India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் என்னுடைய வெற்றி பிரகாசமாக உள்ளது என்று ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களும் எனக்கு நல்ல வரவேற்பு அளித்தார்கள். இதன் மூலம் பாஜக கூட்டணியில் நான் வெற்றி பெற்று, நாடாளுமன்றம் செல்வது உறுதியாகிவிட்டது எனக் கூறிய அவர், 10 ஆண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் சேர்க்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் குரல் எழுப்பியுள்ளார். MI-க்கு எதிரான நேற்றைய போட்டியில் RR அபார வெற்றி பெற்றதையொட்டி, அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலை அவர் பாராட்டினார். மேலும், ரோஹித்துக்கு பிறகு சஞ்சு சாம்சனை அடுத்த டி20 கேப்டனாக வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதானி குழுமத்தின் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளிப்படைத் தன்மை விதிகள் – முதலீட்டு வரம்புகளை மீறியதாக SEBI கண்டறிந்துள்ளது. கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், அதானி குழும நிறுவனங்கள் விதிகளில் ஈடுபட்டதை SEBI கண்டுபிடித்ததும், இந்த ஆண்டு தொடக்கத்தில் அக்குழுமத்தின் 10 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விதி மீறல்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதும் தற்போது தெரியவந்துள்ளது.
பிரதமரின் பேச்சு யாருக்கும் எதிரானதல்ல, மக்களுக்கு ஆதரவாகவே அவர் பேசியதாக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளதையே பிரதமர் பேசுவதாக கூறிய அவர், சிறுபான்மை மக்களிடம் மோடி அரசு பாகுபாடு காட்டவில்லை என்றும் அவர்களையும் ஒருங்கிணைத்தே செயல்படுவதாகத் தெரிவித்தார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்கானப் பாதையில் பாஜக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் பெருமிதம் கூறினார்.
கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,160 குறைந்து ₹53,600க்கும், ₹145 குறைந்து ₹6,700க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹2.50 குறைந்து ₹86.50க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிந்ததால், இங்கும் விலை குறைந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு ஏப்.26இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பரப்புரை நாளையுடன் ஓய்வடைகிறது. இதில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில், ராகுல் காந்தி, ஹேமமாலினி, சசி தரூர் ஆகிய முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நாட்டை வடக்கு, தெற்கு என ராகுல் காந்தி பிளவுபடுத்துவதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. பிரசாரக் கூட்டங்களில் ராகுல் பேசியதை சுட்டிக்காட்டி, அக்கட்சி அளித்துள்ள புகாரில், நாட்டை வடக்கு மற்றும் தெற்கு என்று ராகுல் பிரித்து பேசுவதாகவும், மதம், மொழி அடிப்படையில் நாட்டை பிரிக்க சதி செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. ராகுல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 100இல் ஒருவருக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநரக பத்திரிகையில் வெளியாகிய அறிக்கையில், ஆய்வில் 1,260 பேர் கலந்து கொண்டதாகவும், அதில் 63% பேர் பெண்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், 5இல் ஒருவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட வாய்ப்பு இருப்பதும் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க பாஜக பல விதமான சூழ்ச்சிகளைச் செய்து வருவதாக மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசீனா சையத் விமர்சித்துள்ளார். பெண்கள் உயிரை விட மேலாகக் கருதும் தாலி குறித்து பிரதமர் மோடி கேலியாகப் பேசியது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறினார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியினர் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள், அவர்கள் எந்த நிலைக்கும் போவார்கள் என மோடி பேசியிருந்தார்.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே சர்க்கரை நோய் இருக்கும் நிலையில், சிறையில் அவரது சர்க்கரை அளவு 320ஆக அதிகரித்து விட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. இதையடுத்து அவருக்கு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் ஊசி தரப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.