News April 21, 2024

நல்ல படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம்

image

சினிமா அழியாது என்பதற்கு ‘கில்லி’ படத்தின் ரீரிலீஸே சாட்சி என இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார். ‘ரத்னம்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், விரைவில் போலீஸ் கதை அம்சம் கொண்ட படத்தை இயக்க இருப்பதாகக் கூறினார். மேலும், ‘கில்லி’ படத்தின் ரீரிலீஸுக்கு கூடியுள்ள கூட்டம், சினிமா எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. நல்ல படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்தார்.

News April 21, 2024

ஆண்களை விட பெண்களே அதிகம்

image

தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்களித்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 8 லட்சத்து 60 ஆயிரம் பெண்கள் ஆண்களை விட அதிகமாக வாக்களித்துள்ளனர். 2.12 கோடி ஆண்கள் வாக்களித்திருக்கும் நிலையில், 2.21 கோடி பெண்கள் வாக்குப்பதிவு செய்திருக்கின்றனர். 2019ஆம் ஆண்டு ஆண்களே அதிகமாக வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 21, 2024

IPL: பஞ்சாப் அணி பேட்டிங்

image

சண்டிகரில் இன்று நடைபெறும் இரண்டாவது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் குஜராத் அணி பவுலிங் செய்ய உள்ளது. இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் GT 3 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்திலும், PBKS 2 வெற்றிகளுடன் 9ஆவது இடத்திலும் உள்ளது.

News April 21, 2024

ஈரோட்டில் 42.2 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவு

image

தமிழ்நாட்டில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஈரோட்டில் இன்று அதிகபட்சமாக 42.2 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. அதே போல, கரூர் பரமத்தி – 41.5, சேலம் – 41, வேலூர் – 40.8, திருச்சி – 40.6, மதுரை – 40.2, திருப்பத்தூர் – 40.2, தருமபுரி – 40.2, திருத்தணி – 40, கோவை – 39.2, தஞ்சை – 39.5, சென்னை – 37.8, புதுச்சேரி – 36 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

News April 21, 2024

அரை சதம் கடந்தார் படிதார்

image

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிவரும் பெங்களூரு அணி வீரர் படிதார் அரை சதம் கடந்துள்ளார். 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசிய அவர் 23 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ரஸல் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஜேக்ஸ் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து RCB அணி 12 ஓவர்கள் முடிவில் 145/4 ரன்கள் எடுத்துள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News April 21, 2024

அக்னி வீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

image

பொதுப்பணி, தொழில்நுட்பம், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு திருமணம் ஆகாத ஆண்கள்/பெண்கள் நாளைக்குள் (ஏப்.22) <>www.joinindianarmy.nic.in<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், எழுத்துத் தேர்வுக்கான அனுமதி அட்டை நாளை முதல் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தை அணுகவும்.

News April 21, 2024

I.N.D.I.A கூட்டணியை உடைக்க முடியாது

image

I.N.D.I.A கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ராஞ்சியில் பிரசாரம் செய்த அவர், 400, 500 தொகுதிகளில் வெற்றி என பாஜக கூறி வருவதாகத் தெரிவித்தார். ஆனால், இம்முறை எதிர்க்கட்சிகளின் சக்தி வலுவாக உள்ளது. மோடி மட்டுமல்ல, யார் நினைத்தாலும் கூட்டணியை உடைக்க முடியாது. ஹேமந்த் சோரனை கைது செய்து பாஜக பயமுறுத்த முயற்சிக்கிறது எனக் குற்றம்சாட்டினார்.

News April 21, 2024

அரை சதம் கடந்தார் வில் ஜேக்ஸ்

image

நடப்பு ஐபிஎல் போட்டியில் RCB அணியின் வில் ஜேக்ஸ் அரை சதம் கடந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். முதலில் விளையாடிய KKR அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. அதனைத் தொடர்ந்து விளையாடும் RCB அணியின் தொடக்க வீரர்கள் டுப்ளசி & கோலி இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வில் ஜேக்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறார்.

News April 21, 2024

‘தலைவர் 171’ டீசர் நாளை வெளியாகிறது

image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, டீஸருக்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘தலைவர் 171’ LCUவில் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

News April 21, 2024

சென்னை திரும்ப முண்டியடிக்கும் மக்கள்

image

3 நாள்கள் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் சென்னை திரும்ப முண்டியடித்து வருகின்றனர். 19ஆம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றதால் சென்னையில் வசிக்கும் பலர் வாக்கு செலுத்துவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றனர். 3 நாள்கள் விடுமுறை முடிந்து அனைவரும் ஓரே நேரத்தில் சென்னைக்கு திரும்புவதால் ரயில் & பேருந்து நிறுத்தங்களில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.

error: Content is protected !!