News April 24, 2024

போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும்

image

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதைக்கும்பல் காவலர்களைத் தாக்கிய சம்பவத்தை மேற்கோள் காட்டி, போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்காவிட்டால் இளைஞர்களின் எதிர்காலத்தை அது நாசமாக்கும் என்று எச்சரித்தார். மேலும், தமிழகத்தில் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டியது திமுக அரசின் கடமை என்றும் கூறினார்.

News April 24, 2024

புற்றுநோயை விளைவிக்கும் ஜான்சன் பேபி பவுடர்

image

ஜான்சன்ஸ் பவுடர் பயன்படுத்தியதால் அரிய புற்றுநோய்க்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.375 கோடி இழப்பீடு வழங்க சிகாகோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெரசா கார்சியா என்ற பெண், ‘மீசோதெலியோமா’ புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு ஜெ.ஜெ (30%) & கென்வியூ (70%) பேபி பவுடர்ககளில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் ஃபைபரே காரணமென ஆய்வக அடிப்படையில் நிரூபணமானது குறிப்பிடத்தக்கது.

News April 24, 2024

கௌதம் மேனனின் யோகா டைரக்டர்

image

சைக்கிளிங், யோகா போன்ற உடல் & மனவளப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருபவர் இயக்குநர் லிங்குசாமி. ஐதராபாத்தில் உள்ள குரு தாஜி தியானக் கூடத்தின் சிறப்பு யோகா டிரெய்னரான அவரிடம் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மாணவராகச் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜிம் வொர்க் அவுட்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த கௌதம், இப்போது தனது நண்பர் லிங்குசாமியின் ஆலோசனைப்படி யோகா செய்யத் தொடங்கி இருக்கிறார்.

News April 24, 2024

மீண்டும் இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவியை இணைக்க முயற்சி

image

அதிமுகவை (இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி) மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா இறங்கியுள்ளார். தேர்தல் வரை அமைதியாக இருந்த சசிகலா, தற்போது “உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள்” என்ற எம்ஜிஆரின் மேற்கொளைக் குறிப்பிட்டு, தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள படிவத்தில் பெயர், முகவரி, ஆதார் எண், மாவட்டம், சட்டமன்றத் தொகுதி, பொறுப்பு போன்றவற்றை குறிப்பிடவும் அறிவுறுத்தியுள்ளார்.

News April 24, 2024

இந்தியப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலா?

image

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மத்தியக் கிழக்கு & மேற்காசிய நாடுகளில் ஏறத்தாழ ஒரு கோடி இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ₹4.56 லட்சம் கோடியை அந்நியச் செலாவணியாக இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். எனவே இப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தால், அது பல வழிகளில் இந்தியப் பொருளாதாரத்திற்குச் சிக்கலாக அமையும்.

News April 24, 2024

மோடி மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

image

பெண்களின் தாலி உள்ளிட்ட சொத்துகளை முஸ்லிம்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் காங்கிரஸ் அளித்துவிடும் எனப் பேசியதற்கு மோடி மீது ஏன் EC நடவடிக்கை எடுக்கவில்லை என்று கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், மோடியின் பேச்சைச் சுட்டிக்காட்டி, நாட்டில் அரசியல் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்ததில்லை என்றார். மோடியிடம் விளக்கம் கேட்டுத் EC நோட்டீஸ் அனுப்பவும் அவர் வலியுறுத்தினார்.

News April 24, 2024

குகேஷுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

image

FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், வெறும் 17 வயதில், இப்போட்டியில் இதுவரை இல்லாத வகையில் இளம் வீரராகக் குகேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளதாகப் பாராட்டியுள்ளார். மேலும், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக, சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற அவர் வாழ்த்து தெரிவித்தார்.

News April 24, 2024

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது

image

கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகள் விடுமுறையில் வகுப்புக்கு வர வேண்டும் என மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கோடை விடுமுறையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் வைக்க கூடாது. மீறி சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

News April 24, 2024

சமந்தா அணிந்த வாட்சின் விலை

image

‘இட்ஸ் ஃபேஷன் பேபி’ என்ற தலைப்பில் நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தப் படங்களில் வெள்ளை நிற மாடல் உடையில் செம ஸ்டைலாக இருக்கும் அவர் அணிந்து இருந்த வாட்ச் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பாம்பு போன்ற வடிவில் இருக்கும் Serpenti Spiga பிராண்ட் வாட்சின் விலை ரூ.70 லட்சமாம். சமந்தாவின் அழகும் மட்டுமல்ல விலையும் ரசிகர்களுக்கு கிறக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 24, 2024

இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்

image

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் காணப்படுகிறது. ஆசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் நிலவும் உயர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவது, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவை காரணமாக வர்த்தக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 640 புள்ளிகள் உயர்ந்து 73,728ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 190 புள்ளிகள் உயர்ந்து, 22,337ஆக இருந்தது.

error: Content is protected !!