News August 10, 2025

‘உஜ்வாலா’ GAS மானியத்தில் மாற்றம் செய்த மத்திய அரசு

image

உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டருக்கான மானியம் இனி 9 மாதங்களுக்கு மட்டுமே தலா ₹300 வழங்கப்படவுள்ளது. 2023 அக். மாதம் முதல் மாதந்தோறும், 12 மாதங்களுக்கு தலா ₹300 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 9 மாதங்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும். 2025 – 2026 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ₹12,060 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10.33 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருவது கவனிக்கத்தக்கது.

News August 10, 2025

இனி தேவைக்கு அதிகமான ரீசார்ஜ் தொல்லை இல்லை!

image

2 சிம் கார்டு இருக்கும் நிலையில், ஒரு சிம் கார்டுக்கு தேவைக்கு அதிகமாக ரீசார்ஜ் செய்யும் தொல்லை இனி இல்லை. ஜியோ மீண்டும் தனது ₹189 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. 28 நாள்களுக்கு 2GB டேட்டா, தினசரி அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 SMS ஆகியவை இதில் அளிக்கப்படுகின்றன. மேலும், JioTV, JioCinema, JioCloud Access-ம் வழங்குகிறது. இது ஏர்டெல்லின் ₹199 ரீசார்ஜுக்கு போட்டியாக கொண்டுவரப்படுகிறது.

News August 10, 2025

போராட்டத்தால் தலைநகரில் திமுகவுக்கு நெருக்கடி

image

தமிழ்நாட்டின் தலைநகரில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு பல தரப்பில் இருந்து ஆதரவு பெருகிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, NTK, TVK, CPIM உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், நடிகர் சௌந்தரராஜா, பாடகி சின்மயி உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் நேரில் சென்று ஆதரவு அளித்து வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த போராட்டம் திமுகவுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.

News August 10, 2025

MGRஐ மீண்டும் தாக்கிய விசிக

image

MGR குறித்து பேசிய திருமா அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று இபிஎஸ் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த வன்னி அரசு, வெறுமனே கருணாநிதி வெறுப்பு மற்றும் தனக்கிருந்த சினிமா புகழை மட்டும் வைத்து ஆட்சியை பிடித்தவர் <<17349030>>MGR<<>>. மற்றபடி அவருக்கு எந்த கோட்பாட்டு பின்னணியும் இல்லை. இன்னும் உரத்துச் சொல்வோம் எம்ஜிஆரை உருவாக்கியதே பார்ப்பனியக் கும்பல்தான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

News August 10, 2025

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, நெல்லை, குமரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கோவை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News August 10, 2025

அமைச்சரின் பேச்சால் தூய்மை பணியாளர்கள் அதிருப்தி

image

‘பணி நிரந்தரம்’ செய்யக்கோரி, தூய்மைப்பணியாளர்கள் தலைநகரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அமைச்சர் சேகர்பாபு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதன்பின் அவர், ‘பணி நிரந்தரம் தரோம்னு நாங்க எதுவும் வாக்குறுதி கொடுக்கவில்லையே என பேசியிருந்தார். அதேபோல், பேச்சுவார்த்தையின்போது அவர் பேசிய சில விஷயங்களும் போராட்டக்குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

News August 10, 2025

வசூலை அள்ளும் ‘மகாவதார் நரசிம்மா’!

image

சாமி படத்தை அனிமேஷனில் யார் பார்க்க போகிறார்கள் என்று நினைத்தவர்களின் கணிப்பை ‘மகாவதார் நரசிம்மா’ மாற்றிவிட்டது. படம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து தற்போது வரை ₹150 கோடி வசூலை குவித்துள்ளது. யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவான இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த 6 படங்கள் வெளியாகவுள்ளன. அவற்றை பிரமாண்டமாக தயாரிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது ஹொம்பாலே பிலிம்ஸ். நீங்க படம் பாத்துட்டீங்களா?

News August 10, 2025

நேரம் பார்த்து பேசு!

image

காட்டில் ஒரு சிங்கம், ‘என் வாயில் துர்நாற்றமா?’ என ஆடு ஒன்றிடம் கேட்டது. ‘ஆமாம்’ என ஆடு கூற, கோபத்தில் உடனே சிங்கம் ஆட்டை கொன்றது. இதே கேள்வியை ஓநாயிடம் சிங்கம் கேட்ட, அது ‘இல்லை’ என்றது. ‘பொய் சொல்கிறாய்’ என அதையும் கொன்றது. நரியிடம் கேட்ட போது, ‘எனக்கு ஜலதோஷம், அதனால் வாசனை தெரியவில்லை’ எனக் கூறி உயிர் தப்பியது. புத்திசாலிகள் எப்போது, என்ன பேச வேண்டும் என அறிவார்!

News August 10, 2025

பாஜகவுடன் கூட்டணியா? இன்று மதியத்திற்குள் OPS முடிவு

image

இன்று தமிழகம் வரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்திக்க வருமாறு OPS-க்கு பாஜக அழைப்பு விடுத்தது. இதுகுறித்து தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசித்துள்ளார். இதில், ஒருதரப்பு பாஜகவுடன் இணையக் கூடாது என்றும், மற்றொரு தரப்பு தற்போதை சூழலில் பாஜகவுடன் இணைவதுதான் சரியான முடிவு என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சற்றுநேரத்தில் கூட்டணி குறித்து OPS முடிவு எடுக்கவிருக்கிறார்.

News August 10, 2025

EPS உடன் இணையும் எண்ணமில்லை: TTV தடாலடி

image

மீண்டும் EPS உடன் இணையும் எண்ணமில்லை என TTV தினகரன் கூறியுள்ளார். அதேநேரம், தாங்கள் NDA கூட்டணியில் இருப்பதாகவும், OPS மீண்டும் தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்பதே எனது விருப்பம் எனவும் கூறியுள்ளார். அண்மையில், தனியார் TV பேட்டி ஒன்றில் OPS, TTV ஆகியோருடன் ஒருங்கிணைந்த அதிமுக எப்போது எதிர் பார்க்கலாம் என்ற கேள்விக்கு ‘அது முடிந்துபோன கதை’ என EPS கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. உங்கள் கருத்து?

error: Content is protected !!