News April 22, 2024

ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்தேனா?

image

ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்ததைத் தான் தடுத்ததாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். வாக்குக்குப் பணம் கொடுக்கும் கலாசாரம் 2011க்குப் பிறகு தான் வந்ததாகக் கூறிய அவர், தான் போட்டியிட்ட எந்தத் தேர்தல்களிலும் பணம் கொடுத்ததில்லை என்று தெரிவித்தார். மேலும், ஆர்.கே.நகரில் இபிஎஸ் அணியினர் தான் பணம் கொடுத்ததாகவும், அதைப் பார்த்துத் தனது கட்சியினர் டோக்கன் கொடுத்தபோது அதனை தடுத்து நிறுத்தியதாவகவும் அவர் கூறினார்.

News April 22, 2024

மே 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் இயங்காது

image

41-வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5ஆம் மதுரையில் மாநாடு நடைபெறும் என வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். இதனால், மே 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து வணிகர்களை காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

News April 22, 2024

Purple தொப்பிக்கு 5 பேர் போட்டி

image

2024 ஐபிஎல்லில் Purple தொப்பிக்கு 5 பேர் இடையே போட்டி நிலவுகிறது. அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்க்கு Purple தொப்பி வழங்கப்படும். இதுவரை நடந்த 37 போட்டிகள் முடிவின்படி, மும்பையின் பும்ரா, பஞ்சாபின் படேல் 13 விக்கெட்டையும், ராஜஸ்தானின் சாஹல், மும்பையின் கோட்சி 12 விக்கெட்டையும், பஞ்சாபின் சாம் கர்ரன் 11 விக்கெட்டையும் வீழ்த்தி, Purple தொப்பிக்கான போட்டியில் உள்ளனர்.

News April 22, 2024

2024 மிஸ் திருநங்கையாக ஷாம்சி தேர்வு

image

விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மிஸ் திருநங்கை போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்றனர். 2024ஆம் ஆண்டிற்கான மிஸ் திருநங்கை போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஷாம்சி முதலிடமும், புதுவை வர்ஷா இரண்டாமிடமும், தூத்துக்குடி சுபப்பிரியா மூன்றாமிடமும் பிடித்தனர்.

News April 22, 2024

சிறிய படங்களுக்கு ஆதரவு அளியுங்கள்

image

சிறிய படங்கள் வந்தால்தான் சினிமாத் துறை நன்றாக இருக்கும் என நடிகரும், கார்த்திக் சுப்புராஜின் தந்தையுமான கஜராஜ் கூறியுள்ளார். அதுபோல நல்ல கதைக்களம் உள்ள படங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறுக் கேட்டுக்கொண்ட அவர், மகன் பட்ட கஷ்டம் தனக்கு தெரியும், அவரும் அப்படிப் படங்களை எடுத்துத்தான் வந்திருப்பதாக கூறினார். மேலும், சிறிய படங்களே சினிமா துறையில் வேலை வாய்ப்புகளை அதிகமாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

News April 22, 2024

உடல் சூட்டைத் தணிக்கும் மஞ்சள் பானகம்

image

கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டின் காரணமாக ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்னைகளில் இருந்து தப்பிக்க மஞ்சள் பானகத்தைப் பருகலாமென மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். பசும் மஞ்சளைத் தோல் சீவி அரைத்துச் சாறு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சீரகம், மிளகு, ஏலக்காய், சுக்கு, சாதிக்காய், எலுமிச்சைச் சாறு, தேன் கலந்தால் மஞ்சள் பானகம் ரெடி. இப்பானகத்தைக் குடித்தால் அஜீரணத்தால் வரும் தலைவலி நீங்குமாம்.

News April 22, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு

image

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,845க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.89க்கும், கிலோ வெள்ளி ரூ.1000 குறைந்து ரூ.89,000க்கும் விற்பனையாகிறது.

News April 22, 2024

ஹிந்து பெண்களின் தாலியைப் பறிக்கும் அரசு?

image

இந்துப் பெண்களின் தாலியைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தானில் பேசிய அவர், நாட்டின் செல்வங்களில் ஊடுருவல்காரர்களுக்கும் அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் முதல் உரிமை என்கிறது காங்கிரஸ். அதன் தேர்தல் அறிக்கையை படித்துப் பாருங்கள். யாருடைய சொத்தை யாருக்கு கொடுப்பது? பாஜக ஒருபோதும் அதனை அனுமதிக்காது” எனக் கூறினார்.

News April 22, 2024

மே.1இல் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ்!

image

விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீசாகி வரவேற்பை பெற்று வருவதையொட்டி, அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் வகையிலான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித்தின் பிறந்தநாளையொட்டி மே.1ஆம் தேதி தமிழகம் முழுவதும் மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

News April 22, 2024

2024 ஐபிஎல்: அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள்

image

2024 ஐபிஎல்லில் இதுவரை 37 போட்டிகள் முடிந்துள்ளன. அதன் முடிவின்படி, ஆர்சிபி வீரர் கோலி 8 போட்டிகளில் விளையாடி 379 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். 2ஆவது இடத்தில் ஹைதராபாத் வீரர் டி.எம். ஹெட் (324 ரன்கள்), 3ஆவது இடத்தில் ராஜஸ்தான் வீரர் பராக் (318 ரன்கள்), 4ஆவது இடத்தில் குஜராத் வீரர் ஷுப்மன் கில் ( 298 ரன்கள்), 5ஆவது இடத்தில் மும்பை வீரர் ரோஹித் ஷர்மா (297 ரன்கள்) உள்ளனர்.

error: Content is protected !!