News April 19, 2024

வாக்களிப்பதை கட்டாயமாக்கியுள்ள நாடுகள் (2)

image

பெல்ஜியத்தில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்கவில்லையெனில் 50 யூரோ அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. லக்சம்பர்க் நாட்டிலும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தலில் 95% வாக்குகள் பதிவாகின்றன. இத்தாலியில் வாக்களிப்பது மக்கள் பணி என்று அரசியலமைப்பு சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 19, 2024

வாக்களிக்க ஒரே நிற உடையில் வந்த அஜித், விஜய்

image

அஜித், விஜய் ஆகியோர் வாக்களிக்க ஒரே நிற உடையில் வந்தது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்தது. திரையுலகில் இருவருக்கும் இடையே போட்டி நிலவுவதாக கருத்து உண்டு. இந்நிலையில், நடிகர் அஜித்குமார் காலை 7 மணிக்கு முதல் ஆளாய் வந்து வாக்களித்தார். அப்போது வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். மதியம் 12.30 மணிக்கு விஜய் வாக்குப்பதிவு செய்தார். இதை கண்ட ரசிகர்கள், சட்டை நிறத்திலுமா போட்டி என கலாய்க்கின்றனர்.

News April 19, 2024

ஜனநாயகக் கடமை ஆற்றிய திரைப் பிரபலங்கள்

image

தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். தற்போது, நடிகை த்ரிஷா, கார்த்திக், பாரதிராஜா, லிங்குசாமி, யோகி பாபு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் வாக்களித்தனர். G.O.A.T படக்குழுவுடன் சென்னை திரும்பிய நடிகர் விஜய், இன்னும் சற்று நேரத்தில் வாக்களிக்க உள்ளார்.

News April 19, 2024

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ₹12 லட்சம் அபராதம்

image

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், தாமதமாக பந்துவீசியதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆடிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் குவித்தது. ஆனால், பந்துவீச்சின் போது கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால், மும்பை அணிக்கு ₹12 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது இத்தொடரின், 7ஆவது அபராதம் ஆகும்.

News April 19, 2024

இந்தியத் தேர்தல்களும், 5 ரூசிகர தகவல்களும்

image

1) இந்தியாவில் முதல் தேர்தல் 1951 அக். முதல் 1952 பிப். வரை நடந்தது 2) கேரளாவில் பொதுத் தேர்தலின்போது முதன்முதலாக 1982இல் EVM இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன 3) நோட்டா சின்னத்தை அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் உருவாக்கியது 4) 1989இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் மூலம் வாக்களிக்கும் வயதானது 21இல் இருந்து 18ஆகக் குறைப்பு 5) 2014 மக்களவைத் தேர்தலில் நோட்டா அறிமுகம்

News April 19, 2024

முதியோர்களே மதிய நேரத்தில் செல்லாதீங்க

image

சேலத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக 2 முதியோர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். எனவே, இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க கடுமையான வெயில் இருக்கும் பிற்பகல் நேரத்தில் முதியோர்கள் வாக்களிக்க செல்வதை தவிர்க்கவும். வெயில் தாழ்ந்த பிறகு 4 மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள். மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி செல்லும் அனைவருக்கும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News April 19, 2024

பஞ்சாப் வீரரை பாராட்டிய ஹர்திக் பாண்டியா

image

பஞ்சாப் வீரர் அசுதோஷ் ஷர்மாவை, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார். போட்டி முடிந்த பின் பேசிய அவர், “அசுதோஷ் சர்மா விளையாடிய விதம் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவர் அடிக்கும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரிக்கு சென்றது. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இறுதியில் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு வெற்றியை தேடித் தந்ததில் மகிழ்ச்சி” எனக் கூறினார்.

News April 19, 2024

தேர்தலில் வென்ற விலங்குகள்

image

தேர்தலில் விலங்குகள் வென்ற வினோதச் சம்பவங்கள் வரலாற்றில் நடந்துள்ளன. பிரேசிலில் 1922இல் பில்லி கோட் என்ற ஆடு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றது. வாஷிங்டனில் 1938இல் கோவேறு கழுதை வென்றது. டெக்சாசில் மேயர் தேர்தலில் நாயும், பூனையும் வேட்பாளர்களாக போட்டியிட்டதில் பூனை வென்றது. கலிபோர்னியாவின் சுனோல் மேயராக லேப்ரடார் நாய் 1981-1994 காலத்தில் வென்றது. இதுபோல பல நிகழ்வுகள் நடந்துள்ளன.

News April 19, 2024

11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன

image

தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. மதுரை 22.35%, சேலம் 28.57%, ராணிப்பேட்டை 26.38%, வேலூர் 23.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 20.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.

News April 19, 2024

BREAKING: வாக்குச்சாவடியில் 2 பேர் மயங்கி விழுந்து மரணம்

image

தமிழகம் முழுவதும் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் கெங்கவல்லி அருகே வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்னபொண்ணு (77) மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வாக்களிக்க சென்ற முதியவர் பழனிசாமி (65) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!