News April 18, 2024

ஏப்ரல் 20 இல் டிக்கெட் விற்பனை தொடக்கம்

image

ஐபிஎல்லில் நாளை லக்னோவில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து வரும் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே – லக்னோ அணிகள் மீண்டும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 20 ஆம் தேதி தொடங்குகிறது. காலை 10:40 மணிக்கு சிஎஸ்கே இணையதளத்தில் டிக்கெட்டுகளைப் பெறலாம்.

News April 18, 2024

கோவையில் ஜி-பே மூலம் பணப்பட்டுவாடா

image

பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெளி மாவட்ட நபர்களை வைத்து ஜி-பே மூலம் பணம் வழங்குவதாக திமுக வழக்கறிஞர் சரவணன் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த பின் பேசிய அவர், பாஜகவை சேர்ந்தவர்களிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியையும் சந்தித்துப் புகார் அளிக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

கிருஷ்ணரின் கோபியராக என்னை நினைக்கிறேன்

image

கிருஷ்ணரின் கோபியராக தன்னை நினைப்பதாக மதுரா தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பெயர் மற்றும் புகழ் பெற ஆசைப்பட்டோ, பிற காரியம் சாதிக்க வேண்டும் என்பதற்கோ தான் அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். இறைவன் கிருஷ்ணரின் கோபியராக தன்னை கருதுவதாகவும், அவருக்கு நன்கு சேவை செய்தால், அருள் தருவார் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

News April 18, 2024

ரூ.27க்கு ஆசைப்பட்டு ரூ.28,000 போச்சு

image

சண்டிகரில் ஊபர் டாக்ஸியில் பயணம் செய்த வாடிக்கையாளரிடம் ரூ.53 கட்டணத்திற்குப் பதிலாக ரூ.80 வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வாடிக்கையாளர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரிடம் கூடுதலாக ரூ.27 வசூலிக்கப்பட்டதை உறுதி செய்த நிலையில், அபராதம், இழப்பீடு மற்றும் வழக்குச் செலவுகள் என மொத்தமாக ரூ.28,000 செலுத்துமாறு ஊபர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

News April 18, 2024

ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி இரவு 7 மணி வரை நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், ஆங்காங்கே மழை பெய்வதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

News April 18, 2024

தலைமுடியை கருமையாக வைத்திருக்கச் சில டிப்ஸ்

image

*நெல்லிக்காய்ப் பொடியில் எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் பூசிச் சற்று நேரம் ஊறவைத்துக் கழுவ வேண்டும். *வெங்காயச் சாற்றைத் தலையில் ஊறவைத்துப் பின்னர் கழுவலாம். *கருவேப்பிலையை உலரவைத்துப் பொடியாக்கித் தலையில் ஊறவைத்துச் சற்று நேரம் கழித்துக் குளிக்கலாம். *தேங்காய் எண்ணெயில் எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் பூசிப் பின்பு ஷாம்பு கொண்டு அலசலாம். *செம்பருத்திப் பூ, இலையை அரைத்துப் பயன்படுத்தலாம்.

News April 18, 2024

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு தைரியமில்லை

image

கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராகுல் காந்திக்கு மீண்டும் அங்கு போட்டியிட தைரியம் இல்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். வயநாட்டில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், தோல்வி பயத்தால் அமேதியில் போட்டியிட தைரியமின்றி, ராகுல் கேரளாவில் போட்டியிடுகிறார். இருப்பினும், வயநாடு தொகுதி மக்கள் அவரை ஏற்கமாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.

News April 18, 2024

வாக்குச் சாவடியில் மலர்ந்த தாமரை

image

புதுச்சேரியில் உள்ள வாக்குச் சாவடியில் தாமரை வடிவங்களை கொண்டு நுழைவு வாயில் அலங்கரிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் தாமரை வடிவங்களை கொண்டு நுழைவு வாயில் அலங்கரிக்கப்பட்டதற்கு திமுக, அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, தேர்தல் அதிகாரிகள் அதை அகற்றியுள்ளனர்.

News April 18, 2024

பூத் ஸ்லிப் கிடைக்காதவர்கள் கவனத்திற்கு

image

தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான பூத் ஸ்லிப் இதுவரை கிடைக்காதவர்கள், <>கிளிக் <<>>இந்த இணையதள பக்கத்திற்குச் சென்று உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் உங்களது வாக்குச்சாவடி விவரம், வரிசை எண், பாக எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News April 18, 2024

நாடு திரும்புகிறார் நடிகர் விஜய்

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது 80% நிறைவடைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ரஷ்யாவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இன்றிரவு தமிழகம் திரும்ப உள்ளார் நடிகர் விஜய். இதனிடையே, படப்பிடிப்பு நிறைவடைந்ததும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!