India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் ஆணையத்தின் நடுநிலை மீது பலத்த சந்தேகம் எழுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி பலமுறை மத அடிப்படையில் பிரசாரம் செய்ததாகவும், மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறினார். இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காதது தேர்தல் ஆணைய நடுநிலை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். ஒற்றுமை, மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கு நேர் எதிராக மோடியின் பேச்சு அமைந்துள்ளதாக சாடினார். மேலும், தேர்தல் விதிகளை மீறியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராகவும் அவரது பேச்சு உள்ளதாக திருமா குற்றம் சாட்டினார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் சென்னையின் 3 தொகுதிகள், திருபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இயற்கை மனிதர்களுக்கு அளித்த கொடைகளில் இளநீரும் ஒன்று. அந்த இளநீரை வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், வயிற்று புண் குணமாகும். வாயில் இருந்து வரும் துர்நாற்றம் முற்றிலும் சரியாகும். இதேபோல், சிறுநீர் கழித்தல் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் நீங்கும். உடல் சூடு தணிந்து சீராகும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தும். மலச்சிக்கலை குணப்படுத்தி, மூலம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சரணடைய விலக்கு கோரிய ராஜேஷ்தாஸ் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ராஜேஷ்தாஸூக்கு விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அமர்வு நீதிமன்றம் பிப்ரவரி மாதம் உறுதி செய்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அவர் உடனே கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முஸ்லிம் பெண்களுக்கு அதிக குழந்தைகள் இருப்பதாகவும், இந்துக்களின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு அளிக்கப் போவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பாகவும் பிரதமர் மோடி தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து Fact check செய்து இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், அரசின் புள்ளி விவரங்கள், முஸ்லிம் மதத்தில் குழந்தை பெற்றெடுப்பு விகிதம் குறைந்திருப்பதாக கூறுகிறதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்கள் குழந்தை பெற்றெடுப்பு விகிதம் சராசரியாக 1998-99இல் 3.59%, 2005-06இல் 3.4%, 2015-16இல் 2.62%, 2019-21இல் 2.36% ஆக இருப்பதாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2019-21இல் இந்துப் பெண்கள் குழந்தை பெற்றெடுப்பு விகிதம் 1.94%ஆக இருப்பதாகவும் கூறுகிறது. அதாவது முஸ்லிம், இந்துப் பெண்கள் குழந்தை பெற்றெடுப்பு வித்தியாசம் 0.81%ல் இருந்து 0.42%ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது.
2006இல் பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அனைத்துப் பிரிவினருக்கும் சம முன்னுரிமை என்பதில் தாம் தெளிவாக இருப்பதாகவும், எஸ்சி/எஸ்டி பிரிவினர், சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலனைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும், குறிப்பாக முஸ்லிம்கள் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறியிருந்தார் என்று இந்து நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சமூகத்தில் பின்தங்கிய அனைத்துத் தரப்பினரையும் மனதில் வைத்து, மன்மோகன் இவ்வாறு தெரிவித்ததாகவும், ஆனால் முஸ்லிம் குறித்தப் பேச்சை மட்டும் எடுத்துக் கொண்டு, 2024 காங்கிரஸ் தேர்தல் அறிக்கையுடன் திரித்து மோடி பேசி இருப்பதாக இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் குழந்தை பெற்றெடுப்பு விகிதம் குறைந்தநிலையில், தவறான தகவல் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி, சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், *தொண்டை வலி, சளி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், ரோஸ் மில்க் கொடுக்க வேண்டாம் *உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் *ஓஆர்எஸ், இளநீர், மோர் அதிகம் குடிக்கவும். *மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.