India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துவரும் அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்கிறார். இதில், அஜித் மூன்று வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதில் ஒரு அஜித்துக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிரகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் மக்களுடன் தான் இருப்பேன் என மே.வங்கத்தின் பஹரம்பூரில் போட்டியிடும் திரிணாமுல் காங்.,வேட்பாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யூசுப் பதான் தெரிவித்துள்ளார். மேலும், தகுதியான நல்ல எதிர்காலத்திற்காக மக்களுடன் இருப்பேன். தற்போது இருக்கும் நேர்மறையான மனநிலையில் நான் வெற்றி பெறுவேன்.தோல்விக்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி கவலைப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் அணியின் சாய் கிஷோர் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து, 143 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி, 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
சீனா, பாகிஸ்தான் அமைதியாக இருப்பதற்கு பிரதமர் மோடியின் வலிமையான தலைமையே காரணமென திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். சுர்மாவில் நடைபெற்ற பிரசார பேரணியில் பங்கேற்று பேசிய அவர், 2014ஆம் ஆண்டுக்கு முன் குண்டுவெடிப்புகள், பயங்கரவாத தாக்குதல்கள், வீரர்கள் மீது தாக்குதல் ஆகியவைப் பற்றி செய்திகள் அதிகம் வந்தன. மோடி பொறுப்பேற்றப் பின் இந்திய பாதுகாப்பு படைகள் மேலும் வலுவடைந்து விட்டன என்றார்.
சுக்கிரன் மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவான் ராசியான மீன ராசியில் நுழைந்தார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது. சிம்மம், துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகள்தான் அவை. இந்த ராசியினர் உறவினர்களிடத்தில் பேசும்போது கவனமாக பேச வேண்டும்.
பெங்களூருவில் காரில் ரூ.2 கோடி பணத்தை எடுத்துச் சென்ற பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ஐடி விசாரணையில் அந்தப் பணத்திற்கான கணக்கு இருந்ததால் விதிமீறல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் விதிகளின்படி பணத்திற்கான பெறுநர் படிவம் இல்லாததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் உள்ள ‘Impact Player’ விதியை நீக்க RCB அணியின் பந்து வீச்சாளர் சிராஜ் கோரிக்கை வைத்துள்ளார். பேட்ஸ்மேன்கள் ஏற்கெனவே பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்துவரும் நிலையில் இந்த விதி மேலும் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக அமைவதாக சிராஜ் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த விதியின் மீது அதிருப்தி தெரிவித்திருந்தார்.
வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும் ‘அதிகாரம்’ படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இது குறித்து பேசிய லாரன்ஸ், வெற்றிமாறன் கூறிய திரைக்கதையை கேட்டு பிரமித்துப் போனதாக நெகிழ்ச்சி தெரிவித்தார். அவர் எழுதிய பிரம்மாண்ட கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி எனக் கூறினார். இப்படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தையை காப்பாற்றச் சென்று 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர கன்னடாவில் விடுமுறையை கொண்டாடச் சென்ற நபர்கள் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை காப்பாற்ற முயன்றபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஹூப்ளியை சேர்ந்தவர்கள் என்பதும், இறந்த 6 பேரில் 4 பேர் சிறுவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியா தவறான பாதையில் செல்லாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மீதான பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து பதில் அளித்துள்ள அவர், முதல்கட்ட வாக்குப்பதிவில் ஏமாற்றம் கிடைத்த பிறகு பொய்கள் பலன் தராததால், தோல்வி பயத்தில் மக்களை திசை திருப்பும் வேலையில், பாஜக ஈடுபட்டுள்ளாதாக தெரிவித்தார். வேலைவாய்ப்பு, எதிர்கால நலன் போன்றவற்றை மனதில் வைத்தே மக்கள் வாக்களிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.