News April 24, 2024

உ.பி., அமைச்சரின் மூக்கை உடைத்த மக்கள்!

image

உ.பி.,யில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சரின் மூக்கை மக்கள் உடைத்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று முகமதுபூர் கதார் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சஞ்சய் நிஷாத் பங்கேற்றார். இவரது மகன் பிரவீன் கபீர்நகர் பாஜக எம்.பியாக உள்ளார். அப்போது அங்கிருந்த மக்கள், உங்கள் மகன் தொகுதிக்கு என்ன செய்தார் என கேள்வி எழுப்பி கைகலப்பிலும் ஈடுபட்டனர். இதில், அமைச்சரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

News April 24, 2024

ஓவர்திங்கிங் உடம்புக்கு ஆகாதுங்கோ..!

image

நேரம் அதிகமாக இருந்தாலோ, வேலை எதுவும் செய்யாமல் இருந்தாலோ மனம் அதீத யோசனை செய்யும். எனவே, சுவாரஸ்யமான வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொள்ளும்போது, மனம் அதில் மூழ்கிவிடும், சிந்தனைகள் குறையும். கடந்த காலத்தைப் பற்றி யோசிக்காதீர்கள். நாளை என்ன ஆகுமோ என்று எதிர்காலத்திற்குள் செல்லாதீர்கள். நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள். இந்தப் பிரச்னையை எல்லை மீறி அனுபவிப்பவர்கள், மனநல ஆலோசகரின் உதவியை நாடலாம்.

News April 24, 2024

பாஜக வலையில் இடதுசாரிகள் விழுந்திருக்க கூடாது

image

கேரளாவில் சசி தரூருக்கு எதிராக வேட்பாளரை களமிறக்கி பாஜகவின் வலையில் இடதுசாரிகள் விழுந்திருக்க கூடாது என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இரு மதசார்பற்ற கட்சிகள் ஒருவருக்கொருவர் போட்டியிட வேண்டும், அதன்மூலம் தாங்கள் லாபம் அடையலாம் என்பதுதான் பாஜகவின் விருப்பம். எனக்கு இடதுசாரி வேட்பாளரை நன்கு தெரியும். இருப்பினும் அவர் சசி தரூருக்கு எதிராக களமிறங்கியிருக்க கூடாது என்றார்.

News April 24, 2024

குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

image

மே மாதம் குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த மாற்றம் ரிஷபம், கடகம், கன்னி ஆகிய ராசியினருக்கு குபேர யோகத்தை உண்டு பண்ணப் போகிறது. இந்த ராசியினருக்கு நீண்ட காலமான நிலுவையில் இருந்த பிரச்னைகள் தீரும். தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத சில நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

News April 24, 2024

IPL: மழையால் ஆட்டம் தடை

image

ஜெய்ப்பூரில் நடைபெற்றுவரும் ராஜஸ்தான் – மும்பை அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளது. 6 ஓவர்கள் முடிவில் RR 61 ரன்கள் குவித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஷ்வால் 31*, பட்லர் 28* ரன்களுடன் களத்தில் உள்ளனர். தற்போது மழை சற்று குறைந்துள்ளதால் விரைவில் போட்டி தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

News April 24, 2024

அலுவலகத்திற்கு வராவிட்டால் சம்பளம் கட்

image

கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்து பணி செய்யத் தொடங்கிய ஐடி ஊழியர்கள் பலர் இன்னும் அலுவலகம் திரும்ப மறுத்து வருகின்றனர். அவர்களை அலுவலகத்திற்கு வர வைக்க புதிய ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது TCS நிறுவனம். 85 சதவீத அலுவலக வருகைப் பதிவு இருந்தால் மட்டுமே இனி Variable pay கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. Variable pay என்பது சம்பளத்தில் கொடுக்கப்படும் ஒரு பகுதி ஆகும்.

News April 24, 2024

தங்கத்தின் விலை கடும் சரிவு

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று கடுமையாக சரிந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் நேற்று 2400 டாலர்களுக்கு விற்கப்பட்ட நிலையில்m இன்று ஒரே நாளில் 2332 டாலர்களாக குறைந்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் தணிந்துள்ளதே தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. சர்வதேச சந்தையின் இந்த விலை வீழ்ச்சி நாளை இந்திய சந்தைகளில் எதிரொலிக்கும்.

News April 24, 2024

குடியுரிமைக்கு மதத்தை அடிப்படையாக வைத்தது ஏன்?

image

எந்த நாடும் குடியுரிமைக்கு மதத்தை அடிப்படை தகுதியாக மாற்றவில்லை என பினராயி விஜயன் பாஜகவை விமர்சித்துள்ளார். குடியுரிமையை தீர்மானிப்பதற்கான அடிப்படை தகுதியாக மதத்தை பாஜக முன் வைக்கிறது. இதனால் மதச்சார்பற்ற விழுமியங்கள் அழிக்கப்படுகிறது. உலகில் எந்த நாடும் அகதிகளை அவர்களின் மதத்தின் அடிப்படையில் பிரிப்பதில்லை என்ற அவர், பாஜகவின் செயல்களுக்கு காங்கிரஸ் துணைப் போகிறது என்றார்.

News April 24, 2024

IPL தொடரில் இருந்து விலகினார் மார்ஷ்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி அணியின் வீரர் மிட்சல் மார்ஷ் முழுமையாக விலகிவிட்டதாக அந்த அணியின் பயிற்சியாளர் பாண்டிங் அறிவித்துள்ளார். காயம் காரணமாக ஏப்ரல் 7ஆம் தேதி சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு திரும்பினார் மார்ஷ். ஆனால், அவருடைய தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் முன்னேற்றம் இல்லாததால் அவர் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகியிருக்கிறார்.

News April 24, 2024

சொமேட்டோ பயன்பாட்டுக் கட்டணம் உயர்வு

image

உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ பயன்பாட்டுக் கட்டணத்தை ₹5 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் ₹3 ஆக இருந்த பயன்பாட்டுக் கட்டணத்தை ₹1 உயர்த்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ₹1 உயர்த்தியுள்ளது. நாளொன்றுக்கு 20 லட்சம் வீதம் ஆர்டர்கள் விநியோகம் செய்யும் நிலையில், இதன் மூலம் அதன் லாபம் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்த கட்டண உயர்வு, ஏப்ரல் 5 முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!