News April 19, 2024

BREAKING: மும்பையிடம் வீழ்ந்தது பஞ்சாப்

image

PBKS-க்கு எதிரான ஆட்டத்தில் MI அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 33ஆவது போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த MI அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் 78 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 193 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய PBKS அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி வீழ்ந்தது.

News April 19, 2024

மழையை தீர்மானிக்கும் ‘லா நினோ’, ‘எல் நினோ’

image

பூமியின் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள கடலின் வெப்பநிலை குறைந்தது 0.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் அது ‘எல் நினோ’ எனப்படுகிறது. அதுவே, குறைந்தது 0.5 டிகிரி செல்சியஸ் குறைந்தால் அது ‘லா நினோ’ எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, ‘எல் நினோ’ காரணமாக இந்தியாவின் பருவமழை 6% குறைந்தது. நடப்பு ஆண்டில் ‘லா நினோ’ நிகழ்வால் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்யலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

News April 18, 2024

விஷப் பேனா தயாரிக்கும் வடகொரியா

image

வடகொரியா உயிரியல் ஆயுதங்களை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கொடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்களை உருவாக்கி வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் தகவலின்படி, கொடிய நோய்களை பரப்ப ஸ்ப்ரேக்கள், விஷப் பேனாக்களை வடகொரியா தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. அணு ஆயுதத் திட்டத்தில் குறைவான கவனம் செலுத்திவரும் வடகொரியா, உயிரியல் ஆயுதங்களில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது.

News April 18, 2024

61 வயது முதியவர், ஆனால் 38 வயது இளமை

image

அமெரிக்காவைச் சேர்ந்த 61 வயது முதியவர், 38 வயது மனிதருக்கான உடல் அமைப்புடன் இளமையாகத் தோன்றுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகனைச் சேர்ந்த டேவ் பாஸ்கோவுக்குத் தற்போது 61 வயதாகிறது. ஆனால் அவரின் உடலில் முதுமை தெரியவில்லை. 38 வயது நபருக்கான இளமை உள்ளது. அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு எழுவது, தீவிர உடற்பயிற்சி செய்வது, இணை உணவு, சரிவிகித உணவு இதற்குக் காரணமென டேவ் தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

சிறந்த சர்வதேச பத்திரிகை புகைப்படம் இதுதான்

image

2024ஆம் ஆண்டிற்கான சிறந்த உலகப் பத்திரிகை புகைப்படக் கலைஞருக்கான விருதை, ராய்ட்டர்ஸ் ஊடக நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் முகமது சலேம் பெற்றுள்ளார். காஸா பகுதியில் உள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் பாலஸ்தீனப் பெண் ஒருவர் தனது இறந்துபோன, வெள்ளைத் துணி போற்றிய 5 வயது குழந்தையின் உடலை நெஞ்சோடு அணைத்தபடி பிடித்திருப்பார். இந்த புகைப்படத்தை எடுத்ததற்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 18, 2024

ஆடம்பர வாழ்க்கை வாழப் போகும் ராசிகள்

image

நவ கிரகங்களில் மங்கள நாயகனான சுக்கிர பகவான் செல்வச் செழிப்பு, ஆடம்பரத்தை அள்ளித் தருவார். இவர் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்வதால் மிதுனம், தனுசு, விருச்சிகம், மீன ராசியினர் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகின்றனர். மண்ணும் பொன்னாகும் யோகம், வியாபாரத்தில் லாபம், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, பணவரவு, வழக்குகளில் சாதகமானத் தீர்ப்பு போன்ற பல்வேறு பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.

News April 18, 2024

தொழிலாளிக்கு மறுவாழ்வு அளித்த மருத்துவர்கள்

image

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் துண்டிக்கப்பட்ட கையை இணைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அசோக் என்ற கூலித் தொழிலாளியின் வலது கையானது விபத்தில் சிக்கி துண்டானது. இந்நிலையில், அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், வெற்றிகரமாக கையை இணைத்துள்ளனர். எலும்புகள், நரம்புகள், இரத்தக் குழாய்கள் என அனைத்தையும் இணைக்க 10 மணி நேரம் சிகிச்சை நடந்தது.

News April 18, 2024

அதிக சிக்ஸர்கள் அடித்து ரோஹித் புதிய சாதனை

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார். மும்பை அணிக்காக இதுவரை 224 சிக்ஸர்கள் அடித்து, அந்த அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பொல்லார்டின் (223) சாதனையை முறியடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக ஹர்திக் பாண்டியா 104, இஷான் கிஷன் 103, சூர்யகுமார் 97 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

News April 18, 2024

இந்தியாவில் வாக்களிக்கும் முதல் இலங்கைத் தமிழர்

image

திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி. இவரின் பெற்றோர் 1983ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரம் வந்தவர்கள். தற்போது 38 வயதாகும் நளினி, இந்தியாவில் பிறந்ததை ஆதாரமாக கொண்டு வழக்குத் தொடுத்து பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளார்.

News April 18, 2024

தயார் நிலையில் இருக்க உத்தரவு

image

ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் தயாராக இருக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், தற்போது வெயில் சுட்டெரிப்பதால் அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ உதவி அளிக்கும் வகையில் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!