India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வகணபதி 1.09 லட்சம் வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 97,425 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாமக வேட்பாளர் அண்ணாதுரை 26,375 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் மனோஜ்குமார் 12,192 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
பஞ்சாப்பில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி 3 தொகுதிகளிலும், ஷிரோமணி அகாலி தளம் 2 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. சிறையில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிட்ட காலிஸ்தானி ஆதவாளர் அம்ரித்பால் உள்ளிட்ட இரு சுயேச்சை வேட்பாளர்கள் இருபெரும் கட்சிகளுக்கும் சிக்கல் அளிக்கும் வகையில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரசும், 2 தொகுதிகளில் இடதுசாரியும் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில், அங்கு முதல்முறையாக பாஜக தனது கணக்கைத் தொடங்க உள்ளது. திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி 20,000 வாக்குகளுடனும், திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 10,000 வாக்குகளுடனும் முன்னிலை வகிக்கின்றனர். இதனால் கேரளாவில் பாஜ காலூன்ற வாய்ப்புள்ளது.
மேற்குவங்கத்தின் பெகராம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிட்டார். அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மக்களவை எம்பிக்கள் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரப்படி அதிர் ரஞ்சன் செளத்ரி பின்தங்கியுள்ளார். யூசுப் பதான் 9,199 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் முன்னிலை பெற்றுள்ளார். 20 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் தற்போது 2 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 9,403 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் நந்தினி 3,411 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ராணி 754 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 89,212 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) – 46,734 வாக்குகளும்,
மரிய ஜெனிபர் (நாதக) – 7,349 வாக்குகளும் ,
பசிலியான் நசரேத் (அதிமுக) – 5,822 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் தொகுதியில் 4ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 1,46,899 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 45,757 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் பாலகணபதி 41,861 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 1,00,071 வாக்குகளுடன் முன்னிலையில் வகிக்கிறார்.
பாபு (அதிமுக) – 51,413 வாக்குகள்
ஸ்டாலின்(பாமக) – 39,168 வாக்குகள்
காளியம்மாள் (நாதக) – 25,919 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
மண்ணின் மைந்தன் அல்லாதோர் ஒடிஷாவை ஆள்வதா என தமிழரான VK.பாண்டியனை குறிவைத்து பாஜக எழுப்பிய முழக்கம், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி எங்கே போனது? என்றும், பாஜக எழுப்பிய கேள்வி, பெரும் சர்சையைக் கிளப்பியது. முதல்வர் பட்நாயக்கின் உடல்நிலை குறித்து பாஜக எழுப்பிய சந்தேகங்களும், மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 49,603 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி 32,749 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 22,326 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் சுரேஷ்குமார் 6,154 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.