News April 19, 2024

IPL: பஞ்சாப் அணிக்காக போராடிய இளம் வீரர்கள்

image

மும்பைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணியின் வெற்றிக்கு இளம் வீரர்கள் கடுமையாக போராடியுள்ளனர். சாம் கரண், ப்ரப்சிம்ரன், ரைலி, ஹர்ப்ரீத், ஜிதேஷ் ஷர்மா உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷஷாங் சிங், அஷுதோஷ் ஷர்மா ஆகியோர், 4 Four, 10 Six என விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் கடைசி வரை போராடியும், பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

News April 19, 2024

முதல் ஆளாக வாக்கு செலுத்தினார் அஜித்

image

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தவகையில், அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தென் சென்னைக்கு உட்பட்ட திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று நடிகர் அஜித் முதல் ஆளாக தனது வாக்கை செலுத்தினார்.

News April 19, 2024

முதல்கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

image

102 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதையடுத்து வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

News April 19, 2024

சத்தீஸ்கரில் 80 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

image

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜனவரி முதல் இதுவரை 80 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் பதுங்கியுள்ள நக்சல்களை பாதுகாப்புப் படையினர் தேடிப் பிடித்து வேட்டையாடி வருகின்றனர். அதன்படி ஜனவரி மாதம் முதல் இதுவரை 80 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 29 பேர் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள். மேலும், 150 பேர் சரண் அடைந்துள்ளனர்

News April 19, 2024

இந்திய கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்

image

இந்திய கடற்படைக்கு புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படைத் தளபதி ஹரிகுமார் விரைவில் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அந்தப் பதவிக்கு துணைத் தளபதி தினேஷ் திரிபாதியை மத்திய அரசு நியமித்துள்ளது. தினேஷ் திரிபாதி, 1985ஆம் ஆண்டு முதல் கடந்த 40 ஆண்டுகாலம் கடற்படையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அவர் வருகிற 30ஆம் தேதி கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.

News April 19, 2024

மும்பை இந்தியன்ஸின் மிரட்டலான பந்துவீச்சு

image

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், மும்பை அணி பந்துவீச்சில் மிரட்டியது. முதலில் ஆடிய மும்பை அணி, 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 100 ரன்களுக்குள்ளேயே 6 விக்கெட்டுகளை இழந்தது. அபாரமாக பந்துவீசிய பும்ரா, கோட்ஸி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் மும்பை அணி, 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News April 19, 2024

குறியீடு உடன் வருகிறாரா விஜய்?

image

நடிகர் விஜய், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கருப்பு – சிவப்பு வண்ணம் கொண்ட சைக்கிளில் வாக்கு செலுத்த வந்தார். தற்போது அவர், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியபின், முதல்முறையாக வாக்கு செலுத்த உள்ளார். இதனால், அவர் எந்தமாதிரியான குறியீடு உடன் வருவார், தனது கட்சி கொடியின் வண்ணத்தை மறைமுகமாக வெளிப்படுத்துவாரா என நெட்டிசன்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

News April 19, 2024

வழக்குகளில் வெற்றி தரும் சாட்சிநாதர்

image

தமிழகத்தில் நடைபெற்ற போர்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது திருப்புறம்பியம் போர். அந்தப் போரில் வென்ற முதலாம் ஆதித்தச்சோழன் கட்டிய திருத்தலமே சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயிலாகும். செவ்வாய்க் கிழமையில் இங்கு வந்து ஈசன் & குஹாம்பிகையை வணங்கி அர்ச்சனை செய்து, நெய்வடை சமர்ப்பித்து வழிபட்டால் சொத்து சம்பந்தமான பிரச்னை & வழக்குகளில் உடனடியாகத் தீர்வு கிட்டும் என்பது நம்பிக்கை.

News April 19, 2024

தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றி

image

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 12ஆவது சுற்றில், தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றிப் பெற்றுள்ளார். அஜர்பைஜான் வீரர் நிஜாத் அபாசோவுக்கு எதிரான இப்போட்டியில், குகேஷ் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். வித்தியாசமான தொடக்கத்தை கொடுத்த குகேஷ், தனது உத்திகளை சரியான முறையில் செயல்படுத்தி 57ஆவது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

News April 19, 2024

IPL: வெற்றியைத் தொடருமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

image

சென்னை-லக்னோ அணிகளுக்கு இடையேயான 34ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. மும்பைக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள லக்னோ அணி, சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். பலம் வாய்ந்த CSK அணியுடன் மோதவுள்ளதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

error: Content is protected !!