India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 242 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் தனித்து 93 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. என்டிஏ கூட்டணி 280க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணியாக 220க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது. ஆர்எஸ்பி, கேஇசி ஆகியவை தலா 1 தொகுதியிலும், முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. வாக்கு முன்னிலை நிலவரத்தை வைத்து பார்க்கும் போது பாஜக 2 தொகுதிகளில் வெல்வது உறுதி போல் தெரிகிறது. அப்படி வென்றால், கேரளாவில் முதல்முறையாக 2 தொகுதிகளில் வென்று பாஜக காலூன்றும்.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 58,905 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் 28,902 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், தமாகா வேட்பாளர் வேணு கோபால் 12,740 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக 81,178 வாக்குகள் பெற்று, தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசம் உள்ள தொகுதியாக தஞ்சாவூர் மாறியுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. தேமுதிக 36, 190, பாஜக 25,736, நாதக 22,947 வாக்குகளும் பெற்றுள்ளன.
கிருஷ்ணகிரி தொகுதியில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 36,905 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 26,902 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் நரசிம்மன் 16,740 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். நாதக வேட்பாளரும், வீரப்பன் மகளுமான வித்யா ராணி 5,282 வாக்குகள் பெற்றுள்ளார்.
கரூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 24,619 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் தங்கவேல் 21,709 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 4,879 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 3,738 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மஜ்லீஸ் இ கட்சித் தலைவர் ஒவைசி ஹைதராபாத் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
இந்தியா கூட்டணி 230 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிப்பதால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்திருக்கின்றன. 11 மணி நிலவரப்படி நிஃப்டி 1,000 (4.5%) புள்ளிகளை இழந்து 22,185.40 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் 3,000 புள்ளிகளை இழந்து 73,198.37 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.
கேரளாவில் வயநாடு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி முன்னிலை வகித்து வருகிறார். அங்கு அவரை எதிர்த்து களம் கண்ட சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜா தொடக்கம் முதலை கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி, ராகுல் 2,08,904 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஒடிஷாவில் பாஜக முதல் முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ஒடிஷா மாநிலத்தை காங்கிரசும், பிஜு ஜனதா தளமும் அதிக முறை மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. இந்நிலையில், முதல் முறையாக அங்கு பாஜகவின் ஆட்சி உதயமாகிறது. மண்ணின் மைந்தன் அல்லாதோர் ஒடிஷாவை ஆளலாமா என தமிழரான வி.கே.பாண்டியனை குறிவைத்து மோடியும், அமித் ஷாவும் பிரசார களமாடியது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.