News April 24, 2024

BREAKING: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ விளக்கம்

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளைக் கணக்கிடுவதில் மாறுபாடு நிகழ்ந்தது ஏன்? என்று தேர்தல் அதிகாரி சாகு முதல்முறையாக விளக்கமளித்துள்ளார். செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிட்டதால் தவறு ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால், செயலியில் கிடைத்த தகவலை அறிவித்ததாக விளக்கமளித்துள்ளார்.

News April 24, 2024

சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ

image

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காகப் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதத்தை அபராதமாகச் செலுத்துமாறு PBKS அணியின் கேப்டன் சாம் கர்ரனுக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. நடுவரின் முடிவில் வேறுபாடு காட்டியதை அடுத்து, நடத்தை விதிகள் பிரிவு 2.8 இன் கீழ் லெவல் 1 குற்றத்திற்காக கர்ரனுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், அபராதத்தைக் கட்ட ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

உலகின் முதல் படம் எது தெரியுமா?

image

1,888 அக்டோபரில் இங்கிலாந்தில் Roundhay Garden scene என்ற படம் வெளியானது. அதை பிரான்சை சேர்ந்த லூயிஸ் லீ பிரின்ஸ் தயாரித்து, இயக்கியிருந்தார். சத்தம் இல்லாது வெறும் காட்சியை மட்டுமே கொண்ட அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டராகவும் அவரே செயல்பட்டார். 1.66 வினாடிகள் ஓடக்கூடிய அதுவே உலகின் முதல் படமாகும். இந்தியாவில் 1913இல் வெளியான ராஜா ஹரிசந்திரா, முதல் இந்திய படமாகும்.

News April 24, 2024

BREAKING: தேர்தல் தேதி மாற்றப்படுமா?

image

நாடு முழுவதும் வெப்ப அலை வீசும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், வானிலை மையம் – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதற்கட்ட தேர்தலில் வெயிலால் பலர் உயிரிழ்ந்தனர். வாக்குபதிவு சதவீதமும் சரிந்தது. ஏப்.26இல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ள சூழலில் ஆலோசனை நடைபெறுகிறது. வெயில் தாக்கத்தால் தேர்தல் தேதி மாற்றப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 24, 2024

டு பிளெசிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

image

ஆட்ட நடத்தை விதிகளை மீறியதற்காக ரூ.12 லட்சத்தை அபராதமாகச் செலுத்துமாறு RCB அணியின் கேப்டன் டு பிளெசிக்கு பிசிசிஐ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவில் நடந்த 36ஆவது லீக் போட்டியில், KKR-க்கு எதிராக RCB அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. பந்து வீசுவதில் அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்தால் பிளெசிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

இதைச் செய்தால் மின்விசிறி வேகமாகச் சுற்றும்

image

சில வீடுகளில் மின் விசிறியை முழு வேகத்தில் வைத்தும் காற்று வராது. இதற்கு அது மெதுவாகச் சுற்றுவதே பிரச்னையாகும். தூசி, ஒட்டடை இருந்தாலும், அது வேகமாகச் சுற்றாது. ஆதலால் அதைத் துடைத்துச் சுத்தப்படுத்தினால் வேகம் அதிகரிக்கும். குறைந்த மின்னழுத்தப் பிரச்னை இருந்தாலும் மெதுவாகச் சுற்றும். இதைக் கண்டறிந்து, மின்வாரியத்திடம் கூறிச் சரி செய்தால், மின் விசிறியின் வேகம் சீராகும்.

News April 24, 2024

10 நாள் அவகாசம் கோரிய நயினார் நாகேந்திரன்

image

மக்களவைத் தேர்தலையொட்டி நெல்லை விரைவு ரயிலில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் விடுதி மேலாளர் உள்ளிட்டோரிடம் இருந்து ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இவ்விகாரம் தொடர்பாக இன்று நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், நேரில் ஆஜராக 10 நாள்கள் அவகசாம் கேட்டுத் தனது வழக்கறிஞர் மூலம் அவர் கடிதம் அளித்துள்ளார்.

News April 24, 2024

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

image

தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தமிழகம், கர்நாடகா வடக்கு, ம.பி. கிழக்கு, உ.பி. கிழக்கு, ஒடிசா, மேற்குவங்கத்தில் வெப்ப அலை வீசும். இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் வெயில் கடுமையாக இருக்கும் நேரத்தில் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 24, 2024

வாக்குப்பதிவு சதவீதத்துக்கும் முடிவுகளுக்கும் தொடர்பா?

image

வாக்குப் பதிவு அதிகமாக இருந்தால் ஆட்சி மாற்றம் நடக்கும் எனப் பொதுவாகப் பேசப்படுகிறது. வாக்குப் பதிவு சதவீதத்துக்கும், வெற்றி – தோல்விக்கும் தொடர்பில்லை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
வாக்குப்பதிவு அதிகமாக உள்ள தொகுதிகளில் கடும் போட்டி இருக்கிறதெனச் சொல்லலாம். எப்படியாவது தங்கள் தரப்பு வெல்ல வேண்டும் என்பதற்காகப் பெருமளவில் வாக்களிக்கிறார்கள் என்றே எடுத்துக்கொள்ள முடியும்.

News April 24, 2024

சாஹலுக்கு சாதனை படைக்க இன்னும் ஒரு விக்கெட்டே தேவை

image

ஐபிஎல்லில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை படைக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சாளர் யுவேந்திர சாஹலுக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் கைப்பற்றும் முதல் விக்கெட் மூலம், ஐபிஎல்லில் யுவேந்திர சாஹல் புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!