News April 24, 2024

என்று தணியும் இந்த தனியார் பள்ளிகள் மோகம்?

image

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும், தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களிடம் குறைந்தபாடில்லை. இதனை நிரூபிக்கும் வகையில், நேற்று முன்தினம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் LKG மாணவர் சேர்க்கைக்காக இரவு முழுவதும் கொசுக்கடிக்கு மத்தியில், சாலையில், நீண்ட வரிசையில் பெற்றோர்கள் காத்திருந்து, காலையில் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

News April 24, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து
▶குறள் எண்: 10
▶குறள்: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
▶பொருள்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

News April 24, 2024

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க போவதில்லை

image

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க போவதில்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் நரைன், மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஓய்வு முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை. இப்போது அந்த கதவுகள் மூடப்பட்டு விட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆதரவளிப்பேன்” என்றார்.

News April 24, 2024

சிஏஏ சட்டம் ரத்துச் செய்யப்படாது

image

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது. எனவே சிஏஏ சட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பில்லையென உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படுமென முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமித்ஷா, 2014,2019ஆம் ஆண்டு தேர்தல்களை போலவே, காங்கிரஸுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

சித்ரா பெளர்ணமியின் சிறப்புகள் அறிவோமா?

image

பெளர்ணமி என்றால் முழுமை என்று பொருள். தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில், வரும் பௌர்ணமி மிகவும் நல்லது. இந்த நாளில், ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவப்பெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வணங்குவதால் உடலும் உள்ளமும் நலம் பெறும். இன்றைய தினம் சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும்.

News April 24, 2024

காவிக்கு மாற்றியதில் என்ன தவறு?

image

காவி என்பது தியாகத்தின் வண்ணம். எனவே காவிக்கு மாற்றியதில் எந்த தவறுமில்லையென தமிழிசை தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் இலச்சினை காவியாக மாற்றியதற்கு, இந்தியாவை காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு தமிழிசை தனது X பக்கத்தில், “எப்போது உங்கள் குடும்ப தொலைக்காட்சியான சன் டிவி என்ற ஆங்கிலப் பெயரைத் தமிழாக்கம் செய்யப் போகிறீர்” என வினவியுள்ளார்.

News April 24, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*மோடியின் சர்ச்சை பேச்சுத் தொடர்பாக கருத்து தெரிவிக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. *லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் டீசர் வெளியானது. *கேரளாவில் சசி தரூருக்கு எதிராக வேட்பாளரை களமிறக்கி பாஜகவின் வலையில் இடதுசாரிகள் விழுந்திருக்க கூடாது என நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து *ஐபிஎல்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

News April 24, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஏப்ரல் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 24, 2024

BREAKING: ராஜஸ்தான் அணி அபார வெற்றி

image

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 179/9 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 180 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 18.4 ஓவரில் 183/1 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் (*104) சதம் விளாசி வெற்றிக்கு உதவினார்.

News April 24, 2024

தலைமுடி உதிர்வை தடுக்கும் ஹெர்பல் ஆயில்!

image

ஐந்து டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் ஊற்றி லேசாகச் சூடு பண்ணுங்கள். கற்றாழை ஜெல்லை அதில் சேர்த்து சூடானதும் 2 நிமிடங்களுக்கு பின் அடுப்பை அணையுங்கள். பின்னர் இக்கலவையை வடிக்கட்டி அப்படியே குளிர விடுங்கள். அதனுடன் வைட்டமின் – இ எண்ணெய் கேப்சூல் ஒன்றை அதில் சேருங்கள். இந்த ஹெர்பல் ஆயிலை வாரத்தில் 2 நாட்கள் தலையில் தடவி, பின்னர் அலசலாம். தலைமுடியில் மாற்றம் தெரிய 2 மாதங்கள் ஆகும்.

error: Content is protected !!