India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘STR48’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாகத் தகவல் கசிந்துள்ளது. கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ள சிம்பு, அப்படத்திற்காக 60 நாள் கால் ஷீட் கொடுத்துள்ளார். படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்த பிறகு கமல் படப்பிடிப்பில் இணையவுள்ளார். இப்படத்தை முடித்தப் பிறகே, ‘STR48’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய மல்யுத்தச் சங்கத் தலைவராக இருந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததான புகாரில், அவர் மீது நடவடிக்கை கோரி வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பான வழக்கில் கூடுதல் விசாரணைக் கோரி பிரிஜ் பூஷன் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது ஏப்.26இல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இதனிடையே, வழக்கு விசாரணைக்காக அவர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
கடந்த 2019 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் வென்றது. பாஜக 3.66% வாக்குகளை மட்டும் பெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக தனியாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. வழக்கத்தைவிடப் பிரதமர் மோடி அதிக முறை சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். அவரின் பிரசாரம், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வெற்றி ஈட்டித் தருமா? தராதா? என்பது தெரியவில்லை.
கேரளாவின் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் விழுந்ததாக புகார் எழுந்துள்ளது. ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகளும், மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், நோட்டாவுக்கு ஒரு வாக்கும் பதிவானதால், தேர்தல் அதிகாரியிடம் காங்., கம்யூ., புகார் அளித்தன. இதுதொடர்பான வழக்கில், புகார் குறித்து விசாரிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் நாளுக்கு நாள் மின்நுகர்வு அதிகரித்து வருகிறது. இந்நேரத்தில் நாம் கண்டிப்பாக மின் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் *வீடுகளில் தேவையில்லாமல் எரியும் மின்விளக்குகளை அணைத்து வைக்கலாம் *ஏசியை 26 டிகிரியில் வைக்கலாம் *பகலில் மின் விளக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் *அலுவலகங்களில் பிரிண்டர், ஸ்கேனர் போன்ற சாதனங்களைப் பயன்பாடு இல்லாத போது அணைத்து வைக்கலாம்.
வாக்களிக்கும் உரிமை ஒரு குடிமகனின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பல இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். எனவே, அனைவரும் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, உலகம் கண்டிராத மிகப்பெரிய ஜனநாயக விழாவைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். அனைவரும் வாக்களிப்பீர்!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. அதிக அளவில் வெப்பம் இருப்பதால் குளிர்சாதனப் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு நேற்று (17.4.24) ஒரேநாளில் மின்நுகர்வு 442.74 மில்லியன் யூனிட் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. ஏப்.5இல் 441.18 மில்லியன் யூனிட் ஆக இருந்த மின் நுகர்வு நேற்றுப் புதிய உச்சத்தை எட்டியது.
டி20 உலகக் கோப்பைத் தொடர்பாக எந்தவொரு ஆலோசனையும் நடக்கவில்லை என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். உலகக் கோப்பைத் தொடரில் கோலியும், ரோஹித்தும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாகக் களமிறங்க உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தன. இதற்கு விளக்கமளித்த அவர், அப்படியொருச் சந்திப்பு நடக்கவே இல்லை. பிசிசிஐயைச் சேர்ந்தவர்கள் யாராவது கேமரா முன் வந்து பேசாத வரை, இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்தார்.
அரசியலில் எதிரெதிர்த் துருவங்களாக இருந்த பாஜக, டிடிவி தினகரனின் அமமுக 2024 தேர்தலில் ஓரணியில் போட்டியிடுகின்றன. இதேபோல், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கியவர் ஓபிஎஸ். அவர் தனது சொந்த ஊர் அமைந்துள்ள தேனி தொகுதியை டிடிவிக்கு விட்டுக் கொடுத்து ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். இதுபோல், 2024 தேர்தலானது, எதிரெதிர்த் துருவங்களாக இருந்தோரை ஓரணியில் இணைத்துள்ளது.
தொடர் விடுமுறையையொட்டிப் பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் விமானக் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவைக்கு விமானக் கட்டணம் ரூ.3,674லிருந்து (ரூ.5000க்கும் மேல் உயர்வு) ரூ.8,555 முதல் ரூ.12,716 வரை உயர்ந்துள்ளது. அதேபோல், மும்பை, டெல்லி, கொச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் கட்டணம் உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.