India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1996இல் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால், தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது. வாஜ்பாய், தேவ கவுடா, குஜ்ரால் என 2 ஆண்டுகளில் 3 பேர் பிரதமராகினர். குஜ்ரால் அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற்றதால், 1998இல் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும் தொங்கு நாடாளுமன்றமே ஏற்பட்டது. இதையடுத்து தெலுங்கு தேசம் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமரானார். அதிமுக ஆதரவை வாபஸ் பெற்றதால் ஓராண்டில் அரசு கவிழ்ந்தது.
மக்களவையில் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே மத்தியில் ஆட்சியமைக்க முடியும். அதுபோல இடம் கிடைக்கவில்லையெனில் அது தொங்கு நாடாளுமன்றம் எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மீண்டும் தேர்தல் நடைபெற்று வரிப்பணம் வீணாவதை தவிர்க்க அதிக இடங்களில் வென்ற கட்சி அல்லது கூட்டணித் தலைவரை அழைத்து குடியரசுத் தலைவர் பேசுவார்.
சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களைப் பார்த்து வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 3 மாதத்தில் 2.5 லட்சம் மக்கள் மலையேறியிருக்கின்றனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2 லட்சம் பக்தர்கள் மட்டுமே மலையேறினர். உரிய பாதுகாப்பு இல்லாமலும் பயிற்சி இல்லாமலும் மலையேறிய பக்தர்களில் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
தேர்தலில் ஒவ்வொரு பூத்திலும் ஒரு EVM இருக்கும். அந்த இயந்திரம், வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கும் 14 மேஜைகளில் வைத்து எண்ணப்படும். உங்கள் தொகுதியில் 140 பூத்துகள் உள்ளது எனத் தோராயமாக எடுத்து கொண்டால், அவற்றில் உள்ள 140 EVM இயந்திரங்கள், 14 மேஜைகளில் தலா ஒன்று விதம் முதலில் 14, அடுத்து 14 என வரிசையாக எண்ணப்படும். இதுவே முதல் சுற்று, 2ஆவது சுற்று, 3ஆவது சுற்று எனக் கணக்கிடப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது RTI மூலம் தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் மொத்தம் 36 சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளன. இதனைக் குறைக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேலும் 10 சுங்கச்சாவடிகளைத் திறக்கத் திட்டமிட்டிருப்பது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சென்னையில் இன்னும் ஒரு மாதத்தில் நாய்கள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அண்மையில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து பேசிய அவர், நாயை நாய் எனக் கூறவிடாமல் குழந்தை என்று கூறுவதாக வேதனை தெரிவித்தார். அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பிய அவர், நாய் வளர்ப்பவர்கள் உரிய லைசென்ஸ் பெறுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. நாளை மறுநாள் வரை துணை மின் நிலையங்களில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள் அவசர நடவடிக்கைகளை கையாள அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மின் விநியோகத்தை கண்காணித்தல், அவசரகால செயல்பாடு இருந்தால் கையாள தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான சிறந்த ODI வீரர் ஐசிசி விருதை, விராட் கோலி பெற்றுள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக நியூயார்க் சென்றுள்ள அவருக்கு, ஐசிசி நிர்வாகம் விருதை அனுப்பி வைத்துள்ளது. 2023ஆம் ஆண்டில் நடந்த 20 ஒருநாள் போட்டிகளில் 1,377 ரன்கள் குவித்த அவர், சர்வதேச தரவரிசையில் 768 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக சரியாக விளையாடாத அவர், தற்போது கம்பேக் கொடுத்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டம் கரியக்கோவில், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆகிய பகுதிகளில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஹர்பஜன் சிங்கின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியின் தவிர்க்க முடியாத off-break- பவுலராக வலம் வந்தவர் அஷ்வின். டெஸ்ட், ODI, T20 என்று அனைத்து விதமான கிரிக்கெட்களிலும் அசத்தல் சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.