 18, 2024

ஏப்ரல் 18 வரலாற்றில் இன்று!

image

➤உலக மரபுரிமை நாள் ➤1506 – வாடிகன் புனித பேதுரு பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ➤1883 – திரைப்பட முன்னோடி சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்த நாள். ➤1946 – அனைத்துலக நீதிமன்றம் முதல்முறை டென் ஹாக் நகரில் கூடியது. ➤1955 – இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மறைந்த நாள். ➤1958 – பண்டா-செல்வா ஒப்பந்தத்தை சிங்கள அரசு ஒருதலைப்பட்சமாக மீறியது. ➤1980 – இங்கிலாந்திடமிருந்து சிம்பாப்வே விடுதலை அடைந்தது.

News April 18, 2024

பாஜகவுக்கு 180 இடங்கள் கூட கிடைக்காது

image

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்வோமென பாஜக அதிக மதிப்பீடு செய்வதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் விமர்சித்துள்ளார். மும்பையில் பேசிய அவர், கள நிலவரமும் மக்களின் மனநிலையும் வேறு விதமாக உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு இல்லாமல் தேர்தலை சுமூகமாக நடத்தினால், பாஜகவுக்கு 180 இடங்கள் கூட கிடைக்காது எனக் கூறினார்.

News April 18, 2024

சரித்திரம் படைத்த டெல்லி கேபிடல்ஸ்

image

GT அணிக்கு எதிரான போட்டியில் 8.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் DC அணி வென்றது. இதன் மூலம் 67 பந்துகள் மீதமிருந்த நிலையில் 92 ரன்கள் எடுத்து இந்த சீசனில் பந்துகள் அடிப்படையில், DC அணி வெற்றியைப் பதிவு செய்தது. 17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் DC பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். முன்னதாக 2022இல் PBKSக்கு எதிராக 57 பந்துகள் மீதமிருந்த நிலையில் DC அணி வெற்றி பெற்றது.

News April 18, 2024

ரஜினியிடம் அட்வைஸ் கேட்ட வசந்த் ரவி

image

‘தரமணி’ படத்தில் நடிக்க முடிவு செய்தபோது, ரஜினி சாரிடம் அட்வைஸ் கேட்டேன் என்று நடிகர் வசந்த் ரவி
கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “ஜெயிலர் படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. அடுத்து வெப்பன், இந்திரா ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. ‘ஜெயிலர் 2’ படத்தின் கதை என்ன? எப்படி இருக்கும்? என்பது எனக்கும் தெரியாது” எனக் கூறியுள்ளார்.

News April 18, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 5
▶குறள்:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
▶பொருள்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை மற்றும் தீமை ஆகிய இரு வினைகளையும் ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

News April 18, 2024

59 லட்சத்தைத் தொட்ட ஏர்டெல் 5G வாடிக்கையாளர்கள்

image

தமிழ்நாட்டில் ஏர்டெல் நிறுவனத்தின் 5G சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தைத் தொட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஏப். 16 நிலவரப்படி, நிறுவனத்தின் 5G சேவை அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நெட்வொர்க் கட்டமைப்பை விரிவுபடுத்தியது போன்ற திட்டமிட்ட பணிகளால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News April 18, 2024

அசாமில் 126 தொகுதிகளில் போட்டியிடும் மம்தா கட்சி

image

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அசாமின் 126 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் அசாமில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை ஆதரித்து சில்சாரில் பிரசாரம் செய்த அவர், நாங்கள் அனைத்து மதங்களையும் நேசிக்கிறோம். மத அடிப்படையில் மக்களை
பிளவுபடுத்தும் அரசியலை வெறுக்கிறோம் எனக் கூறினார்.

News April 18, 2024

ஆட்டநாயகன் விருதினை வென்ற ரிஷப் பண்ட்

image

தன்னை நோக்கி எழுந்த விமர்சனங்களை எல்லாம் பொய்யாக்கிய DC அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். GTக்கு எதிரான 32ஆவது லீக் போட்டியில், அசத்திய DC அணியின் வெற்றிக்கு விக்கெட் கீப்பராக 2 கேட்ச் & 2 ஸ்டம்பிங் செய்த அவர், 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து மேட்சை ஃபினிஷிங் செய்தார். 2019க்குப் பின் 5 ஆண்டுகள் கழித்து 7ஆவது முறையாக அவர் ஆட்டநாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

News April 18, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஏப்ரல் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 18, 2024

வீட்டு காவலுக்கு மாற்றப்பட்ட ஆங் சான் சூகி

image

மியான்மரில் ஏற்பட்டுள்ள வெப்ப அலை காரணமாக சிறையில் தனிமைச் சிறையில் இருந்த ஆங் சான் சூகியை (78) வீட்டு காவலுக்கு அந்நாட்டு ராணுவம் மாற்றியுள்ளது. ஆசியாவின் ‘அமைதிப் புறா’ என்றழைக்கப்படும் அவர், மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய காரணத்தால் அரசுக்கு எதிரான கிளர்ச்சியைத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

error: Content is protected !!