India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வீரர் ஜடேஜா அரை சதம் கடந்துள்ளார். 34 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 52* எடுத்து ஆடி வருகிறார். மொயீன் அலி 11* ரன்களுடன் களத்தில் உள்ளார். ரஹானே 36, ருதுராஜ் 17, ஷிவம் தூபே 3, ரிஸ்வி 1 ரன்னிலும், ரச்சின் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். தற்போது வரை சிஎஸ்கே 17.2 ஓவரில் 129/5 ரன்கள் எடுத்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், மக்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இந்த நிலையில், தேர்தல் முடியும் வரை வாக்குச் சாவடி பக்கம் சில பிரபலங்கள் தலையை காட்டவில்லை. அந்த வகையில் நடிகர் சிம்பு, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், அட்லி, நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் வாக்கு செலுத்தவில்லை.
மநீம கட்சியில் இருந்து மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் ஷங்கர் ரவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். உட்கட்சியில் பல அரசியல் நடைபெற்றதாகவும் கட்சியில் இருந்து விலக பல வாரங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டதாகவும் அவர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் முடியும் வரை காத்திருந்ததாகவும் தற்போது மநீம கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும் ஷங்கர் ரவி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடந்த முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி, 60.03% பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக திரிபுராவில் 79.90% வாக்குப்பதிவு நடந்துள்ளது. குறைந்தபட்சமாக பிகாரில் 47.49% வாக்குப்பதிவு நடந்துள்ளது. அந்தமான் நிகோபார் – 56.87%, அருணாச்சல் – 65.46%, அசாம் – 71.38%, சத்தீஸ்கர் – 63.41%, ஜம்மு காஷ்மீர் – 65.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் இன்று வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு வாக்குச்சாவடியிலும் பெரிய அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு செய்யவில்லை என்றும் அவர் கூறினார். 7 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக சத்யபிரதா கூறியுள்ளார்.
முதல்கட்ட வாக்குப்பதிவில் இரவு 7 மணி நிலவரப்படி, இலட்சத்தீவு – 59.02%, மத்திய பிரதேசம் – 63.33%, மகாராஷ்டிரா – 55.29%, மணிப்பூர் – 68.62%, மேகாலயா – 70.26%, மிசோரம் – 54.18%, நாகாலாந்து – 56.77%, புதுச்சேரி – 73.25%, ராஜஸ்தான் – 50.95%, சிக்கிம் – 68.06%, தமிழ்நாடு – 72%, திரிபுரா – 79.90%, உத்தர பிரதேசம் – 57.61%, உத்தராகண்ட் – 53.64%, மேற்கு வங்கம் – 77.57% பேர் வாக்களித்துள்ளனர்.
கேரளாவில் 92 வயது முதியவரின் வாக்கை பதிவு செய்ய வனவிலங்குகள் அதிகம் வாழும் மலைப்பகுதி காட்டுக்குள் 18 கி.மீ. தூரம் தேர்தல் அதிகாரிகள் பயணித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் எடமலைகுட்டியை சேர்ந்த சிவலிங்கம், முதுமை காரணமாக படுத்த படுக்கையாக உள்ளார். இருப்பினும் வீட்டில் இருந்து வாக்களிக்க மனு அளித்ததால், 3 பெண்கள் உள்ளிட்ட 9 அதிகாரிகள் சென்று வாக்கைப் பதிவு செய்தனர்.
சத்தீஸ்கரில் தேர்தல் பணியின்போது கையெறிகுண்டு தவறுதலாக வெடித்ததில் CRPF வீரர் உயிரிழந்துள்ளார். பஸ்தார் தொகுதிக்குட்பட்ட பிஜப்பூரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த CRPF வீரர் தேவேந்திர குமார் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு, அவரது சொந்த ஊரான பஸ்தாரில் நாளை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல் இறுதிக்கட்ட தேர்தல் (ஜூன் 1 மாலை 6.30 மணி) முடியும் வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஜூன் 1 மாலை 6.30க்குப் பின் கருத்துக்கணிப்புகள் வெளியாகும்.
மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்களித்த தமிழக மக்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் கடந்த தேர்தலில் கிடைத்த முடிவுகளை மாற்ற வேண்டும், மோடி ஆட்சி மத்தியில் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் வாக்களித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், பாமக இடம்பெற்றுள்ள தே.ஜ.கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.