News April 18, 2024

தென் மாநிலங்களில் பாஜக சிறப்பாக இருக்கும்

image

நடைபெறும் தேர்தலில் தென் மாநிலங்களில் பாஜக அதிக வெற்றியைப் பெரும் என அமித் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை தென் மாநிலங்களில் எங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும். தென் மாநில மக்கள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர் என்றார். கடந்தமுறை தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.

News April 18, 2024

ரோஹித்தின் சிக்ஸரை கொண்டாடிய பாண்டியா

image

ரோஹித் ஷர்மா – ஹர்திக் பாண்டியா இடையே மனக்கசப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வந்தாலும், இருவரும் நட்புடன் இருக்கின்றனர். இன்றைய போட்டியில் ரோஹித் சிக்ஸர் அடித்தபோது அதை (ஃபேன் பாயாக மாறி) ஹர்திக் கைதட்டி கொண்டாடினர். இதை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், பாண்டியா ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு நடந்துகொள்கிறார் என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.

News April 18, 2024

டெல்லி ஆம் ஆத்மி MLA கைது

image

டெல்லி முதல்வரும் துணை முதல்வரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், எம்.எல்.ஏ ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.எல்.ஏ அமனத்துல்லா கான், டெல்லி வக்ஃபு வாரியத் தலைவராக இருந்தபோது பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். கூடுதல் விவரங்கள் விரைவில்.

News April 18, 2024

W W W W.. மிரட்டிய மும்பை அணி

image

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் 193 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி துரத்தி வருகிறது. இந்த நிலையில், MI பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் PK வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷாம் கரன் 6, பிராப்சிம்ரன் 0, ரோஸ்ஸோ 1, லிவிங்ஸ்டன் 1 ரன்னில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். MI தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா மற்றும் கோட்ஸி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில எந்த அணி வெல்லும்?

News April 18, 2024

பின்னோக்கி நடப்பது நல்லதா?

image

பின்னோக்கி நடக்கும் ரெட்ரோ வாக்கிங்கில் நமது உடலானது முற்றிலும் வேறு மாதிரியாக தயார்படுத்திக் கொள்ளும். பின்னோக்கி நடக்கும் போது மூட்டு இணைப்பில் ஏற்படும் தாக்கம் குறைவு. புதிய செயல்முறையால் மூளை அலர்ட் ஆகும் என்பதால், பார்க்கின்சன் பாதிப்பு, பக்கவாத பாதிப்பு இருப்பவர்கள் பின்னோக்கி நடக்கலாம். இடுப்பு, முதுகு, மூட்டு, மூளை தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் மட்டும் மருத்துவர்களை ஆலோசிப்பது அவசியம்.

News April 18, 2024

சிக்கலில் நெஸ்லே நிறுவனம்

image

நெஸ்லே நிறுவனம், ஏழை நாடுகளில் விற்பனை செய்யும் பால் பொருள்கள் உள்பட குழந்தைகளுக்கான உணவில் அதிகச் சர்க்கரையைச் சேர்ப்பதாக ஆய்வறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் செர்லாக் என்ற குழந்தைகளுக்கான உணவில் ஒரு கப்பில் 3 கிராம் சர்க்கரை சேர்க்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், புகாரை விசாரிக்க FSSAI-க்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

News April 18, 2024

நாளை தமிழகத்தில் வெயில் கொளுத்தும்

image

வாக்குப்பதிவு நாளான நாளை (19.04.2024) தமிழகத்தின் வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 42 டிகிரி வரை இருக்கக்கூடும். காற்றின் ஈரப்பதம் உள் மாவட்டங்களில் 75 சதவீதமும் கடலோர மாவட்டங்களில் 85 சதவீதமும் இருக்கும் என்பதால் நாளைய தினம் மிகுந்த வெப்பமானதாகவே இருக்கும்.

News April 18, 2024

கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி

image

அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாக டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். கெஜ்ரிவால் அதிகப்படியான இனிப்புகளை சாப்பிடுவதாக, கோர்ட்டில் இன்று ED அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த அதிஷி, நீரிழிவு நோயாளியான அவர், மருத்துவர்கள் அறிவுரைப்படி இனிப்புகளை சாப்பிடுவதாகக் கூறினார். மேலும், தேர்தலில் வெல்ல முடியாவிட்டால் சிறையிலேயே அவரைக் கொல்ல பாஜக முயற்சிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 192/7 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் 78, ரோஹித் ஷர்மா 36, திலக் வர்மா 34 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் சார்பில் ஹர்ஷல் படேல் 3, சாம் கரண் 2, ரபாடா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க.

News April 18, 2024

தமிழ்நாடு தவிர நாளை எங்கெல்லாம் வாக்குப்பதிவு

image

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை(19.04.2024) நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல, புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதோடு, மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. விளவங்கோடு தொகுதிக்கும் நாளைய தினம் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

error: Content is protected !!