India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் போட்டியில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ராஜஸ்தான் வீரர் சாஹல். இன்று மும்பைக்கு எதிரான போட்டியில் முகமது நபி விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து பிராவோ 183, பியூஸ் சாவ்லா 181, புவனேஷ்குமார் 174, அமித் மிஸ்ரா 172, சுனில் நரைன் 172 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
ரஜினியின் கூலி படத்தின் டீசர் மாஸாக இருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்திற்கு கூலி என பெயரிட்டு, படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. படு மாஸாக வெளியாகியுள்ள இந்த டீசரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், படத்தின் டீசர் போஸ்டரை பகிர்ந்த தனுஷ், ‘மாஸ்’ என ஒற்றை வரியில் படத்தை புகழ்ந்துள்ளார்.
இஸ்லாமியர்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடைய X பதிவில், “மோடியின் நச்சுப் பேச்சு மிகவும் மோசமானது மற்றும் வருந்தத்தக்கது. தோல்வியை தவிர்ப்பதற்காக மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்புப் பேச்சை பேச ஆரம்பித்துள்ளார் மோடி. இந்த பாகுபாடுதான் மோடியின் கியாரண்டி. தேர்தல் ஆணையமும் வெட்கமில்லாமல் பாராமுகமாக இருக்கிறது” என்று சாடியுள்ளார்.
சூரத்தில் காங்., வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது என பாஜகவை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், அரசியலமைப்பைத் தகர்க்கும் ஒரு படியாக, மக்கள் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், இந்தத் தேர்தல் அரசை தேர்ந்தெடுக்க மட்டுமல்ல, அரசியலமைப்பை காக்கவும் என்றார்.
மோடியின் சர்ச்சை பேச்சுத் தொடர்பாக கருத்து தெரிவிக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தேர்தல் பரப்புரையில் பேசிய மோடி இஸ்லாமியர்கள் தொடர்பாக சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, புகாரும் அளித்திருந்தன. இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர், மோடியின் பேச்சுத் தொடர்பாக பதில் கூற விரும்பவில்லை என்றார்.
‘கில்லி’ படத்தில் நடிக்க தனக்கு வந்த வாய்ப்பை மறுத்ததாக நடிகை கிரண் தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டியில், த்ரிஷா முதலில் இப்படத்தில் நடிக்க மறுத்ததும், எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அப்போது நான் ஒருவரை தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்ததால் இந்த வாய்ப்பை தவறவிட்டேன். அதுதான் நான் செய்த தவறு எனக் கூறியுள்ளார். மேலும், அந்தச் சமயத்தில் பல படங்களை தவறவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸை தொட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 12 நகரங்களில் வெப்பம் 40 டிகிரியை தாண்டி கொளுத்தியது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். ஒருபக்கம் மழை பெய்துவரும் நிலையில், மறுபுறம் வெப்பம் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் வெப்பம் உச்சத்தை தொட்டு வருகிறது.
வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி பேசியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல அரசியல் கட்சிகளும் பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துவரும் நிலையில். காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
இதுவரை இருந்த பிரதமர்களில் யாரும் மோடியைப் போல அடாவடியாக பேசியது இல்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியதற்கு பதிலளித்த அவர், மக்களின் பணத்தைப் பறித்து இஸ்லாமியர்களிடம் கொடுப்போம் என காங்., எப்போது பேசியது? என கேள்வியெழுப்பினார். மேலும், மன்மோகன் சிங் குறித்து மோடி தவறாக பேசியதாக கூறிய அவர், முன்னாள் பிரதமர்களை மோடி மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
தன்னை அரசியலுக்கு வர வைத்துவிட வேண்டாம் என விஷால் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் நல்லது செய்தால் தான் அரசியலுக்கு வர வேண்டிய தேவை இருக்காது. அடுத்தடுத்தப் படங்களில் நடிக்கும் வேலையை பார்ப்பேன் என்று கூறிய அவர், ஏழைக்கு ஒரு வசதி, பதவியில் இருப்பவர்களுக்குச் சலுகை என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். சில நாள்களுக்கு முன்பு 2026 தேர்தலில் போட்டியிடுவேன் என விஷால் தெரிவித்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.