News April 19, 2024

‘Vote’ வார்த்தையின் பூர்வீகம்

image

Vote என்ற வார்த்தை லத்தீன் மொழியில் இருந்து உருவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வார்த்தை முதலில் vōtum என்று இருந்திருக்கலாம், பிறகே Vote என்று மருவி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. கிரேக்க கடவுடளுடன் செய்த ஒப்பந்தத்துக்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. Vote என்பது, தேர்தல் அல்லது கூட்டத்தில் போட்டியிடுபவரை விருப்ப அடிப்படையில் ஒருவர் தேர்வு செய்வது என்பது அர்த்தமாகும்.

News April 19, 2024

9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளன

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 8.59% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதிய தலைமுறை வாக்காளர்கள் பலர் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்.

News April 19, 2024

இந்தியாவின் முதல் வாக்காளர்

image

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளராக ஹிமாச்சலைச் சேர்ந்த ஷியாம் சரண் நெஹி கருதப்படுகிறார். இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, மக்களவைக்கு முதல்முறையாக 1951 முதல் 1952 வரை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் முதல் நபராக பள்ளி ஆசிரியரான நெஹி தனது வாக்கை பதிவு செய்தார். இதனால் அவரே நாட்டின் முதல் வாக்காளராக கருதப்படுகிறார். 2022இல் 105 வயதில் காலமாகும் வரை அவர் 34 தேர்தல்களில் வாக்களித்துள்ளார்.

News April 19, 2024

செல்ஃபோன் கொண்டு போனால் வாக்களிக்க முடியாது

image

தமிழகத்தில் காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செல்ஃபோனுடன் வந்தவர்கள் வாக்களிக்காமல் திரும்பிச் செல்கின்றனர். செல்ஃபோனை வாக்கு மையத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால், வேறுவழியில்லாமல், வாக்களிக்க வந்தவர்கள் திரும்பி செல்லும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இனி வாக்களிக்க செல்வோர் செல்ஃபோனை எடுத்து செல்ல வேண்டாம்.

News April 19, 2024

தேர்தல் ஆணையம் உடனே சரி செய்ய வேண்டிய பிரச்னை இது

image

தமிழகத்தில் காலையில் இருந்து ஒருசில இடங்களைத் தவிர, வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், வயதானோருக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால், பல இடங்களில் குடிநீர், நாற்காலிகள் மற்றும் முதியோர்களுக்கான எந்த அடிப்படை வசதியும் ஏற்படுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் இதை உடனே சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

News April 19, 2024

CSK அணியின் முதல் ஐபிஎல் போட்டி நினைவிருக்கா?

image

2008ஆம் ஆண்டு இதே நாளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் ஐபிஎல் போட்டியை எதிர்கொண்டது. பஞ்சாப்பிற்கு எதிரான இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மைக்கல் ஹசியின் அதிரடியான சதத்தால், 20 ஓவர்கள் முடிவில் CSK அணி 240/5 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய PBKS அணி, 207/4 ரன்கள் குவித்து தோல்வியை தழுவியது. இது சென்னை அணியின் முதல் ஐபிஎல் வெற்றி ஆகும்.

News April 19, 2024

சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக நடந்த தேர்தல்

image

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக 1951 அக்டோபர் மாதம் முதல் 1952 பிப்ரவரி மாதம் வரை மக்களவைத் தேர்தல் நடந்தது. மொத்தம் 68 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 45.7% வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்தத் தேர்தலுக்காக 1950 ஜனவரி மாதம் தலைமைத் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக ICS அதிகாரி சுகுமார் சென் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் தேர்தல் நடத்தப்பட்டது.

News April 19, 2024

ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்

image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. அண்மையில் இஸ்ரேல் மீது ஈரான் 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்களை வீசியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல பதிலடி கொடுத்தால் கடுமையான தாக்குதலை நடத்துவோம் என ஈரான் எச்சரித்து வந்தது. ஆனால் அதையும் மீறி, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

News April 19, 2024

தனுஷ், வெற்றிமாறன் வாக்கு செலுத்தினர்

image

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், பிரபு ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்த நிலையில், நடிகர் தனுஷ், வெற்றிமாறன், சசிகுமார், இளையராஜா ஆகியோரும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

News April 19, 2024

ஆம்புலன்சில் வந்து வாக்களிப்பு

image

தஞ்சாவூரில் முன்னாள் மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் ஆம்பரோஸ் ஆம்புலன்சில் வந்து வாக்களித்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று வாக்குப்பதிவு என்பதால், உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல், அவர் அவசர ஊர்தியில் வந்து, தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். அவரின் செயல், நம் ஒவ்வொருவரும் வாக்களிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியுள்ளது.

error: Content is protected !!