India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குழந்தை பராமரிப்புக்கு பெண்களுக்கு 180 நாள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த பெண் அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண்ணுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது எப்படி அரசியலமைப்பில் கட்டாயமோ, அதேபோல் விடுப்பும் கட்டாயம், இல்லையேல் அவர்கள் பணியிலிருந்து வேறு வழியின்றி விலகும் சூழ்நிலை ஏற்படும் என்று தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தான் வழக்கறிஞராக பணியாற்றிய நேரத்தில் முதல் சம்பளமாக ரூ.60 பெற்றதாகத் தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் பார் கவுன்சில்களில் உறுப்பினராவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த அவர் இதனைக் குறிப்பிட்டார். 1986ஆம் ஆண்டு ஹார்வர்டில் இருந்து திரும்பிய சந்திரசூட், மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது பயிற்சி வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.
ஆந்திராவின் குண்டூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பெம்மசனி சந்திரசேகர், தனக்கு ₹5,785 கோடி சொத்து இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்காவுக்கு கல்வி கற்க செல்லும் இந்திய மாணவர்களுக்கான பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். ₹5,785 கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறியதன்மூலம், நாட்டிலேயே பணக்கார வேட்பாளராக அவர் கருதப்படுகிறார்.
ரேசன் கார்டு அடிப்படையில் மகளிர் உரிமைத்தொகை ₹1000 வழங்கப்படுவதால், தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தும், அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. கடந்த மாதம் தேர்தலைத் காரணம் காட்டி புதிய அட்டை வழங்கப்படவில்லை. தேர்தல் முடிந்துவிட்டது, தற்போது ரேஷன் அட்டை தருமாறு பொதுமக்கள் கேட்டால் பதில் இல்லை. எப்போது வழங்கப்படும் என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
கேரளாவில் காங்., கம்யூ., பாஜக என்று மும்முனைப்போட்டி நிலவி வரும் நிலையில், புதிய அரசியல் மாற்றம் ஏற்படத் தொடங்கி இருக்கிறது. ஏப்.26ஆம் தேதி அங்கு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பத்தனம்திட்டா தொகுதி பாஜக வேட்பாளர் அனில் ஆண்டனிக்கு, அம்மாவட்டத்தில் உள்ள திருவல்லா பகுதியை சேர்ந்த Believers Eastern Church ஆதரவு அளித்துள்ளது. கேரளாவில் பாஜக வேட்பாளரை ஆதரிக்கும் முதல் தேவாலயம் இதுவே ஆகும்.
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 20ஆம் தேதி காலை வரை பறக்கும் படைகள் மூலம் ₹1,308 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை மூலம் மட்டும் ₹84.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறிய அவர், மொத்தமாக ₹179.84 கோடி ரொக்கப்பணம், ₹1,083 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். தங்கக் குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, பக்தர்களின் கோவிந்தா!, கோவிந்தா! முழக்கங்களுக்கு இடையே ஆற்றில் எழுந்தருளி அருள் பாலித்தார். பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளியதால், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அதிகளவில் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் போட்டியில் சென்னை – லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் வெல்லும் அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். இதுவரை இரு அணிகளும் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் சம பலத்தில் உள்ளன. உள்ளூரில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் சென்னை அணி வென்றுள்ளது. சென்னை அணியின் வெற்றி இன்று தொடருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒரு நல்ல புத்தகம், நூறு நண்பர்களுக்கு சமம். நல்லொழுக்கத்தை கற்றுத் தருவதற்கும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் பல வழிகளில் புத்தகம் நமக்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது. அத்தகைய அறிவுசார் சொத்துக்கான புத்தகங்களை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. வாசிப்பை நேசிக்கும் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் குறித்து கமெண்டில் பகிரலாம்.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் நகமுரா, காருனா, நெபோம்நியாச்சி ஆகியோரில் ஒருவரே வெற்றி பெறுவர் என நார்வே செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சென் கணித்திருந்தார். ஆனால் தனது கணிப்பைத் தகர்த்த குகேஷ்க்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் ‘குகேஷ் இளம் வீரர்களில் பெரியளவில் பிரபலம் இல்லை. இதனால் அவரைப் பற்றி மதிப்பிடும் போது குழப்பமே மிஞ்சும். ஆனால் தான் மிகவும் வலிமையானவர் என்பதை நிரூபித்து விட்டார்’ என்றார்.
Sorry, no posts matched your criteria.