India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிலர் வீட்டை மாற்றுவதைப் போல ஒருவர் குடும்பத்தையே மாற்றியுள்ளார் என ராகுல் காந்தியை தாக்கி பேசியுள்ளார் ஸ்மிருதி இரானி. இது குறித்து பேசிய அவர், ‘அமேதி தொகுதியை பிரதிநித்துவப்படுத்தியவர், தற்போது ஒவ்வொரு முறை அறிக்கை வெளியிடும்போதும் வயநாடு என் குடும்பம் என்கிறார்’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்., கட்சியினர் அமேதி தொகுதிக்காக ஸ்மிருதி செய்த நன்மைகள் என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர்.
வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் நண்பர்கள் ஆன்லைனில் இருக்கிறார்களா? என்பதை ஏற்கெனவே அறிய முடியும். சம்பந்தப்பட்ட நபரின் சுயவிவரத்தை கிளிக் செய்யும் போது அவர்கள் ஆன்லைனில் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிந்துக் கொள்ளலாம். தற்போது வாட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வசதியின்படி, யார் சமீபத்தில் ஆன்லைனில் இருந்தார்கள் என்பதைப் பார்க்க முடியும். இந்த வசதி சோதனை முறையில் உள்ளது.
மூதாட்டி ஒருவர் தபால் ஓட்டு போட்டுவிட்டு சிறிது நேரத்திலே உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் யசோதா (83) என்ற மூதாட்டி அதிகாரிகள் முன் தபால் ஓட்டு போட்டார். பின் சிறிது நேரத்திலே மயங்கி விழுந்து உயிரிழந்தார். மரணிக்கும் தருவாயிலும் அவர் ஜனநாயகக் கடமையாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ படத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. முன்னதாக, இப்படத்தின் “விண்டேஜ் லவ்…” பாடல் வெளியாகிக் கவனம் ஈர்த்தது.
டெல்லியில் பேருந்தில் பெண் ஒருவர் பிகினி உடையில் பயணித்தச் சம்பவம் சக பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேருந்தின் கதவு அருகே நின்றபடி அந்தப் பெண் பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவருக்கும் ஆடை சுதந்திரம் இருந்தாலும், பொது வெளியில் கண்ணியமான ஆடை அணிய வேண்டியது அவசியம் என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாபில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பவுலின் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மும்பை அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங்கை தொடங்க உள்ளது. இரு அணிகளும் 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 6 தோல்வி பெற்றுள்ள நிலையில் பஞ்சாப் 8 ஆவது இடத்திலும், மும்பை 9ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
விமான நிலையத்தில் வீடியோ எடுத்த யூடியூபரை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவைச் சேர்ந்த விகாஸ் கவுடா என்ற இளைஞர் சென்னை செல்லும் விமானத்திற்கான டிக்கெட்டுடன் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். ஆனால், அவர் விமானத்தில் பயணிக்காமல் ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கி வீடியோ எடுத்துள்ளார். இதனிடையே, பல்வேறு பாதுகாப்பு விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் கட்டுமானப் பணிகளைச் சட்டவிரோதமாகத் தொடங்கியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இதுவரை மாநில அரசிடம் அனுமதி பெறவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கிய நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் இலவச சேவை அளிக்க உள்ளதாக ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது. வாக்குச் சாவடி மையங்களுக்குச் செல்லும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மக்கள் அனைவரும் 100% ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில் நாளை ஒரு நாள் இலவச சேவை என ரேபிடோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாஜக நாட்டைப் பிளவுப்படுத்த நினைப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவின் கோட்டயத்தில் பிரசாரம் செய்த அவர், ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தலைவர், ஒரே மதம் என்று பிரதமர் பேசுவதைக் கேட்கும் போது ஆச்சரியமாக இருப்பதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களை தமிழ் பேசாதே, கேரள மக்களை மலையாளம் பேசாதே என எப்படி கூற முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.