News June 3, 2024

BREAKING:தேர்தல் முடிவு அறிவிப்பில் பிரச்னை வருமா?

image

மக்களவைத் தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுவதால், தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி, SC தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். புகார்கள் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக தலையிட தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

News June 3, 2024

ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கை நிராகரிப்பு

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 150 ஆட்சியர்களை தொலைபேசியில் மிரட்டியதாக காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியிருந்தார். தேர்தல் அதிகாரிகளாக ஆட்சியர்கள் இருப்பதால், இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து இன்று மாலைக்குள் விளக்கமளிக்க ஜெய்ராம் ரமேஷுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, அவர் ஒரு வாரம் அவகாசம் கோரியிருந்தார்.

News June 3, 2024

கேதர் ஜாதவ் ஓய்வை அறிவித்தார்

image

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேதர் ஜாதவ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1389 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல்லைப் பொறுத்தவரை CSK, RCB, SRH, DC ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இறுதியாக, 2020இல் நியூசி.,க்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர், அதன்பின் அணியில் வாய்ப்பு கிடைக்காததால் ஓய்வை அறிவித்துள்ளார்.

News June 3, 2024

வர்த்தகர்கள் கவனமாக இருங்கள்: நிபுணர்கள்

image

பாஜக 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், பங்குச்சந்தை 3%க்கும் மேல் உயர்ந்து உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருப்பதால் வர்த்தகர்கள் கவனமாக இருக்க வேண்டுமென நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தால், சந்தை சற்று ஏறலாம் என்றும், கணிப்புகள் தவறினால் சந்தை சரியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

News June 3, 2024

+1, +2 துணைத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு

image

தமிழகத்தில் +2 துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1ஆம் தேதி வரையும், +1 துணைத் தேர்வு ஜூலை 2 முதல் 9ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. இத்தேர்வுகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அறிவித்துள்ளார். 12ஆம் வகுப்பில் 94.56% மாணவர்களும் 11ஆம் வகுப்பில் 91.17% மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 3, 2024

எதிர்ப்பு காரணமாக ‘வடக்கன்’ பெயர் மாற்றம்

image

பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகும் படத்திற்கு ‘வடக்கன்’ என பெயரிடப்பட்டது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், ‘வடக்கன்’ என்ற பெயருக்கு தணிக்கைக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போது படத்தின் பெயர் ‘ரயில்’ என மாற்றப்பட்டுள்ளது. மேலும், படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

News June 3, 2024

மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபர்

image

மெக்சிகோ நாட்டின் 200 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். மெக்சிகோ இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் போட்டியிட்ட கிளாடியா ஷீன்பாம் 60.7% வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவர் டிசம்பர் மாதம் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றி மூலம் மெக்சிகோ ஒரு ஜனநாயக நாடு என்பதை நிரூபித்துள்ளதாக கிளாடியா தெரிவித்துள்ளார்.

News June 3, 2024

முதலில் தபால் வாக்குகளை எண்ண திமுக கோருவது ஏன்?

image

சொற்ப வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய இடத்தில், தபால் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. உதாரணமாக, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அப்பாவு, அதிமுக வேட்பாளரை விட 49 வாக்குகள் குறைவாகப் பெற்று தோற்றார். அப்போது, தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது போன்ற குளறுபடிகளைத் தவிர்க்கவே, தபால் வாக்குகளை முதலில் எண்ண திமுக கோருகிறது.

News June 3, 2024

சுகுமார் சென்னின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

image

இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் சுகுமார் சென்னின் வாழ்க்கை வரலாறு படமாக தயாராகவுள்ளது. 18ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வியறிவற்ற மக்களும் எளிதாக வாக்களிக்கும் வகையில், சின்னங்களை அறிமுகம் செய்தது, ஆள் மாறாட்டத்தை தவிர்க்க அழியாத மையினை உருவாக்கியது என 1951-52 மக்களவைத் தேர்தலில் அவரது பங்களிப்பு அளப்பறியது.

News June 3, 2024

முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ₹12 லட்சம் கோடி உயர்வு

image

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் எதிரொலியாக, பங்குச்சந்தை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 2,507 புள்ளிகள் உயர்ந்து, 76,468 புள்ளிகளிலும், நிஃப்டி 733 புள்ளிகள் உயர்ந்து 23,263 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இதனால், முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு சுமார் ₹12 லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

error: Content is protected !!