India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் உள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. நாடு முழுவதும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்காததால் அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் காத்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 2ஆவது இடத்தில் உள்ளார்.
கேரளா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வயநாட்டில் முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ராகுல் காந்தி முன்னிலை வகித்து வருகிறார். சிபிஐ வேட்பாளர் அனி ராஜா 2ஆவது இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் சுரேந்திரன், பி.எஸ்.பி வேட்பாளர் பி.ஆர் கிருஷ்ணன்குட்டி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் .
மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியின் வெற்றி கவனிக்கத் தக்கதாக இருக்கும். திமுக சார்பில் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் களம் காண்கிறார். அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிட்டார். இவர் ஏற்கெனவே இங்கு எம்.பியாக இருந்தவர். பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தல் அரசியலுக்கு வந்துள்ளார். இதனால், இத்தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது.
புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக +, பாஜக +, நாதக ஆகிய கட்சிகள் இதுவரை எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை.
மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் பயாஸ் அகமது மிர் களம் கண்டார். இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் உமர் அப்துல்லா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அவரைக் காட்டிலும் பயாஸ் அகமது மிர் பின்தங்கியே உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி களம் காண்கிறார். அவரை எதிர்த்து தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் மியான் அல்ஃடாப் அகமது லார்வி போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதல் சுற்றில் மெஹபூபா முப்தி முன்னிலை வகிக்கிறார். அகமது லார்வி பின்தங்கியுள்ளார்.
காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. முதல் 10 நிமிடங்களில் 102 தொகுதிகளில் பாஜகவும் 39 இடங்களில் காங்கிரசும் முன்னிலை வகிக்கின்றன. மற்ற கட்சிகள் 5 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூரில் முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், டி.ஆர்.பாலு முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் 2ஆவது இடத்திலும், நாம் தமிழர், தமாகா வேட்பாளர்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முன்னதாக 2019 தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதும், 1 தொகுதியை மட்டுமே அக்கூட்டணி வென்றது. இந்நிலையில், இத்தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனியாக களம் கண்டுள்ளன. இதனால், தமிழகத்தில் பூஜ்ய கணக்கை பாஜக மாற்றுமா? வெல்லப்போவது யார்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Sorry, no posts matched your criteria.