India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜவுளி ஏற்றுமதி தொடர்ந்து 2வது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில் 41.1 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் 2022- 23இல் 35.5 பில்லியன் டாலராக சரிந்தது. இந்நிலையில் 2023-24 நிதியாண்டில் 34.4 பில்லியன் டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. பிராந்திய பிரச்சினைகளால் சர்வதேசப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணமென கூறப்படுகிறது.
இந்தியாவில் முதல் தேர்தல் 1951 அக். முதல் 1952 பிப். வரை நடந்தது. ஹிமாச்சலின் ஷினி, பங்கி பகுதிகளில் 1951 அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து கேரள பகுதியான திருவல்லா, திருச்சூரில் 1951 டிசம்பரிலும், அதே மாதத்தில் கொச்சின், ஒடிசா, மத்திய பிரதேசம், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலும், 1952 பிப்ரவரியில் உத்தர பிரதேச மலைபகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் நடந்தது
தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சென்னையிலுள்ள 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை – 8.59%, வடசென்னை – 9.73%, தென்சென்னை – 10.08% மற்றும் பல தொகுதிகளில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. அடுத்த 5 ஆண்டுகள் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால், அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வந்து, ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்.
கோவையில் ₹1,000 கோடிக்கும் மேல் திமுக, அதிமுக வாரி இறைத்திருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கோவை தொகுதியில் திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்திருப்பதாகவும், ஆனால் பாஜக யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும் கூறினார். பாஜக பணம் அளித்ததை நிரூபித்தால், அரசியலை விட்டு விலக தயாரென்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பர்பிள் கேப்பை மும்பை வீரர் பும்ரா பெற்றுள்ளார். பஞ்சாப்பிற்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான பட்டியலில், (13) பும்ரா முதலிடத்தில் உள்ளார். 2.சாஹல்-12, 3.கோட்ஸி-11, 4.கலீல்-10, 5.ரபாடா-10 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
பிரபல தமிழ் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா (89) உடல்நலக்குறைவால் காலமானார். தொடுவானம், படி தாண்டிய பத்தினிகள், அவசரக் கோலங்கள், மன விலக்கு, பெண்களின் சிந்தனைக்கு போன்ற 30க்கும் மேற்பட்ட நாவல்களும், அம்மாவின் சொத்து, வெகுளிப் பெண் போன்ற பல சிறுகதைகளையும் அவர் எழுதியுள்ளார். தமிழக அரசின் சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிய அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன், பிரபு, தனுஷ், ரஜினி, விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், செல்வராகவன், கமல், இளையராஜா, விஜய் குமார், சினேகா, பிரசன்னா, வரலக்ஷ்மி, அதிதி பாலன் உள்ளிட்ட பலரும் வாக்கு செலுத்தியுள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை கடந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.55,120க்கும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.6,890க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.90க்கும், கிலோ வெள்ளி ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம், வரும் மே 3ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘குணா’ குகையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், கடந்த பிப். 22ஆம் தேதி திரைக்கு வந்தது. குறிப்பாக, தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதன் மூலம், மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்தப் படம் என்ற பெருமையையும் பெற்றது.
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது. இதேபோல் பெல்ஜியம், எஸ்தோனியா, வெனிசுலா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், மாலத்தீவு, நமீபியா, எகிப்து, பூடான், நேபாளம் ஆகிய நாடுகளில் மின்னணு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் வாக்குச்சீட்டு அடிப்படையில் தான் தேர்தல் நடத்தப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.