India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் வீடு திரும்பினார். மருத்துவர்களின் ஆலோசனையை மீறி அவர் தன்னைத் தானே டிஸ்சார்ஜ் செய்து கொண்டார். நேற்று காலை அவர் போட்டியிடும் வேலூர் தொகுதியில் பரப்புரை செய்து கொண்டிருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டது. குடியாத்தத்தில் முதலுதவி வழங்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டிருந்தார்.
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நீங்கள் வாக்களிக்கும் முன் உங்களது வாக்கை வேறு யாரவது செலுத்தியிருந்தால் கவலை வேண்டாம். நீங்கள் நிச்சயமாக வாக்களிக்க முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, பின்னர் அதற்குரிய (Tendered Ballot Paper) வாக்குச் சீட்டில் வாக்களிக்கலாம். உங்கள் வாக்கு தனி உறையில் வைக்கப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
நடிகர் சூர்யா – ஜோதிகா இருவரும் 18 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக இவர்கள் 2006ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், தற்போது ‘சில்லு கருப்பட்டி’ படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 2018இல் வெளியான படம் ‘கனா’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் சேர்ந்து சில நிஜ கிரிக்கெட் வீராங்கனைகளும் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் சஜனா சஜீவன். தற்போது இவருக்கு வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. டி20 தொடர் ஏப்.20 இல் தொடங்குகிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு பான் இந்தியா அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை தெலுங்குத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் ரூ.275 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் ரூ.170 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் பொறுமையாக ஆடிவரும் மும்பை வீரர் சூர்யகுமார் அரை சதம் கடந்துள்ளார். 34 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 50* ரன்கள் அடித்துள்ளார். மற்றொரு வீரர் ரோஹித் சர்மா 36* ரன்களுடன் களத்தில் உள்ளார். இஷான் கிஷன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். தற்போது வரை MI அணி 11 ஓவர்கள் முடிவில் 96/1 ரன்கள் எடுத்துள்ளது.
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை – திருச்சி இடையே மேலும் ஒரு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து இன்று (ஏப்ரல் 18) இரவு 10:05 மணிக்கு புறப்படும் ரயில் (எண்-06031) நாளை காலை 6:30 மணிக்கு திருச்சியை அடைகிறது. மறுமார்க்கத்தில் நாளை (ஏப்.19) இரவு 8:30 மணிக்கு கிளம்பும் ரயில் (எண்-06032) மறுநாள் காலை 2:45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச் சாவடியின் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பாகவே அங்கிருக்கும் வரிசையின் நிலையை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. <
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா நாளை தொடங்கவுள்ளது. முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நமது நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி, அரசியல் ஆகியவற்றை தீர்மானிப்பதில் நாளை நீங்கள் செலுத்தப் போகும் ஒற்றை வாக்கு மிகப்பெரிய பங்காற்றவுள்ளது. ஒரு விரலினைக் கொண்டு நாட்டின் தலையெழுத்தையே மாற்றலாம். நாளைய தினம் வாக்களிக்க தவற வேண்டாம்.
சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘அரண்மனை 4’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் “அச்சச்சோ…” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், ரிலீஸ் தேதி ஏப்ரல் 26ஆம் தேதியில் இருந்து மே 3ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.