India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பதி கோயிலுக்கு கடந்த ஆண்டில் 1,031 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தங்கம் விலை அதிகரிக்கும் நிலையிலும், பக்தர்கள் அதை காணிக்கையாகத் தொடர்ந்து அளிக்கின்றனர். 2023இல் ₹773 கோடி மதிப்பிலான 1,031 கிலோ தங்கத்தை காணிக்கையாக அளித்துள்ளனர். இதுதவிர்த்து, பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ₹8,496 கோடி மதிப்பிலான 11,329 கிலோ தங்கத்தை கோயில் நிர்வாகம் முதலீடாக வைத்துள்ளது.
வாக்குப்பதிவு நாளன்று (ஏப்.19) 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், காலை 6 – மாலை 7 மணி வரை ஆதார், வாக்காளர் அட்டையைக் காண்பித்து பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம்.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்தத் தேர்தலில் 3.17 கோடி பெண்கள், 3.06 கோடி ஆண்கள், 8,467 மூன்றாம் பாலினத்தவர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 11ஆவது சுற்றில், தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவுக்கு எதிரான இப்போட்டியில், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஹிகாரு, தனது உத்திகளை சரியாகப் பயன்படுத்தி வெற்றி கண்டார். ரஷ்ய வீரருக்கு எதிரான மற்றொரு போட்டியில், விதித் குஜராத்தியும் தோல்வி அடைந்துள்ளார்.
மோசமான சில ஷாட்டுகள் தான் தோல்விக்கு காரணம் என ஷுப்மன் கில் கூறியுள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், ஆடுகளம் நன்றாகத் தான் இருந்தது. எங்கள் பேட்டிங் தான் சரி இல்லை. அதுவும் சிலரது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. 89 ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் போது, எங்கள் பவுலர்கள் 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். நிச்சயம் மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில், காங்கிரஸ் 330 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. கடந்த ஆண்டு நடந்த 5 மாநிலத் தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. அதில் காங். தெலங்கானாவில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு காங். விட்டுக் கொடுத்துள்ளது.
லாரிகள் வேலைநிறுத்தத்தால், பாரத் கேஸ் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆலைகளில் இருந்து கேஸ் நிரப்பிய சிலிண்டர்களை விநியோகஸ்தர்களுக்கும், காலி சிலிண்டர்களை ஆலைகளுக்கும் கொண்டு செல்லும் பணியில் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கான கட்டணத்தை உயர்த்தக்கோரி வேலைநிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் விநியோகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சனாதன தர்மத்தை எதிர்ப்பதில் திமுகவின் சித்தாந்தத்தையே காங்கிரசும் கடைபிடிப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சனாதன தர்மத்தை அழிக்க விரும்புவதாக திமுக தலைவர்கள் கூறுகின்றனர். அவர்களின் கருத்தை காங்கிரஸ் கண்டிக்கவில்லை. அதுபோன்ற நபர்களை ஆதரித்தால், அவர்களுக்கும் (காங்கிரஸ்) அதே சித்தாந்தம் உள்ளது என்றுதான் அர்த்தம்” என்றார்.
கையில் மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால், ரசாயனங்களைக் கொண்டு அவற்றை அழிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். இதுகுறித்து விளக்கமளித்த தேர்தல் அலுவலர், இத்தகவல் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று கூறினார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அணி, 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி, 9 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இதுவே டெல்லி அணியின் அதிவேக ரன் சேஸ் ஆகும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக ரன் சேஸ் செய்த அணிகளின் வரிசையில், 7ஆவது இடத்தைப் பிடித்தது டெல்லி.
Sorry, no posts matched your criteria.