India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக அளவில் இந்தியாவை மிகப்பெரிய வல்லரசு நாடாக மாற்றுவதற்கான தேர்தல் இது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த அவர், உலகளவில் போர் நடந்து வரும் சூழலில் இந்தியாவில் போர்க்கால அடிப்படையில் செயல்படும் அரசு தேவை என்றார். அத்தகைய சூழலில், வலுவான ஆட்சி அமைய வேண்டும். பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
விஜய்யை நடிகர் விஷால் காப்பி அடிக்கிறார். விஜய்யை, இளைய தளபதி என அழைத்ததால், விஷால் புரட்சி தளபதி என போட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து, அரசியலில் குதித்துள்ள விஜய் 2026 தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் இவரும் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த தேர்தலில் விஜய் எப்படி சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினாரோ, அதே பாணியை இவரும் பின்பற்றி இருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் பிரபலங்களின் பதிவு முக்கியத்துவம் பெறும். அந்த வகையில், நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் X பதிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தான் வாக்களித்த புகைப்படங்களை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், எங்கள் கடமையை செய்துவிட்டோம், நீங்கள்? என கேட்டுள்ளார். இதனோடு, அவர் #Vote4INDIA என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியது இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறாரா? என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது.
2019 சட்டப்பேரவைத் தேர்தலின் போது கருப்பு, சிவப்பு நிறம் கொண்ட சைக்கிளில் வந்து நடிகர் விஜய் வாக்களித்தது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் அவர் எப்படி வருவார் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இந்தத் தேர்தலில் விருப்பப்படி வாக்களியுங்கள் என கூறியிருந்த விஜய், அதை உறுதி செய்யும் விதமாக எவ்வித குறியீடும் இல்லாமல் வந்து வாக்களித்துச் சென்றார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் வாக்குப்பதிவு மந்தமாக நடந்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதத்தில் தமிழகத்திலேயே கடைசி 3 இடங்களை சென்னை தொகுதிகள் பிடித்துள்ளன. மத்திய சென்னை 32.31%, தென்சென்னை 33.93%, வட சென்னை 35.09% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 44.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் பெட்டலூரணி கிராமத்தில் காவல்துறை வாகனத்தை உடைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன் பதப்படுத்தும் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அக்கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு வந்த போலீசார், கள்ள ஓட்டு போட வந்ததாக நான்கு பேரை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசாரின் வாகனத்தை மக்கள் அடித்து உடைத்தனர்.
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் திருவிழாக் களைகட்டியுள்ளது. வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் கிராம மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். ஆனால், படித்தவர்கள் அதிகம் வசிக்கும் சென்னையில் வாக்குப்பதிவு குறைவாகவே உள்ளது. ஒரு மணி நிலவரப்படி, கிராமங்களின் சராசரி வாக்குப்பதிவு 40%ஐ கடந்துள்ள நிலையில், சென்னையில் 32% மக்களே வாக்களித்துள்ளனர். கிராமங்களை போல சென்னைவாசிகளும் வாக்களிக்க முன்வர வேண்டும்.
2023-24 நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் ₹2,011 கோடி லாபம் ஈட்டியிருப்பதாக பஜாஜ் தெரிவித்துள்ளது. பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2022-23 நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் ₹1,704 கோடி லாபம் ஈட்டியதாகவும், அது 2023-24 நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் அதிகரித்துள்ளதென்றும் பஜாஜ் தெரிவித்துள்ளது. ஜன-மார்ச்சில் ₹11,554 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாகவும் பஜாஜ் கூறியுள்ளது.
தேர்தலில் வாக்களிப்பது அனைவரின் ஜனநாயகக் கடமையாகும். இதில் வாக்களிக்க பணம் பெறுவதும், பரிசுப் பொருள் வாங்குவதும் மிகப்பெரும் தவறாகும். இதுபோல பணம், பரிசுப் பொருள் தந்து ஒருவர் தேர்தலில் வெற்றி பெறும்பட்சத்தில், செலவை மீட்டெடுக்க எதையும் செய்வார். அத்துடன் அவரை நேரில் சந்தித்து கோரிக்கை குறித்து மக்கள் கேள்வி எழுப்பவும் முடியாது. இதை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் காலை முதல் அமைதியாக மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதற்கிடையில் வட சென்னை தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்திற்கு வாக்கு செல்வதாக ஒருவர் புகார் அளித்தார். இதனால், திமுக, அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, புகார் அளித்த அந்த நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பொய்யான தகவலை கூறியது தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.