India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருத்தணி அருகே வாக்கு செலுத்த வந்த கனகராஜ் (59) என்பவர் வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, சேலம் அருகே வாக்களிக்க சென்ற சின்னபொண்ணு (77), பழனிசாமி (65) ஆகிய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்து சில நிமிடங்களில், மேலும் ஒருவர் வாக்குச்சாவடியில் உயிரிழந்தது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் காலை 7 மணி முதலே ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, அஜித், விஜய், ரஜினி, கமல், விக்ரம், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், வெள்ளை சட்டையில் வந்து வாக்களித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
நாட்டில் ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பதற்கான யுத்தம் இன்று தொடங்கியிருப்பதாக கார்கே தெரிவித்துள்ளார். அவரின் X பக்க பதிவில், மக்களவைக்கு முதல்கட்டத் தேர்தல் தொடங்கியுள்ளதாகவும், இதில் மிகவும் கவனமுடன் வாக்காளர்கள் வாக்கைப் பதிவு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் விதியை தீர்மானிக்கும் சக்தி வாக்குகளில் உள்ளதை உணர்ந்து வாக்களிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலில் வாக்குப்பதிவு செய்துவிட்டு, உடனே அங்கிருந்து சென்று விட வேண்டாம். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இவிஎம் இயந்திரம் அருகில் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும். அதில் வெளிவரும் சீட்டை பார்த்து தங்கள் வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க வேண்டும். அதன்பிறகு வாக்காளர்கள், சாவடியை விட்டு செல்வதே சிறப்பு.
விடுமுறை அளித்தும் வாக்களிக்காவிட்டால் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறையை சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்படும் என தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். இதேபோல் உள்துறை, டாஸ்மாக் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வாக்களிக்காத ஊழியர்கள் விடுப்புக்கணக்கில் இருந்து ஒருநாள் ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க கூடுதல் நேரம் கொடுக்க வாய்ப்பில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மாலை 6 மணிக்கு முன்பு எத்தனை நபர்கள் வந்தாலும் வாக்களிக்க வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும், அதன்பின் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், தேர்தலை புறக்கணிக்காமல் அனைவரும் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 44.08%, கள்ளக்குறிச்சியில் 44% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடலூர் 37.84%, வேலூர் 39.58%, ஈரோடு 43.54%, ராமநாதபுரம் 40.90% வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 32.31% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினர். விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் ஏற்கெனவே வாக்கு செலுத்திய நிலையில், தற்போது நடிகர் விக்ரம், ராகவா லாரன்ஸ், பிரஷாந்த், சிபி, பாபி சிம்ஹா, பார்த்திபன், சேரன், அமீர், நட்டி நடராஜன் உள்ளிட்ட பலர் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
மக்களவைத் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்காளர்களுக்கு ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் மூலம் நாட்டின் ஜனநாயகம், வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், 10 ஆண்டுகளாக நாட்டின் ஆன்மா மீது ஏற்படுத்தப்பட்ட புண்கள் மீது வாக்கு என்னும் சக்தியை செலுத்தி, ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
துருக்கியில் 1986 முதல் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி வாக்களிக்கவில்லையெனில், 8 யூரோ அபராதம் விதிக்கப்படும். பொலிவியாவில் முதல்முறை வாக்களிக்கவில்லையெனில் அபராதமும், தொடர்ந்து தவிர்த்தால் வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும். ஆஸ்திரேலியாவில் முதலில் வாக்களிக்கவில்லை என்றால் 20 டாலர் அபராதம், தொடர்ந்து தவிர்த்தால் சிறை தண்டனை விதிக்கப்படும்
Sorry, no posts matched your criteria.