India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என பழமொழி கூறப்படுவதுண்டு. அந்த வகையில், கோடைகாலத்தில் கரும்புச் சாறை அதிகம் பருகுவது ஆபத்து என ICMR கூறியுள்ளது. பொதுவாகவே, கரும்பில் இருந்துதான் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சர்க்கரை அளவை அதிகம் கொண்டுள்ள கரும்புச் சாறை அதிகளவில் குடிப்பதால், பின்நாள்களில் உடல்நிலை சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ICMR எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவைவிட (0.99%), காங்கிரஸின் (0.32%) வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், தற்போது நோட்டாவுடன் போட்டி போடும் நிலைக்கு சென்றுவிட்டதாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் ராகுல், பிரியங்கா ஓடி ஓடி பிரசாரம் செய்தாலும், அது மக்கள் மத்தியில் பலிக்கவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுவதாக சிலர் கூறி வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டில் தனது வெற்றிகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் அதனை மறந்துவிட்டு அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றுவிடுவேன். அதே நேரத்தில், கடினமாக நேரங்களில் ஓடி ஒளியாமல் அனைத்தையும் தலைநிமிர்ந்து எதிர்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணி 0-2 தொகுதிகளில் வெல்லும் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. ஆனால், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான NEWS J நடத்திய கருத்துக்கணிப்பில், அதிமுக கூட்டணி 24 தொகுதிகள் வரை வெல்லும் எனக் கூறியுள்ளது. இதனால், பிற ஊடகங்களின் கணிப்பு தவறா என ஒரு தரப்பும், அதிமுகவினரிடம் மட்டும் NEWS J கருத்துக்கணிப்பு நடத்தியதா என மற்றொரு தரப்பும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
1834 – இலங்கை கொழும்புவில் புறக்கோட்டை, கோட்டை பகுதிகளில் காணிகளை வாங்க தமிழர், சோனகருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படை பாரிஸ் நகரில் குண்டுகளை வீசின.
1965 – நாசாவின் ஜெமினி 4 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
1984 – புளூஸ்டார் நடவடிக்கை: அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற்கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.
உலகக் கோப்பை டி20 தொடர், அமெரிக்காவில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற போட்டியில் USA, WI அணிகள் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதைத் தொடர்ந்து இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெற உள்ளன. காலை 6 மணிக்கு நடைபெற உள்ள முதல் போட்டியில், ஆப்கன்-உகாண்டா அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு இங்கிலாந்து-ஸ்காட்லாந்து அணிகளும், இரவு 9 மணிக்கு நெதர்லாந்து-நேபாள் அணிகளும் மோதுகின்றன.
சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். திஹார் சிறைக்கு செல்லும் முன் பேசிய அவர், “எனது ஒவ்வொரு துளி ரத்தமும் நாட்டுக்கானது. தேசத்திற்காக பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை போல, தானும் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன்” என்றார். மேலும், தற்போது சிறைக்கு செல்லும் நான், எப்போது திரும்பி வருவேன் எனத் தெரியாது எனவும் அவர் கூறினார்.
▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: நட்பியல்
▶அதிகாரம்: பெண்வழிச்சேறல்
▶குறள்: பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும்.
▶பொருள்: ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.
வட கொரியா, தென் கொரியா இடையிலான பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், வட கொரியாவுக்கு எதிரான வாசகங்களுடன் தென்கொரியாவில் இருந்து காகிதங்கள் வீசப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு பதிலடியாக, 600க்கும் மேற்பட்ட குப்பை பலூன்களை தென் கொரியாவுக்குள் வட கொரியா பறக்க விட்டு கொட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் கொரிய தீபகற்பத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில், இந்திய கால்பந்து ஜாம்பவான் பாய்சங் பூட்டியா தோல்வியை தழுவினார். 32 தொகுதிகளைக் கொண்ட சிக்கிமில், சிக்கிம் கிராந்திகாரி மோர்சா 31 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், சிக்கிம் ஜனநாயக கட்சி வேட்பாளரான பாய்சங் பூட்டியா 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பாய்சங்பூட்டியா, இந்திய கால்பந்து அணி கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.