News April 18, 2024

அதிமுகவினர் செல்போன் ஒட்டுக்கேட்பு தொடர்கிறது

image

தமிழக உளவுத்துறை அதிமுக நிர்வாகிகளின் செல்போன்களை ஒட்டுக் கேட்பது தொடர்வதாக அக்கட்சியின் வழக்கறிஞர் இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக ₹40 கோடி செலவில் ஒரு கருவியை இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துவதாக தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறிய அவர், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் தெரிவித்தார்.

News April 18, 2024

கெஜ்ரிவால் அதிகம் இனிப்பு சாப்பிடுகிறார்

image

சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே இனிப்பு வகைகளை அதிகமாக சாப்பிடுவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் ஜாமின் கோரிய வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலம் அவர் ஜாமின் பெற முயற்சிப்பதாக அமலாக்கதுறை கூறியது. அதற்கு, மருத்துவர்களின் பரிந்துரைப்படியே உணவு உட்கொள்வதாக கெஜ்ரிவால் தரப்பு விளக்கமளித்தது.

News April 18, 2024

அன்பே வா தொடரின் நடிகருக்கு திருமணம் நடந்து முடிந்தது

image

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ தொடரின் மூலம் பிரபலமான, நடிகர் விராட்டுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்தது. மேக்கப் ஆர்டிஸ்ட் நவீனா என்பவரை காதலித்து வந்த விராட், கடந்த நவம்பரில் அவருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இந்நிலையில், சென்னை மாமல்லபுரம் பகுதியில் முக்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

News April 18, 2024

10 ஆண்டுகளில் இந்தியா மாற்றம் கண்டுள்ளது

image

இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மாற்றம் கண்டுள்ளதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக ஆட்சியில் இந்தியா மீதான மரியாதை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். எல்லைகள் தற்போது பாதுகாப்பாக உள்ளன. நக்சல், தீவிரவாதிகள் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீர் மட்டுமின்றி நாடு முழுவதும் தீவிரவாதம் அதிகரித்ததாக தெரிவித்தார்.

News April 18, 2024

செரிலாக்கில் சர்க்கரை: நெஸ்லே விளக்கம்

image

செரிலாக் மாவுப் பொருளில் சர்க்கரை சேர்க்கப்படுவது குறித்து நெஸ்லே விளக்கம் அளித்துள்ளது. அதில், குழந்தைகளுக்கான உணவுப்பொருளில் சேர்க்கும் சர்க்கரை அளவைக் கடந்த 5 ஆண்டுகளில் 30% குறைத்துள்ளோம் என்றும், வருங்காலத்தில் இது மேலும் குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தங்களது தயாரிப்புகள் பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தைத் தருமென்று நம்புவதாகவும் நெஸ்லே குறிப்பிட்டுள்ளது.

News April 18, 2024

ஐபிஎல்: அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள்

image

ஐபிஎல்லில் அதிகபட்சமாக சிஎஸ்கே வீரர் தோனி 256 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2ஆவது அதிகபட்சமாக மும்பை வீரர் ரோஹித் ஷர்மா, ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் 249 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதற்கு அடுத்து ஆர்சிபி வீரர் கோலி 244, சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா 232 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதில் ரோஹித், கார்த்திக், கோலிக்கு இந்த சீசனில் 250ஆவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.

News April 18, 2024

வாக்கு எந்திரங்களில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை

image

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் ஒரு வாக்கிற்கு 2 வாக்குகள் பாஜகவுக்குப் பதிவானதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவ்வாறு வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

News April 18, 2024

வாக்காளருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்க முடியுமா?

image

வாக்காளருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்க முடியுமா எனத் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டை ஒப்பிட்டுப் பார்க்கக்கோரித் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியது. அதற்கு பதிலளித்த ஆணையம், அது மிகப்பெரும் ஆபத்து, யாருக்கு வாக்களித்தோம் என்பது விவிபேட் திரையில் 7 வினாடிகள் தெரியும் என்றது.

News April 18, 2024

தினேஷ் கார்த்திக்கை உலகக் கோப்பையில் சேர்க்கலாம்

image

நடப்பு ஐபிஎல் தொடரில், தோனியும், தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக விளையாடி வருவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில், தோனி 20(4) ரன்களும், தினேஷ் கார்த்திக் 83(35) ரன்களும் குவித்தனர். தோனியை உலகக் கோப்பையில் விளையாட வைப்பது கடினம். ஆனால், தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைப்பது எளிது எனத் தெரிவித்தார்.

News April 18, 2024

நெஸ்லே செரிலாக்கில் சர்க்கரை சேர்ப்பு

image

நெஸ்லே நிறுவனம் குழந்தைகளுக்கான செரிலாக்கில் விதிகளுக்கு மாறாகச் சர்க்கரையை சேர்ப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடல்பருமன், பிற நோய்களைத் தடுக்க பச்சிளம் குழந்தை உணவுப் பொருளில் சர்க்கரை சேர்க்கக்கூடாது என சர்வதேச வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, இந்தியாவில் 3 கிராம் அளவு சேர்ப்பதும், வளர்ந்த நாடுகளில் சேர்ப்பதில்லை என்றும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

error: Content is protected !!