India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*1991இல் வேத பாடசாலையை ஜெயலலிதா அமைத்தார். *1993இல் சென்னையில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் குண்டுவைத்து தகர்க்கப்பட்ட போது, அரசாங்க நிதியில் அதனை கட்டிக்கொடுக்க அவர் முன்வந்தார். *2002இல் மதமாற்ற தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். *2003இல் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று பொதுமேடையிலேயே வலியுறுத்தினார். *2012இல் ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வலியுறுத்தினார்.
மு.க.ஸ்டாலின் ஆட்சியில், மின் தடையில்லா மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதில் இருந்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய மின் திட்டங்கள் அனைத்தையும் பட்டியலிட்டிருக்கும் அரசு, 2.5.24 அன்று உச்சபட்ச மின் தேவையான 20,830 மெகா வாட் மின்சாரத்தை வழங்கி திராவிட மாடல் அரசு சாதனை படைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக ஹாலிவுட் முன்னணி நடிகை ஜெனிஃபர் லோபஸ் தெரிவித்துள்ளார். அதனைக் கொண்டு, நமது முகங்களை மற்றவர்கள் பயன்படுத்துவது ஆபத்தானது என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, கடந்த வாரம் தனது குரல் திருடப்பட்டிருப்பதாக நடிகரை ஸ்கார்லெட் ஜான்சன் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தகிக்கும் வெயிலின் காரணமாக பள்ளிகளின் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். “கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும்.” என ராமதாஸ் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜிக்கு வரும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன், திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளதாக, திருமண அழைப்பிதழில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
வட மாநிலங்களில் வீசி வந்த வெப்ப அலை, தற்போது தமிழகத்தையும் தாக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநின்றவூர் அருகே உயிரிழந்த பள்ளி நண்பனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற +2 மாணவன் சக்தி, வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதில் என்ன தவறு என பாஜக நிர்வாகி விஜயதாரணி கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமரின் தியானத்திற்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய அவர், தனியாரின் பராமரிப்பில் இருக்கும் இடத்தில்தான் அவர் தியானத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், அவர் தியானம் தானே செய்கிறார் பரப்புரை செய்யவில்லையே எனவும் அவர் கூறினார்.
1999 ஆம் ஆண்டில் புரொபேஷன் எஸ்.ஐ.,யாக காவல்துறை பணியில் சேர்ந்த வெள்ளைத்துரையை ஏ.டி.எஸ்.பி.,யாக குறுகிய காலத்தில் உயர் பதவிகளை என்கவுன்டர் திறமையால் பெற்றவர். திருச்சியில் தொடங்கி திருப்பாச்சேத்தி வரை கடந்த 25 ஆண்டுகளில் அயோத்தி குப்பம் வீரமணி உள்ளிட்ட 12 உயிர்களை அவரது துப்பாக்கி பறித்திருக்கிறது. வீரப்பன் வழக்கில் டபுள் ப்ரோமோஷன் வாங்கிய வெள்ளத்துரையை தெரியாத ரவுடிகளே இருக்க முடியாது.
₹10 ரூபாய் தாள்களை எப்போது கடைசியாக பார்த்தீர்கள்? அவற்றின் புழக்கம் பொது வெளியில் கணிசமாகக் குறைந்துள்ளதை உணர முடிகிறது. ஆனால், அதற்கான காரணம் எதையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி அதிகளவில் வெளியிடுவதாகவும் அவையே புழக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நீங்கள் எப்போது 10 ரூபாய் தாளை கடைசியாகப் பார்த்தீர்கள்?
வால்மார்ட்டின் கட்டுப்பாட்டில் உள்ள முன்னணி ஆன்லைன் பேமெண்ட் நிறுவனமான PhonePay, 6 வகை பாதுகாப்பான கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதன் பயனர்கள் மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், வாகனம், வீடு/சொத்து & கல்விக் கடன்களை விரைவாகப் பெறலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வங்கிகள் & வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுடன் ஃபோன் பே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.