News April 22, 2024

தேர்தல் ஆணையத்திற்கு “Rest in Peace”

image

தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பிடிஆர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார். தேர்தல் நேரங்களில் மதம், சாதி ரீதியாக பேசுவது குற்றம். அதைமீறி, ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய சமூகம் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததை குறிப்பிடும் வகையில் “Rest in Peace” என்று பதிவிட்டுள்ளார்.

News April 22, 2024

இந்த ஜூஸ் குடிங்க, புற்றுநோய், இதயநோய் வரவே வராது

image

அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளில் தக்காளியும் ஒன்று. அதில் புற்றுநோய் மற்றும் இதய நோயை தடுக்கும் லைகோபீன் புரோதம் அதிகம் உள்ளது. இதேபோல் தக்காளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் அதிகம் உள்ளது. அதனால் தக்காளியை ஜூஸ் செய்து தினமும் குடித்து வந்தால், புற்றுநோய், இதயம் தொடர்பான நோய்கள் வரவே வராது என்கிறது ஆய்வுத் தகவல் ஒன்று.

News April 22, 2024

IPL: ராஜஸ்தான் – மும்பை இடையே இன்று மோதல்

image

நடப்பு ஐபிஎல் தொடரின் 38ஆவது போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இதில், RR, MI அணிகள் மோதவுள்ளன. நடந்து முடிந்த 7 போட்டிகளில் 6இல் வென்ற RR அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. RR அணி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்க இன்று கடுமையாக போராடும். அதே நேரத்தில் ஃபிளே ஆப் சுற்றுக்கு முன்னேற, MI அணி வீரர்களும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.

News April 22, 2024

அயோத்தி ராமர் கோயிலில் 1.50 கோடி பேர் தரிசனம்

image

அயோத்தி ராமர் கோயிலில் கடந்த 3 மாதத்தில் 1.50 கோடி பேர் தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அயோத்தி கோயில் ஜனவரி மாதம் 22ஆம் தேதி திறக்கப்பட்டது. அதையடுத்து அங்கு நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நாள்தோறும் கோயிலுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவதாகவும், இதுவரை 1.50 பேர் தரிசனம் செய்திருப்பதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 22, 2024

பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு

image

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்.19இல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் மணிப்பூரில் 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவின் போது அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வன்முறை நடந்தது. அதனால், இன்று அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

News April 22, 2024

வீட்டில் கருட புராணம் படிக்கலாமா?

image

கருடபுராணமானது, இந்து சமய பதினெண் புராணங்களில் 17ஆவது புராணம். விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போல அது அமைந்துள்ளது. அதை வீட்டில் படிக்கலாமா, கூடாதா என்ற சந்தேகம் பலரிடையே உள்ளது. மரண பயத்தை விட்டுவிட்டால், வாழ்வில் வேறு எந்த பயமும் நம்மைத் தாக்காது. எனவே அழிவில்லாத ஆன்மாவின் பயணம் குறித்து அறிய கருடபுராணம் படிப்பது நல்லதே, அதனால் தீங்கு நிகழாது என்று ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.

News April 22, 2024

சூரியன் குறித்த தரவை தொடர்ந்து அனுப்பும் ஆதித்யா-1

image

சூரியன் குறித்த தரவுகளை ஆதித்யா 1 விண்கலம் இஸ்ரோவுக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறது. சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்தாண்டு ஆதித்யா 1 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. அந்த விண்கலம் விண்வெளியில் இருந்து சூரியன் குறித்த தகவலை அனுப்பி வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சூரிய கிரகணத்துக்கு முன்பும், பின்பும், சூரியகிரகணத்தின்போதும் ஆதித்யா 1 விண்கலம் தரவை சேகரித்தாகவும் அவர் கூறினார்.

News April 22, 2024

பொது மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்

image

பதஞ்சலி விளம்பரம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ் பொது மன்னிப்பு கோரினார். அலோபதி மருத்துவத்தின் இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்ந்த வழக்கில், பாபா ராம்தேவ் 2 முறை உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார். ஆனால், அவரின் மன்னிப்பை ஏற்காத நீதிமன்றம் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தியது. இந்நிலையில், நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு பொது மன்னிப்பு கோரியுள்ளார்.

News April 22, 2024

விமானந்தாங்கி போர் கப்பல்கள் வைத்துள்ள நாடுகள்

image

தொலைவிலுள்ள நாடுகளின் மீது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த விமானந்தாங்கி கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் 12 நாடுகளிடம் 28 விமானந்தாங்கி கப்பல்கள் உள்ளன. அமெரிக்காவிடம் அதிகபட்சமாக 11 விமானந்தாங்கி கப்பல்கள் உள்ளன. சீனாவிடம் 3, இந்தியா, இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பானிடம் தலா 2, ரஷ்யா, பிரான்ஸ், துருக்கி, ஸ்பெயின், பிரேசில், தாய்லாந்திடம் தலா 1 கப்பல் உள்ளன.

News April 22, 2024

₹3,100 கோடி சொத்துக்கள் வைத்துள்ள வாரிசு நடிகர்

image

பாலிவுட் நடிகரான கிருத்திக் ரோஷனுக்கு ₹3,100 கோடி சொத்துக்கள் உள்ளன. மேலும் அவரின் HRX நிறுவன மதிப்பு ₹7,300 கோடி ஆகும். திரைப்படங்களில் நடிக்க ₹100 கோடி சம்பளமாக வாங்குகிறார். இதன்மூலம், பாலிவுட்டில் அதிக சொத்து வைத்துள்ள வாரிசு நடிகராக அவர் உள்ளார். சல்மான் கான் ( ₹2,900 கோடி), அமீர் கான் (₹1,850 கோடி), ராம்சரண் (₹1,300 கோடி) உள்ளிட்டோரை விட அவருக்கே அதிக சொத்துகள் உள்ளன.

error: Content is protected !!