India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.54,680க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,835க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒருகிராம் ரூ.90க்கும், கிலோ வெள்ளி ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 1.90 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குச் சாவடிகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. துணை ராணுவ படையினரும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 10,000 போலீசாரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாலத்தீவு அதிபர் முய்சு மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவில் இருந்து இந்திய படையினரை வெளியேறும்படி கூறியதால் இந்தியா உடனான நல்லுறவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 2018 முதல் நடந்த முய்சு வங்கி கணக்கு பரிவர்த்தனை அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை முய்சு மறுத்த போதிலும், விசாரணைக்கும், தகுதிநீக்கம் செய்யவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து, விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும் என்றும் பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள், வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குடியாத்தத்தில் நேற்று தேர்தல் பரப்புரையின்போது நடிகர் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மோடியின் கூட்டங்களில் நிதிஷை பாஜக புறக்கணித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டம் ஒன்றில் மோடி முன்னிலையில் பேசிய நிதிஷ், முதலில் பாஜக 4 லட்சம் சீட்டு பெறும் என்றும், பிறகு 4,000க்கும் அதிக சீட்டுகளில் வெல்லும் என்றும் கூறியிருந்தார். இது கேலிக்குள்ளான நிலையில், 16ஆம் தேதி நடந்த மோடியின் 2 கூட்டங்களில் நிதிஷ் பங்கேற்கவில்லை. இதையடுத்து பாஜக அவரை புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் ஷர்மா, இன்று தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்க உள்ளார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 250 போட்டிகளில் விளையாடியுள்ள 2ஆவது இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவராவார். எம்.எஸ்.தோனி 256 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், சிறப்பாக விளையாடி வரும் ரோஹித் ஷர்மா, இன்றைய போட்டியில் சதம் அடிப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
‘பிரேமலு’ படத்தைப் பாராட்டி, நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ நடித்த இந்தப் படம், கடந்த பிப். 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான இது, உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதுகுறித்து பதிவிட்ட நடிகை நயன்தாரா, “நல்ல படங்கள் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலைகள் வீசும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமவெளி பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாக பதிவாகும். எனவே. பொதுமக்கள் லேசான வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியவும், தலையை மறைக்க துணி, தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்தவும். அதுமட்டுமல்ல, அடிக்கடி தண்ணீர், மோர், இளநீர் அருந்தவும்.
நாளை நடைபெறவுள்ள தேர்தலில், தேர்தல் ஆணையம் அறிவித்த கீழ்காணும் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். *வாக்காளர் அட்டை * பாஸ்போர்ட் *டிரைவிங் லைசென்ஸ் *வங்கி புத்தகம் *பான் கார்டு * மத்திய தொழிலாளர் அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு *தேசிய ஊரக வேலைத் திட்ட அட்டை * மத்திய தொழிலாளர் அமைச்சக சுகாதார காப்பீடு ஸ்மார்ட் கார்டு * ஆதார்
Sorry, no posts matched your criteria.