India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெறும் RR – MIக்கு இடையேயான IPL போட்டியில் டாஸ் வென்ற MI கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் RR பவுலிங் செய்ய உள்ளது. இதுவரை இரு அணிகளும் 7 போட்டிகளால் விளையாடியுள்ள நிலையில், 6 போட்டிகளில் வெற்றி பெற்ற RR புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திலும், 3 போட்டிகளில் வெற்றி பெற்ற MI 7ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
லக்னோவிடம் அடைந்த தோல்விக்கு சொந்த மண்ணில் சிஎஸ்கே பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை அணி, லக்னோவை சேப்பாக்கத்தில் நாளை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கெனவே சென்னை, லக்னோவிடம் தோல்வி அடைந்த நிலையில், இந்த போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது சென்னை அணிக்கு எளிதாகும். நடப்பு தொடரில் இந்த இரு அணிகளுமே 7 போட்டியில் விளையாடி 3 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளன.
கமல்ஹாசனின் மாமன் சீனிவாசன் (92) வயது முதிர்வு காரணமாகக் கொடைக்கானலில் காலமானார். இதுகுறித்து கமல்ஹாசன் X பக்கத்தில், “எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தவர். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாகத் திகழ்ந்தவர்” என்று பதிவிட்டிருக்கிறார். சீனிவாசனின் இறுதி ஊர்வலம் நாளை (23.04.2024) காலை நடைபெறவுள்ளது.
8 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சத்ய பிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளார். வேலூர் தொகுதிக்குட்பட்ட 8 மையங்களில் வாக்களிக்க வந்த பொதுமக்களை திமுகவினர் தடுத்ததாகவும், அதனால் பொதுமக்கள் வாக்களிக்காமல் வீடு திரும்பியதாகவும் அந்த மனுவில் ஏசிஎஸ் குறிப்பிட்டுள்ளார். 2019 தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்திடம் அவர் தோற்றது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு மக்கள் ஓய்வு கொடுக்க தயாராகிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் ஆர்எஸ்எஸ் சிந்தாந்தப் பேச்சுக்களை மக்களிடம் பிரதமர் மோடி எடுத்துச் செல்கிறார். வெறுப்பை விதைக்கும் அவரின் பேச்சுக்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மக்களை போல் ஜூன் 4க்கு பிறகு, இந்திய மக்கள் அவருக்கு நிச்சயம் ஒய்வு கொடுப்பார்கள் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் மாண்டியா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடாவின் சொத்து மதிப்பு ரூ.622 கோடியாக உள்ளது. 2ஆம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இவரே அதிகச் சொத்து மதிப்பு வைத்துள்ளார். 2ஆம் இடத்தில் 593 கோடி சொத்துடன் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேசும், 3ஆம் இடத்தில் 278 கோடி சொத்துக்களுடன் உ.பி மதுரா தொகுதி பாஜக வேட்பாளர் ஹேமமாலினியும் உள்ளனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுகவுக்கு வாக்களிக்காத பெண்ணை திமுகவினர் அடித்தே கொன்றுவிட்டதாக அண்ணாமலை X தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அப்பெண் முன் பகை காரணமாகவே கொல்லப்பட்டதாக காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் மீது வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி மாடல் போன்களில் திரையில் பச்சை நிறக் கோடு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மொபைல் திரையை இலவசமாக மாற்றிக் கொடுப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸியின் S20, S20+, S20 Ultra, Note 20 Ultra, S21, S21+, S21 Ultra, S22 Ultra ஆகிய மாடல்களுக்கு இது பொருந்தும். மேலும், மூன்றாண்டுகளுக்குள் வாங்கிய மொபைல்களுக்கு மட்டுமே (ஏப்.30க்குள்) மாற்றிக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலை போலியான தகவலைப் பரப்பியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.