India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாலை 7 மணி வரை தேனி, தென்காசி, கோயம்புத்தூர், திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், நீலகிரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட பெங்களூருவை சேர்ந்த 52 வயது தொழிலதிபர் ஒருவர் இணைய மோசடியில் ₹5.2 கோடியை இழந்துள்ளார். வாட்ஸ்ஆப் மூலம் அவரைத் தொடர்புகொண்ட ஒரு கும்பல், பங்குச் சந்தையில் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசையைத் தூண்டியுள்ளனர். பின்னர் bys-app.com என்ற லிங்க்கை அனுப்பி, ₹5.2 கோடி முதலீடு செய்ய வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.
சூரத் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகிறார். இதனை ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது என்று தனது X தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், இந்த தேர்தல் அனைவருக்கும் மிக முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் பெரும்பாலான பள்ளி-கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை விடப்பட்டுவிட்டன. இதனால் வீடுகளில் இருக்கும் மாணவ மாணவிகள், இந்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு கல்வியை மேம்படுத்த முடியும். அதாவது, தாங்கள் பலவீனமாக இருப்பதாகக் கருதும் பாடப்பிரிவை எடுத்துக் கொண்டு, அதன்மீது கூடுதல் கவனம் செலுத்தலாம். சிறப்பு வகுப்புகளுக்குச் சென்று, அடுத்த கல்வி ஆண்டுக்குத் தயாராகலாம்.
சட்டக்கல்வியை 3 ஆண்டுகளாகக் குறைக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. 5 ஆண்டு கல்வி மாணவிகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், வெளிநாடுகளில் 3 ஆண்டு மட்டுமே சட்டக்கல்வி உள்ளதாகவும் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டது. இதில், மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், 5 ஆண்டுகளே போதுமானதல்ல, அதுவே குறைவு எனக் கருதுவதாகவும் கூறியது.
குஜராத் மாநிலம், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். பரிந்துரை செய்தவரின் கையெழுத்து பிரச்னையால் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டனர். இதனையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியலில் முகேஷ் தலால் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
ஈராக்கின் ஜும்மார் நகரில் இருந்து வடகிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் பிரதமரை ஜோ பைடன் சந்தித்த மறுநாள் நிகழ்ந்துள்ள இத்தாக்குதல் சம்பவத்தை நடத்திய குற்றவாளிகள் சிரியா எல்லையில் இருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக ஈராக் பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் பாணியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, விஷால் சைக்கிளில் சென்று வாக்குச் செலுத்தினார். இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தன்னிடம் வாகனம் இல்லாததால் சைக்களில் சென்று வாக்களித்ததாக அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், அப்பா, அம்மாவிடம் தான் வாகனம் உள்ளதாக கூறிய அவர், இங்குள்ள மோசமான சாலைகளில் வண்டியில் செல்வது கஷ்டம் எனவும் தெரிவித்தார்.
லைஃப் மிஷன் திட்டம் முதல் தங்கம் கடத்தல் வழக்கு வரை பல ஊழல் குற்றச்சாட்டுகள் பினராயி விஜயன் மீது உள்ளன என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பத்தனம்திட்டாவில் பேசிய அவர், ஜனநாயகத்தைக் காக்க ராகுல் போராடுகிறார். காங்கிரஸையும், ராகுலையும் கடுமையாக விமர்சிக்கும் பினராயி விஜயன் பாஜகவை குற்றம் சொல்வது இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அவருக்கு எதிராக மோடி அரசு நடவடிக்கை எடுக்காது எனக் கூறினார்.
தமிழகத்தில் மாலை 6.30 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
Sorry, no posts matched your criteria.