News April 22, 2024

புவி தினத்தைக் கொண்டாடும் சிறப்பு டூடுல்

image

சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புவி தினத்தைக் கொண்டாடும் வகையில் இன்று கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இந்த டூடுலில், ஐஸ்லாந்தின் பனிப்பாறை, அமேசான் மழைக்காடு, மெக்சிகோவின் பவளப்பாறை, கைகோஸ் தீவின் வளங்கள், நைஜீரியாவின் பசுமை பெருஞ்சுவர் ஆகியவற்றின் படங்கள் இடம்பெற்றுள்ளன. பல்லுயிர் சூழல் & வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்துள்ளது.

News April 22, 2024

மசாலா பாக்கெட்களில் ஆபத்து

image

மசாலா தயாரித்து விற்பனை செய்யும் MDH-ன் Curry Powder, Mixed Masala Powder, Sambhar Masala மற்றும் Everest நிறுவனத்தின் Fish Curry Masala-இல் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எத்திலீன் ஆக்சைடு என்ற நச்சுப்பொருள் கலந்துள்ளதாம். இந்த மசாலாகளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால் ஹாங்காங், சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், குற்றம் சாட்டப்பட்ட மசாலா பிராண்டுகள் திரும்ப பெறப்பட்டன.

News April 22, 2024

என்ன விலை கொடுத்தேனும் சிஏஏ-வை அமல்படுத்துவோம்

image

என்ன விலை கொடுத்தேனும் சிஏஏ-வை பாஜக அமல்படுத்தும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனை சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கவே சிஏஏ கொண்டு வரப்பட்டதாகவும், அதை மம்தா பானர்ஜியும், அவர் கட்சியும் எதிர்ப்பதாக குற்றம்சாட்டினார். ஆனால், நாட்டில் என்ன விலை கொடுத்தேனும் அந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

News April 22, 2024

4 ஆண்டு பட்டப்படிப்பு முடித்தால் Ph. D சேரலாம்

image

4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பில் 75% மதிப்பெண் பெற்றவர்கள் நேரடியாக Ph. D படிப்பில் சேரலாம், நெட் எழுதலாம் என பல்கலை. மானிய குழு அறிவித்துள்ளது. Ph. D ஆய்வுப்படிப்பில் சேர முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், நெட் தேர்வு எழுத குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், 4 ஆண்டுகள் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்த விதிமுறைகளை யுஜிசி தளர்த்தியுள்ளது.

News April 22, 2024

காவி வண்ணத்தில் இலச்சினை மாற்றுவதில் தவறில்லை

image

காவி வண்ணத்தில் DD தொலைக்காட்சியின் இலச்சினையை மாற்றுவதில் தவறில்லை என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். காவி என்பது தியாகத்தின் வண்ணம் என்றும், நம் தேசியக் கொடியின் முதன்மை வாய்ந்த வண்ணம் எனவும் கூறினார். DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என மாற்றம் செய்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளதாகக் கூறிய அவர், ஆகாஷவாணி என்ற பெயர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே உள்ளதாகவும் தெரிவித்தார்.

News April 22, 2024

தமிழக எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 242 வழக்குகள்

image

தமிழக எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றங்களில் 242 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக உ.பி. எம்பி, எம்எல்ஏக்கள் மீது 1,144 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதனையடுத்து பீகாரில் 483, மகாராஷ்டிராவில் 424, ஒடிசாவில் 423, கேரளாவில் 334, ம.பி.யில் 321, கர்நாடகாவில் 242 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

News April 22, 2024

ஆயுள் பலத்தை கூட்டும் சித்ரகுப்தர் வழிபாடு!

image

உலகில் ஜனனித்த உயிர்களின் பாவ-புண்ணிய கணக்குகளை எழுதுபவர் சித்ரகுப்தர். சிவசக்தியின் அம்சமாக சித்திரத்தில் இருந்து உயிர்பெற்ற சித்ரகுப்தர் அவதரித்த தினமாக சித்திரை பௌர்ணமி (ஏப்ரல் 23) கருதப்படுகிறது. அந்நாளில் விரதம் இருந்து காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் திருக்கோயிலுக்கு சென்று, எருமைப்பாலில் அபிஷேகம் செய்து, எருமை பால் பாயசமும் படைத்து வழிப்பட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது நம்பிக்கை.

News April 22, 2024

சென்னையில் வெயில் உச்சத்தில் இருக்கும்

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்தாலும், வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் 2 நாள்களுக்கு 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் வெப்பம் பதிவாகும். எனவே, விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் பிற்பகல் நேரங்களில் வெளியே வர வேண்டாம்.

News April 22, 2024

சோனியா காந்தி மீது மோடி கடும் தாக்கு

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிட சோனியா காந்திக்கு போதிய தைரியமில்லை என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லாத காரணத்தால் மாநிலங்களவை மூலம் நாடாளுமன்றத்துக்கு சோனியா காந்தி வந்திருப்பதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அக்கட்சியினரே வாக்களிப்பதில்லை, அவர்களை நம்ப வேண்டுமா என்றும் மோடி விமர்சித்தார்.

News April 22, 2024

6 மாவட்டங்களில் மட்டும் பெண்கள் வாக்குப்பதிவு சரிவு

image

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஆண்களை விட பெண்களின் வாக்குப்பதிவு அதிகரித்தபோதிலும், 6 மாவட்டங்களில் மட்டும் குறைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் ஆண்களை விட பெண்கள் குறைவாகவே வாக்களித்துள்ளனர். இதற்கு கடும் வெயில் மற்றும் கோடை விடுமுறையை கழிக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணமே காரணமாக சொல்லப்படுகிறது.

error: Content is protected !!