India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெற அனுமதி கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திகார் சிறையில் இருக்கும் அவர் தனது உடல்நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவ உதவி கோரியிருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றச் சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
20 ஆண்டுகளுக்குப் பின் ரீ-ரிலீஸ் ஆகியுள்ள ‘கில்லி’ படம் வசூலைக் குவித்து வருகிறது. இதையடுத்து, ரீ-ரிலீஸிலும் இப்படத்தை வெற்றிப்படமாக மாற்றிய ரசிகர்களுக்கு இயக்குநர் தரணி நன்றி தெரிவித்துள்ளார். விஜய்யின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய கில்லி, ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பாக்ஸ் ஆபீசிலும் கில்லியாக வளம் வருகிறது. எல்லா ஏரியாவிலும் தளபதி ஆரவாரம் தெரிகிறது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விதிமுறைகளை மீறி, மகாலட்சுமி திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதற்காக அவர் டோக்கன் வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகக் கூறி தள்ளுபடி செய்தது.
KKR அணிக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் கோபத்தை வெளிப்படுத்திய விராட் கோலிக்குப் போட்டித் தொகையில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தனது இடுப்புக்கு மேலே வந்த பந்தை அடித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதற்கு நடுவர் அவுட் கொடுக்கவே, நோ பால் கேட்டு முறையிட்டார். ஆனால், கோலி கிரீசுக்கு வெளியே நின்றதால் நடுவர் நோ பால் கொடுக்க மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர் கோபத்துடன் வெளியேறினார்.
இந்தியாவை குஜராத்தை போல் மாற்ற பாஜக விரும்புவதாக தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். கேரளாவில் INDIA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் இன்று பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் வெற்றிக்காக பிரதமர் அவதூறுகளை பேசி வருகிறார். தென் இந்திய மக்களை குஜராத் மனநிலைக்கு மாற்ற விரும்புகிறார்கள். ஆனால், நாம் இந்தியாவை தமிழ்நாடு – கேரள மக்களின் மனநிலைக்கு மாற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
ஜெய்பூர் மைதானத்தில் மும்பை அணியின் தொடர் தோல்விக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐ.பி.எல் தொடரில் இன்று ராஜஸ்தான் – மும்பை அணிகள் ஜெய்பூரில் மோதவுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் ஜெய்பூரில் மும்பைக்கு எதிராக நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் ராஜஸ்தான் அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. இதனால் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ்குமார் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன்மூலம், நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதாலும், சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்களை திரும்பப் பெற்றதாலும் முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நிலையான அரசைக் கொடுத்ததால் தான் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். 2019இல் மக்கள் பாஜகவுக்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள். அதன்மூலம் ராமா் கோவில், முத்தலாக் தடைச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகிவற்றை எதிர்ப்பின்றிக் கொண்டு வர முடிந்தது என்ற அவர், தனிப் பெரும்பான்மையுடன் கூடிய அரசே நாட்டின் எதிர்காலத்துக்குத் தேவை என்றும் கூறினார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், 39 மையங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்ட்ராங் ரூம்கள் தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து மையங்களிலும் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
வாரிசு பிரச்னை சினிமாவில் அதிகம் இருப்பதாக பிரீத்தி ஜிந்தா குற்றம் சாட்டியுள்ளார். சினிமா பின்னணி இல்லாதவர்களுக்கு இந்திய திரையுலகம் சாதகமாக இல்லை. சினிமா பின்புலம் இல்லாதவர்கள் ஒருவித பயத்துடனே இருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. எல்லா ரோல்களையும் செய்யும் திறமை இருந்தாலும், அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற அவர், எதிர்கால சினிமாவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
Sorry, no posts matched your criteria.