India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாய்ப்பாலை விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதனையும் மீறி விற்பனை நடைபெறுவது ஏன்? தாய்ப்பால் அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயரும் என்றும், புரதச் சத்து அதிகரிக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர். ஆனால், இதில் உண்மையில்லை என்று உணவுப் பாதுகாப்புத்துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. மாறாக, குழந்தைகள் அல்லாதோர் தாய்ப்பால் அருந்துவதால் பாக்டீரியா தொற்று அபாயம்தான் ஏற்படுகிறது.
சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட தாய்ப்பால் பாட்டில்களை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புரத மாத்திரைகள் விற்பதற்காக அனுமதி பெற்ற முத்தையா என்பவர், தாய்ப்பால் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சிறிய சிறிய 50 மில்லி பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால் விற்கப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தையாவின் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜூன் 11 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார அளவிலான பயிற்சியை ஜூன் 24 முதல் 29ஆம் தேதி வரை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ‘எண்ணும் எழுத்தும்’ முறை என்பது விளையாட்டு முறையை பின்பற்றி கற்பித்தல் ஆகும்.
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் 45 மணி நேர தியானத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நேரத்தில், அவர் நீராகாரம் மட்டுமே அருந்துவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்று கன்னியாகுமரிக்கு வந்திறங்கியவுடன் இளநீர் அருந்திய மோடி, தியானத்தை தொடங்கினார். தொடர்ந்து இன்று காலை சூரிய உதயத்தை வணங்கிவிட்டு திராட்சை பழரசம் அருந்தினார். நாளை வரை அவர் நீராகாரம் மட்டுமே அருந்தவிருக்கிறார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை 11 நிர்வாக மாவட்டங்களாகப் பிரித்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியல் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றப் பின்னணி இல்லாதவர்களாகத் தேர்ந்தெடுத்து நியமித்திருக்கிறாராம் விஜய்.
ஆபாச வீடியோ புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா மீது சிறப்பு விசாரணைக் குழு மேலும் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. நள்ளிரவில் கைது செய்யப்பட்ட அவர், இன்னும் சற்றுநேரத்தில் மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட உள்ளார். அதன் பின், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் நாடு முழுவதும் நடந்த சோதனையில், கணக்கில் வராத ₹1,100 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது கடந்த 2019 தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ₹390 கோடியை காட்டிலும் 182% அதிகமாகும். அதிகபட்சமாக டெல்லி, கர்நாடகாவில் ₹200 கோடியும், தமிழகத்தில் ₹150 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகளில் சுமார் ₹78,213 கோடி பணம் கேட்பாரற்று கிடப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக யாராலும் உரிமை கோரப்படாத டெபாசிட் பணத்தின் கணக்கு ஆகும். கடந்த ஆண்டு ₹62,225ஆக இருந்த கேட்பாரற்ற தொகை, இந்த ஆண்டு ₹78,213ஆக 26% அதிகரித்துள்ளது. மக்கள், வங்கிகளில் வைத்திருக்கும் கணக்கு குறித்து நெருங்கியவரிடம் தெரியப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கை இருந்தது; ஒருபோதும் மத நம்பிக்கை இருந்ததில்லை என அவரது தோழி சசிகலா ஆணித்தரமாக கூறியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணங்கள் இதோ:- *ராமர் கோயிலைக் கட்டலாம் எனக் கூறிய ஜெயலலிதா, பாபர் மசூதியை இடித்துத்தான் கோயில் கட்ட வேண்டுமென சொல்லவில்லை. *கோல்வாக்கர் உள்ளிட்ட இந்துத்துவவாதிகள் எதிர்த்த இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கினார். *பொது சிவில் சட்டத்தை எதிர்த்தார்.
யார் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என்று அண்ணாமலை மீண்டும் கூறியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணங்கள் இதோ:- *1984இல் ராஜ்ய சபா எம்பியாக இருந்த ஜெயலலிதா 370-ஐ நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். *1992இல் கரசேவை என்பது தவறான வார்த்தை அல்ல என்று ஆதரவு தெரிவித்தார். *1993இல் ராமர் கோயில் கட்ட கோரிக்கை விடுத்து கையெழுத்து இயக்கம் நடத்தினார்.
Sorry, no posts matched your criteria.