India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சேமிப்புக் கணக்குகளை தொடங்குவதற்காக அஞ்சல் துறையுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை செலுத்த, வங்கி கணக்கு (அ) சேமிப்பு கணக்கு தேவை. வங்கிகளில் கணக்கு துவங்க பல ஆவணங்கள் கேட்கப்பட்டு இழுத்தடிப்பதாக புகார் எழுகிறது. இதனால், மாணவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்திலுள்ள 42 தொகுதிகளில் 30லிலும், ஒடிசாவில் 21 தொகுதிகளில் 18லிலும் பாஜக இம்முறை வெற்றி பெறும். தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பாஜக இந்த முறை அதிக தொகுதிகளில் வெல்லும், வாக்கு சதவீதமும் அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு, முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்துடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைவதால், புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. 3,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில், டிராவிட்டிற்கு அடுத்தபடியாக கம்பீரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
57 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பக்தியார்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். அதேபோல், பீகாரில் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மன், ஹிமாச்சல் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமல், ஹிமாச்சலில் கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் வாக்கு செலுத்தினர்.
கோடையில் தென்னிந்தியாவிலேயே அதிக மின்தேவை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் தினமும் 21,000 மெகாவாட் மின்தேவை உள்ளது. இது, ஆந்திராவில் 12,925, கர்நாடகாவில் 15,432, தெலங்கானாவில் 10,409, கேரளாவில் 4,725, புதுச்சேரியில் 450 மெகாவாட் ஆக உள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து 7,000, காற்றாலை மூலம் 4,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
பாஜகவின் 10 ஆண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, வெற்றியின் விளிம்பில் INDIA கூட்டணி நிற்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்க்க யாரும் இல்லை என்ற மமதையில் இருந்த பாஜகவுக்கு எதிராக, தங்கள் கூட்டணி அமைந்ததாகவும், மக்களுக்கு நம்பிக்கை தரும் அணியாக களத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார். இடைவிடாத பரப்புரை மூலம் கூட்டணித் தலைவர்கள் பாஜகவின் போலி பிம்பத்தை உடைத்தெறிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
மக்களவை 7ஆவது கட்டத் தேர்தலையொட்டி, எக்ஸ் பக்கத்தில் ராகுல் பதிவிட்டுள்ளார். அதில், தேர்தலில் நிலவும் ட்ரெண்டுகள் அனைத்தும் INDIA கூட்டணி அரசமைக்கும் என்பதையே காட்டுகிறது. அதன்படி ஜுன் 4இல் அமையும் INDIA கூட்டணி அரசு நாட்டுக்கு புதிய விடியலை தரும் என்று தெரிவித்துள்ளார். வெயிலை பொருட்படுத்தாது, ஜனநாயகம், அரசியலமைப்பை காக்க மக்கள் வாக்களிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடித்து, பின்னர் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் வந்து கலக்கியவர். திருமணத்திற்கு பிறகும் கைவசம் அரை டஜன் படங்களை அவர் வைத்துள்ளார். ஆர்.கண்ணன் இயக்கத்தில் காந்தாரி என்ற படத்தில் ஹன்சிகா தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தில், அவர் பழங்குடியினப் பெண்ணாக நடிக்கிறார். இதற்காக அவர் தனது தோற்றத்தை கருப்பாக மாற்றிக் கொண்டு நடித்து வருகிறார்.
சென்னையில் தொடர்ந்து 5 நாட்களாக 40.5°C
மேல் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், ஜூன் 2ஆவது வாரம் வரை வெப்பம் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பதிவாகும் வெப்பத்தை விட, உணரும் வெப்பம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வெப்பம் குறைந்தாலும், சென்னையில் குறையாது என்று கூறப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், ஜூலை மாதத்தில் ‘இந்தியன் 2’ படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இரண்டும் ஒரே தேதியில் வெளியாகுமா அல்லது வெவ்வேறு தேதிகளில் வெளியாகும் என்பது இனிமேல் தான் தெரியவரும்.
Sorry, no posts matched your criteria.