India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து ஏப்.17, 18ஆம் தேதிகளில் நாள் ஒன்றுக்கு 2,970 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், நேற்று மட்டும் 1.48 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தொடர்ந்து, இன்று பயணம் செய்ய 46,503 பேர் தற்போது வரை முன்பதிவு செய்துள்ளனர்.
இம்பேக்ட் பிளேயர் (Impact Player) விதியில் எனக்கு உடன்பாடு இல்லை என மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். கிரிக்கெட் போட்டி என்பது 11 வீரர்களை உள்ளடக்கியதே தவிர, 12 வீரர்களை அல்ல. ரசிகர்களின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக, போட்டியின் விதிகள் மாற்றப்படுகிறது. இதனால், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல்-ரவுண்டர்கள் பந்துவீச முடியாமல் போகிறது என வருத்தம் தெரிவித்தார்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்தார். அந்தத் தேர்தலில் திமுக தோல்வியைச் சந்திக்கவே, 10 ஆண்டுகளுக்கும் மேல் பட வாய்ப்பில்லாமல் இருந்தார். இந்நிலையில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள வடிவேலு, மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்வார் எனக் கூறப்பட்டது. ஆனால், அவர் பிரசாரம் செய்யவில்லை. அவர் ஒதுங்கியிருந்தாரா, திமுக வலியுறுத்தவில்லையா என்பது தெரியவில்லை.
அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் வெளியிட்டது போல் சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்று பரவியது. அதில், விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளராக பாக்யராஜை நிறுத்தியதில் தனக்கு விருப்பம் இல்லை என இபிஎஸ்-க்கு அவர் எழுதியது போல் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த அறிக்கை போலியானது என்றும் அதனை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சி.வி.சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வேலூரில் போட்டியிடும் தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக மன்சூர் அலிகான் பரபரப்புப் புகாரை தெரிவித்துள்ளார். குடியாத்தம் சந்தையில், கட்டாயப்படுத்தி பழ ஜூஸ், மோர் கொடுத்தாங்க. அதை குடித்த உடனே மயக்கம், அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. தற்போது, விஷ முறிவு சிகிச்சைக்குப் பின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதால், இன்று பிற்பகல் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவி வகிக்கும் நிலையில், ஒருங்கிணைப்பாளராகத் தாம் பதவி வகித்ததைச் சுட்டிக்காட்டி, அக்கட்சிக்கு ஓபிஎஸ் உரிமை கோருகிறார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் நிலையில், ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் தேர்தல் பிரசாரத்தின்போது, 2 தரப்பும் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கவில்லை. இது அரசியல் ஆர்வலர்களை யோசிக்க வைத்துள்ளது.
ரிலையன்ஸின் சில்லறை விற்பனை வணிகத்தை முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானி நிர்வகிக்கிறார். இதனிடையே, பஞ்சாப், ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் 145 கடைகளை நடத்தி வரும் சில்லறை மளிகைச் சங்கிலி நிறுவனமான ‘24 செவன்’ நஷ்டத்தில் இயங்குவதால் அதனை விற்பனை செய்யும் முடிவுக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, அதன் உரிமையாளர் காட்ஃபிரே ஃபிலிப்ஸ் உடன் ரிலையன்ஸ் ரீடெய்ல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
அண்ணாமலை வெற்றிக்காக பாஜக நிர்வாகி கைவிரலை துண்டித்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட பாஜக துணைத் தலைவரான துரை ராமலிங்கம், கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அண்ணாமலை வெற்றி பெற வேண்டுமென கத்தியபடி இடதுகை ஆள்காட்டி விரலை வெட்டித் துண்டித்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நவகிரகங்களில் சுப கிரகமாகக் கருதப்படும் தட்சிணாமூர்த்தி, குருபகவனாக வணங்கப்படுகிறார். அவரை வழிபடுவதற்கு உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. அன்றைய தினம், அவரை நினைத்து இருக்கும் விரதம், குரு வார விரதமாகக் கூறப்படுகிறது. இந்த விரதம் இருந்து, மஞ்சள் நிற ஆடை அணிந்து அவரை வழிபட்டால், மற்ற கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத் தடை அகலும். குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
▶மும்பை- 5.3 ஓவர்களில் 68 vs KKR (2008) ▶கொச்சி- 7.2 ஓவர்களில் 98 vs RR (2011) ▶பஞ்சாப்- 7.5 ஓவர்களில் 68 vs DC (2017) ▶ஐதராபாத்- 8 ஓவர்களில் 69 vs RCB (2022) ▶பெங்களூரு- 8.1 ஓவர்களில் 92 vs PBKS (2018) ▶மும்பை- 8.2 ஓவர்களில் 94 vs RR (2021) ▶டெல்லி- 8.5 ஓவர்களில் 90 vs GT (2024) ▶கொல்கத்தா- 10 ஓவர்களில் 93 vs RCB (2021) ▶டெல்லி- 10.3 ஓவர்களில் 116 vs PBKS (2022)
Sorry, no posts matched your criteria.